காமராஜர் ஆதித்தனார் கழகம்

  • Home
  • India
  • Tuticorin
  • காமராஜர் ஆதித்தனார் கழகம்

காமராஜர் ஆதித்தனார் கழகம் கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர் நாம?

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் திருப்பதி நாடார் பாளையங்கோட்டை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட ...
12/04/2026

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் திருப்பதி நாடார் பாளையங்கோட்டை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தபோது...

நாடார் சமுதாயதினர்  தொடர்ந்து காவல் துறையால் கொலை கொலை முயற்சி நடை பெருவது  கண்டனதுக்கு உரியது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலீ...
08/04/2026

நாடார் சமுதாயதினர் தொடர்ந்து காவல் துறையால் கொலை கொலை முயற்சி நடை பெருவது கண்டனதுக்கு உரியது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலீஸ், SI இசக்கி ராஜாவை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
முதல் கட்டமாக அவரை தகுதி நீக்கம் செய்து, சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள செய்ய வேண்டும்; இந்த விவகாரத்தில் முழு தவறும் அவர் மீது இருப்பதாகவே தெரிய வருகிறது.

ஆங்கில ஊடகங்களில் என்ன நடந்தது என்பது மிகத் தெளிவாக பிரசுரம் ஆகி உள்ளது; அவர் இனி, பனையேறி பிழைக்கக் கூடாது என இரு கால்களிலும் சுட்டுள்ளார்.! அரசின் அதிகாரத்தை முறைகேடாக, துஸ்பிரயோகம் செய்துள்ளார்.!

ஆகவே, ரீல்ஸ் போலீஸ் எஸ்ஐ இசக்கி ராஜா என்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்; மேலும் இன்ஸ்டாகிராமில் சுற்றித் திரியும் இசக்கி ராஜா போன்ற ரீல்ஸ் போலீஸ்களை, உடனடியாக மடக்கிப்பிடித்து அவர்களுக்கு மனநலம் உயரும் வகையில், ஆலோசனைகள் வழங்க வேண்டும்.!

இவண்
ஐஜி நாடார்,
மாவட்ட செயலாளர்
காமராஜர் ஆதித்தனார் கழகம்

சமுதாய சொந்தங்களே, பெரியோர்களே, இளைஞர்கள...திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக என்ன...
08/04/2026

சமுதாய சொந்தங்களே, பெரியோர்களே, இளைஞர்கள...

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் என்னுடைய சமுதாயப்பணி, மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும். எனக்கு ஆதரவளித்த எங்களுடன் பயணிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவளித்த பல்வேறு அமைப்புகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க காமராஜர் ஆதித்தனார் கழகம்,
ஓங்குக மாவீரன் கராத்தே செல்வின் நாடார் புகழ்,
என்றும் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்கள் வழியில்.
நன்றி...

இவண்,
ஐ ஜி நாடார்,
தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர், நாசரேத் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர்,

அன்புள்ள செந்தூர் தொகுதி மக்களே, சமுதாய சொந்தங்களே..இன்று மதியம் 2மணி அளவில், காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர மாவீர...
06/04/2026

அன்புள்ள செந்தூர் தொகுதி மக்களே, சமுதாய சொந்தங்களே..

இன்று மதியம் 2மணி அளவில், காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர மாவீரன் கராத்தே செல்வின் அவர்கள் தமது சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் வேண்டி கழகம் தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற, காஆக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், நாசரேத் பேருராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான நாட்டாமை திரு. ஐஜினஸ் அந்தோணி குமார் அவர்கள் பொதுச் செயலாளர் திரு மின்னல் அந்தோணி நாடார் தலைமையில் திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு வட்டார கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மாவட்ட கழக அலுவலகமான நாசரேத்ல் இருந்து இன்று காலை 11மணி அளவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் படை சூழ நாசரேத் -மெய்ஞானபுரம்-உடன்குடி வழியாக பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து செந்தூரில் உள்ள காமராஜர் மற்றும் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கழக நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்தார்.

செந்தூர் தொகுதி மக்கள் மற்றும் கழக சொந்தங்கள் ஆதரவு அளித்து அண்ணாச்சி ஐஜினஸ் அவர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி, நன்றி 🙏

இவண்,
கழக தேர்தல் குழு.
காமராஜர் ஆதித்தனார் கழகம்.

அன்புள்ள செந்தூர் தொகுதி மக்களே, சமுதாய சொந்தங்களே..திருச்செந்தூர் தொகுதி  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பனை தொழில் இல...
06/04/2026

அன்புள்ள செந்தூர் தொகுதி மக்களே, சமுதாய சொந்தங்களே..

திருச்செந்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பனை தொழில் இல்லாத காலத்தில் தொழிலாளர் ஊக்கத்தொகை, செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து நிறைவேற்ற , நாசரேத் மற்றும் கிராம இளைஞர்கள் வேலை பெரும் வகையில் மூடி கிடக்கும் நூற்பு ஆலை இடத்தில் மாற்று தொழிற்சாலைதொடங்க மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அரசு மாவட்ட துணை மருத்துவமனை, (நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைத்து கொடுத்துள்ள னர்) அமைத்து தர சட்டமன்றத்தில் மக்கள் குரல் ஒலிக்க வேண்டி..

நாளை(6.4.26) காலை 11 மணி அளவில், காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர மாவீரன் கராத்தே செல்வின் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற, கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், நாசரேத் பேருராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான நாட்டாமை திரு. ஐஜினஸ் அந்தோணி குமார் அவர்கள் திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

மாவட்ட கழக அலுவலகமான நாசரேத்ல் இருந்து நாளை காலை 9மணி அளவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் படை சூழ நாசரேத் -மெய்ஞானபுரம்-உடன்குடி -மணப்பாடு வழியாக கழக பொதுச்செயலாளர் திரு. மின்னல் அந்தோணி நாடார் தலைமையில் செந்தூர் சென்று காலை 11 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

செந்தூர் தொகுதி மக்கள் மற்றும் கழக சொந்தங்கள் ஆதரவு அளித்து வெற்றி பெர செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி, நன்றி 🙏

இவண்,
கழக தேர்தல் குழு.
காமராஜர் ஆதித்தனார் கழகம்.

கழக நண்பர்களே, சமுதாய சொந்தங்களே..வரும் சட்டசபை தேர்தலில், காமராஜர் ஆதித்தனார் கழகம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ...
01/04/2026

கழக நண்பர்களே, சமுதாய சொந்தங்களே..

வரும் சட்டசபை தேர்தலில், காமராஜர் ஆதித்தனார் கழகம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து,
அதன் உத்தேச வேட்பாளர் பட்டியல் பின் வருமாறு

1.திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னல் அந்தோணி நாடார் (கழக பொதுச் செயலாளர்)

2.ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஐஐினஸ் நாடார் ( தூத்துக்குடி மாவட்ட செயலாளர்)

3.நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் ஐ. தாமஸ் நாடார்,

4.பாளையஙகோட்டை சட்ட மன்ற தொகுதியில்
திருப்பதி நாடார் ( திருநேல்வேலி மாவட்ட செயலாளர்)

5.தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் டாக்டர். கபா ராஜா நாடார் ( தூத்துக்குடி மாநகர செயலாளர்)

6.ராதாபுரம் சட்ட மன்ற தொகுதியில்
ஸ்ரீ ராம் நாடார், மாவட்ட மாணவரணி செயலாளர்

அரசியல் களம் காண்கின்றனர்

இவண்,
கழக தலைமை தேர்தல் குழு,
காமராஜர் ஆதித்தனார் கழகம்.

26/03/2026

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவன தலைவர் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 29 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி நாடார் அவர்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஒருங்கிணைபில் திரு.ஐ ஜி நாடார்,
நெல்லை மாவட்ட செயலாளர் திரு.திருப்பதி நாடார் முன்னிலையில்
நெல்லையில் உள்ள மாவீரன் கராத்தே செல் நாடார் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

இதில் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகளான மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீ ராம் நாடார்,
மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் ராஜ்குமார், தூத்துக்குடி மாந கரச் செயலாளர் டாக்டர்.கபா ராஜா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் தாமஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துணைத் தலைவர் அட்ரின், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மகேஷ், உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசகன், துணைச் செயலாளர் வள்ளமுத்து, ஆழ்வை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர் ஆபிரகாம், நாசரேத் நகர மாணவரணி செயலாளர் கேபா,
ஸ்ரீ வைகுண்டம் ஒன்றிய செயலாளர் அகஸ்டின். நாசரேத் நகர தொழிற்சங்க துணைத் தலைவர் ரஞ்சித் மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாசரேத்தில் உள்ள மாவட்ட கட்சி தலைமையகத்தில் வைத்து செல்வின் நாடார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்
25/03/2026

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவன தலைவர் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 64வது பிறந்தநாள அன்று நடந்த நிர்வா...
19/03/2026

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவன தலைவர் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 64வது பிறந்தநாள அன்று நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் தூத்துக்குடி வாழ் நாசரேத் சந்தி திரு.கபா ராஜா அவர்கள் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், நாசரேத் பேருராட்சி கவுன்சிலருமான திரு. ஐஜி நாடார் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

இதை தொடர்ந்து திரு. கபா ராஜா அவர்களை தூத்துக்குடி மாநகர செயலாளராக நியமித்தார்..

இவருக்கு தூத்துக்குடி மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. ராம் நாடார் கட்சி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் 💐

காமராஜர் ஆதித்தனார் கழக தூத்துக்குடி மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. ராம் நாடார் அவர்களுக்கு கழகத்தின் சார்பாக பிறந்தநாள் ...
14/02/2026

காமராஜர் ஆதித்தனார் கழக தூத்துக்குடி மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. ராம் நாடார் அவர்களுக்கு கழகத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

Address

Tuticorin
628001

Website

Alerts

Be the first to know and let us send you an email when காமராஜர் ஆதித்தனார் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share