My Udumalaipettai

My Udumalaipettai Udumalai | Udumalaipettai | Udumalpet

உடுமலையில் திமுக, அதிமுக நேருக்கு நேர் போட்டி.   | | | | |
28/03/2026

உடுமலையில் திமுக, அதிமுக நேருக்கு நேர் போட்டி.

| | | | |

உடுமலைப்பேட்டை  சட்டமன்ற தொகுதி, திமுக வேட்பாளராக  மு. ஜெயக்குமார், அதிகாரபூர்வ அறிவிப்பு.  |   |   |
28/03/2026

உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி, திமுக வேட்பாளராக மு. ஜெயக்குமார், அதிகாரபூர்வ அறிவிப்பு.

| | |

அதிமுக சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார் அதிகாரபூர்வ அற...
27/03/2026

அதிமுக சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார் அதிகாரபூர்வ அறிவிப்பு.

| | |

உடுமலை அதிமுக வேட்பாளர் C.மகேந்திரன்??பல்லடம் - உடுமலை ராதாகிருஷ்ணன்??
25/03/2026

உடுமலை அதிமுக வேட்பாளர் C.மகேந்திரன்??

பல்லடம் - உடுமலை ராதாகிருஷ்ணன்??

மடத்துக்குளத்தில் அதிமுக கூட்டணியில்,அமமுக  வேட்பாளர் C. சண்முகவேலு.
25/03/2026

மடத்துக்குளத்தில் அதிமுக கூட்டணியில்,அமமுக வேட்பாளர் C. சண்முகவேலு.

உடுமலை திமுக வேட்பாளர்  குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அடிவள்ளி முரளி?அதிமுக வின் தொடர் வெற்றியை தடுப்பரா?25 வருடதிற...
25/03/2026

உடுமலை திமுக வேட்பாளர்

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர்
அடிவள்ளி முரளி?

அதிமுக வின் தொடர் வெற்றியை தடுப்பரா?
25 வருடதிற்கு பின் திமுக விற்கு வெற்றியை பெற்று தருவாரா? உதிக்குமா உதய சூரியன்?

| | |

 #தேர்தல்வரலாறு | 25 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருக்கும் உடுமலை சட்டமன்றத் தொகுதி!2001-2011  மடத்துக்குளம...
25/03/2026

#தேர்தல்வரலாறு | 25 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருக்கும் உடுமலை சட்டமன்றத் தொகுதி!

2001-2011 மடத்துக்குளம் C. சண்முகவேலு
2011-2016 பொள்ளாச்சி ஜெயராமன்
2016-2026 உடுமலை ராதாகிருஷ்ணன்

| | |

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்புஅமராவதி ஆற்றை ஆதரமாக கொண்ட 6 பழைய ராஜ வாய்க்கால் (குமரலிங்கம், சர்க்...
16/11/2025

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

அமராவதி ஆற்றை ஆதரமாக கொண்ட 6 பழைய ராஜ வாய்க்கால் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர். சோழமாதேவி, கணியூர், கடத் தூர்,காரத்தொழுவு)
பாசனத் திற்கு 2-ம் போகம் சாகுப டிக்கு பயன்படும்.

அதிமுக ன் வியூகம் என்ன?விரைவில்...
15/11/2025

அதிமுக ன் வியூகம் என்ன?

விரைவில்...

இன்று (14-11-25)உடுமலை நியூ ராயல்ஸ் அரிமா சங்கம் மற்றும் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து நீரிழிவு நோயாளிகளுக்கு நேதாஜி மை...
14/11/2025

இன்று (14-11-25)உடுமலை நியூ ராயல்ஸ் அரிமா சங்கம் மற்றும் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து நீரிழிவு நோயாளிகளுக்கு நேதாஜி மைதாதானத்திற்கு முன்பு உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாம் மூலம் 100க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்பெற்றனர். தொடர்ந்து பேரணி நடைபெற்றது.
உடுமலை நகரின் முக்கிய சாலைகளில் உடுமலை நியூ ராயல்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சக்ரா மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியில் பயிற்சி பெறும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை மக்களுக்கு நீரிழிவு நோய் வராமல் பாதுகாப்பதற்கும் நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உடுமலைப்பேட்டையில் வெற்றிப் பயணத்தைத் தொடரும் அதிமுக!முட்டுக்கட்டை இடுமா திமுக?திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  #உடுமலைப்பே...
14/11/2025

உடுமலைப்பேட்டையில் வெற்றிப் பயணத்தைத் தொடரும் அதிமுக!

முட்டுக்கட்டை இடுமா திமுக?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள #உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி ஒரு விஐபி தொகுதியாகும்.

அமைச்சர்கள் எஸ்.ஜே.சாதிக் பாட்சா, ப.குழந்தைவேலு, சி.சண்முகவேலு, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரை எம்எல்ஏக்களாக தேர்வு செய்தது இந்தத் தொகுதிதான்.

இந்த தொகுதியில் உடுமலை வட்டத்தில் 26 ஊராட்சிகள், உடுமலை நகராட்சி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 29 ஊராட்சிகள், ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர் ஆகிய பேரூராட்சிகள் அடங்கியுள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், ஒரு முறை காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சையும், 4 முறை திமுகவும், 8 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிமுக கடந்த 5 தேர்தல்களாக உடுமலை தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1951 - மௌனகுருசாமி நாயுடு (காங்கிரஸ்)
1957 - எஸ்.டி.சுப்பைய கவுண்டர் (சுயேச்சை)
1962 - ஆர்.ராஜகோபால் நாயக்கர் (காங்கிரஸ்)
1967 - எஸ்.ஜே.சாதிக்பாட்சா (திமுக)
1971 - எஸ்.ஜே. சாதிக்பாட்சா(திமுக)
1977 - பி.குழந்தைவேலு (அதிமுக)
1980 - பி.குழந்தைவேலு (அதிமுக)
1984 - எஸ்.திருமலைசாமி கவுண்டர் (காங்கிரஸ்)
1989 - எஸ்.ஜே. சாதிக்பாட்சா (திமுக)
1991 - கே.பி. மணிவாசகம் (அதிமுக)
1996 - டி.செல்வராஜ் (திமுக)
2001 - சி.சண்முகவேலு (அதிமுக)
2006 - சி.சண்முகவேலு (அதிமுக)
2011 - பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக)
2016 - உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக)
2021-உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக)

கடந்த 5 தேர்தல்களாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி என்பதாலும், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதாலும் இந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுகவே போட்டியிடுகிறது. உடுமலை ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிட இருக்கிறார். திமுக கூட்டணியில் கடந்த முறை கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு வழங்க பட்டது. தொடர்ந்து தோல்வி யை தழுவி வருவதால் இந்த முறை திமுகவே நேரடியாக அதிமுகவை எதிர்க்க உள்ளது. உடுமலை திமுக நகரச் செயலர் வேலுசாமி, நகர மன்ற தலைவர் மத்தின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் அடிவள்ளி முரளி, SKM மெய்யான மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத்உள்ளிட்ட பலர் வாய்ப்பு கேட்டி வருகின்றறார்.. வருகின்ற 2026 பொது தேர்தலில் உடுமலைப்பேட்டையில் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வரலாறு படைக்குமா அதிமுக, அல்லது அதிமுக ன் வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை இட்டு நீண்ட கால தாகத்தை தணிக்குமா திமுக.

2026 அரசு விடுமுறை  நாட்கள்  அறிவிப்பு    | |
11/11/2025

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

| |

Address

Udumalaippettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Udumalaipettai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share