17/02/2023
*அல்லாஹ்விற்கே அனைத்து புகழ்ச்சியும், நன்றியும்.*
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அல்லாஹ் தன் அருளைப் பொழிவானாக!
யா அல்லாஹ்! பரக்த்தான ஜுமுஆ நாளில் அருள் இறங்கும் நேரத்தில் கண்ணியமான மக்கா நகரிலிருந்து எனக்காகவும் தினந்தோறும் என் துஆ பதிவைப் படிப் போர்சார்பாகவும் கேட்கின்றேன்.
யா அல்லாஹ்! உறுதியான ஈமான்
நிரந்தரமான அருள்,
உன்னுடைய கருணைமிகுந்த பார்வை,
பயனுள்ள கல்வி ஞானம்,
முழுமையான மதிநுட்பம்,
ஒளி நிறைந்த உள்ளம்,
உன்னுடைய அழகான நல்லுதவி,
தூய்மையான பாவமன்னிப்பு,
அழகிய பொறுமை,
மகத்தான கூலி,
என்றும் உன்னை துதிக்கும் நாவு,
துன்பங்களை சகித்துக் கொள்ளும் உடல், விசாலமான வாழ்வாதரங்கள்,
நன்றி செலுத்தப்படத் தக்கமுயற்சி,
மன்னிப்பு அளிக்கப்பட்ட பாவம்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்காரியங்கள்,
ஒப்புக் கொள்ளப்பட்ட பிரார்த்தனை,
இன்பமான பிர்தவ்ஸ் எனும் சொர்க்கம்,
ஆரோக்கியமான உடல்
ஆகியவற்றை நாங்கள் உன் கருணையை முன்னிறுத்தி உன்னிடம் வேண்டுகிறோம்.
கருணையாளர்கெல்லாம் கருணையாளனே!
எங்களின் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளவாயாக!
ஆமீன்.
https://m.facebook.com/story.php?story_fbid=5898936493476985&id=100000820789235&mibextid=Nif5oz