ஜெகன் பெரியசாமி

ஜெகன் பெரியசாமி மாநகர மேயர் , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூர் சாலையில் இருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில்...
03/09/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூர் சாலையில் இருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூர் வாரும் பணிகள் ஆரம்பமாக இருப்பதால் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரு.பச்சிராஜன் அவர்கள், திரு.ராஜதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து நெரிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்...
02/09/2026

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து நெரிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்மையான தூத்துக்குடிக்காக குப்பைகளை முறையாகப் பிரித்து சேகரிப்போம் என்ற தலைப்புகளில் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால் நகர் பூங்காவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளை துவக்கி வைத்தேன். இதில் தற்போது பக்கிள் ஓடையில் பெருவாரியான பிளாஸ்டிக் கழிவுகள் வருவது குறைக்கப்பட்டுள்ளதுடன் வரும் காலங்களில் முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் மாணவர்களிடம் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் பயன்படுத்தாமல் இருக்கும் விதமாகவும் இந்த போட்டிகளானது நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரு.கனகராஜ் அவர்கள், திரு.சந்திர போஸ் அவர்கள், திரு.ஜான் சீனிவாசன் அவர்கள், திரு.பொன்னப்பன் அவர்கள், திரு.கந்தசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி பூங்காவில் மக்களின் கோரிக்கையின்படி தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதைத் தொடர...
02/09/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி பூங்காவில் மக்களின் கோரிக்கையின்படி தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து அதனை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களோடு உரையாடினேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் திரு.காசி விஸ்வநாதன் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சி பொது மையவாடியானது கடந்த ஆட்சி காலத்தில் 2022ம் ஆண்டு சீரமைத்து சுற்று சுவர்கள் அனைத்தும் கட்டப்ப...
02/09/2026

தூத்துக்குடி மாநகராட்சி பொது மையவாடியானது கடந்த ஆட்சி காலத்தில் 2022ம் ஆண்டு சீரமைத்து சுற்று சுவர்கள் அனைத்தும் கட்டப்பட்டு உயர் கோபுர மின் விளக்குகளும் சாலைகளும் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சீர்பமைக்கப்பட்டு உள்ளே செல்லும் 11 வழித்தடங்களின் இருபுறமும் மரங்கள் நடப்பட உள்ளது. இந்தப் பணிகளானது ஆரம்பமாகி இருப்பதால் அதனை பார்த்துயிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செ...
01/09/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், மாநில மீனவரணி துணை செயலாளர் திரு.புளோரன்ஸ் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ் அவர்கள், மாநகர மீனவரணி அமைப்பாளர் திரு.டேனி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் கடற்கரை பூங்கா அருகிலுள்ள இடத்தில் நடைபெற்று வரும் நீச்சல் குளத்திற்கான பண...
01/09/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் கடற்கரை பூங்கா அருகிலுள்ள இடத்தில் நடைபெற்று வரும் நீச்சல் குளத்திற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், மாநகர மீனவரணி அமைப்பாளர் திரு.டேனி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்...
01/09/2026

கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்களை மறுசீரமைத்து, தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடும் வகையில்,
தலைமைக் கழக பிரதிநிதியாக என்னை இராமாநாதபுரம் மாவட்டத்திற்கு நியமித்த கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் சண்முகபுரம் கபாடி கிளப் தாமோதர நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞர் அணி நண...
29/08/2026

தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் சண்முகபுரம் கபாடி கிளப் தாமோதர நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞர் அணி நண்பர் குழு இணைந்து நடத்திய திரு.முருகேசன் அவர்களின் நினைவுக் கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டியினை துவக்கி வைத்தேன். உடன் மாவட்ட கூடை பந்தாட்ட கழக பொருளாளர் திரு.பாலமுருகன் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் திரு.கோட்டு ராஜா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ் குமார் அவர்கள், கழக நிர்வாகிகள் திரு.ஏசுவுடியான் அவர்கள், கபடி திரு.கந்தன் அவர்கள், தொமுச மாவட்ட தலைவர் திரு.பேச்சிமுத்து அவர்கள், செயற்குழு உறுப்பினர் திரு.சி.எஸ்.ராஜா அவர்கள், போட்டி ஏற்பட்டாளர்கள் திரு.லெனின் அவர்கள், திரு.கார்மேகம் அவர்கள், திரு.ரகு அவர்கள், திரு.முத்து அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பாப்பாத்தி அவர்கள், திரு.முத்துவேல் அவர்கள் மற்றும் திரு.பாலசங்கர் அவர்கள், திரு.மாரியப்பன் அவர்கள் திரு.ஹிட்லர் ராஜ் அவர்கள், திரு.ரகு அவர்கள், வட்ட கழக நிர்வாகி திரு.பால ரூபன் அவர்கள் மற்றும் கோவில் இளைஞர் அணியினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட...
29/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியிலுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியினனயும் அங்கு வருகின்ற மற...
29/08/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியிலுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியினனயும் அங்கு வருகின்ற மற்றும் வெளியேறுகின்ற நீரின் அளவினையும் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் செல்லும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், மாநகர சுற்று சூழல் அணி அமைப்பாளர் திரு.பொன்ராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Address

Polpettai
Tuticorin
628002

Telephone

+918754299969

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெகன் பெரியசாமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share