VadakaraiArangai

VadakaraiArangai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VadakaraiArangai, Public & Government Service, Vadakarai.

02/08/2020
14/05/2019

மயிலாடுதுறையில் அப்பாவி சிறுவர்கள் மீது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்!

மயிலாடுதுறையில் சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையின் பாதுகாப்போடு குருஞான சம்பந்தர் பள்ளியில் ஆயுத பயிற்சிகளை எடுத்து வரும் RSS அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் சில சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றிபோய் இரு தரப்பிலும் கல் வீச்சு நடைப்பெற்றுள்ளது.

இரு தரப்பிலும் கல் வீச்சு ஏற்பட்டிருந்த போதும் ஒரு தரப்பினரை மட்டும் கார்னர் செய்யும் வகையில் வடகரையை சார்ந்த 6 சிறுவர்கள் மீது பொய் வழக்குகளை ஜொடித்து குறிப்பாக குற்றப்பிரிவு எண்: 307(கொலை முயற்சி வழக்கு) உள்ளிட்ட 10-15 நாட்கள் பிணையில் வர முடியாத அளவிலான 6 கடுமையான பிரிவுகளில் கீழ் இந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தவறு இருப்பின் அந்த தவறுக்கு ஏற்ற வழக்குகளில் கீழ் நடவடிக்கை எடுப்பதே நீதி ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமாக செயல்பட்ட காவல்துறையினர் இப்படி கொடூரமான குற்றப்பிரிவின் கீழ் சிறுவர்கள் என்று கூட பாராமல் இப்படி வழக்குகளை பதிந்திருப்பது என்பது அமைதியை விரும்பும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது.
மேலும் இதற்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்படுகிறதா என்ற சந்தேகமும் வழுக்கிறது.
அதனை உண்மைப்படுத்தும் விதமாகவே காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த அநீதியை நிகழ்த்தியுள்ளார்கள்.

அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்தோடு உறவாடி வரும் அமைதி பூங்காவாக திகழும் நம் மயிலாடுதுறை பகுதியில், இந்திய அரசால் பல முறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான Rss அமைப்பிற்கு அவர்கள் ஆயுத பயிற்சி எடுக்க அனுமதித்ததை கண்டித்து ஏற்கனவே மயிலாடுதுறை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள் மூலம் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த புகாரை கருத்தில் கொண்டு பயங்கரவாத பயிற்சியை தடுக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது காவல்துறை.

இந்த பிரச்சையின் முக்கியத்துவம் கருதி தவ்ஹீத் ஜமாத், தமுமுக, மஜக, பாப்புலர் ப்ரண்ட் உள்ளிட்ட சமுதாய இயக்கங்கள் மற்றும் ஊர் ஜமாத் கூட்டமைப்பினர் களமிறங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும் இவர்களுடன் மயிலாடுதுறையில் பகுதியில் இருக்கும் மதசாற்பற்ற இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் கை கோர்த்து அப்பாவி சிறுவர்களை விரைவில் விடுதலை செய்ய முயற்சி எடுப்பதோடு மட்டுமல்லாமல் கலவரத்தை தூண்டும் RSS போன்ற கலவரக்கார அமைப்புகளுக்கு அமைதி பூங்காவாக திகழும் நம் மயிலாடுதுறை மண்ணில் ஒரு போதும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்த அனுமதிக்காதவாறு வழிவகை செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் கோரிக்கை.

இந்த பதற்றமான சூழலில் நம் சமுதாய இளைஞர்கள் இந்த விசயத்தில் எந்த ஒரு உணர்ச்சிவசத்திற்கும் இடமளிக்காமல் சமுதாய இயங்கங்கள், ஊர் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலகளின் வழிக்காட்டலின் படி ஜனநாயக ரீதியில் அறிவுப்பூர்வமாக அடுத்தக்கட்ட நகர்வுகளை களத்தில் இருப்பவர்கள் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட அந்த 6 சிறுவர்கள் விரைவில் நல்லபடியாக வீடு திரும்பவும், அவர்கள் கைது செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு இறைவன் அமைதியை கொடுக்கவும் நாம் அனைவரும் துஆ செய்வோம்!!

இவண்,
வடகரை பாய்ஸ் சேவை குழு.

Address

Vadakarai
609314

Alerts

Be the first to know and let us send you an email when VadakaraiArangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share