11/09/2022
ஊராட்சி மன்ற *தலைவர்கள் கவனத்திற்கு* நிறைய ஊராட்சியில் BDO ஊராட்சி செயலாளர் மூலம் நிதியை மாற்ற மூளைச்சலவு செய்கின்றனர்.
இது உங்கள் ஊராட்சி நிதி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தயவு செய்து எக்காரணம் கொண்டும் தீர்மானம் போட்டும் நிதியை வேறு கணக்கிற்கு *மாற்றியும் தராதீர்கள்* நிதி திரும்ப வராது உஷார்🔥...
*" பஞ்சாயத்துகளின் நிதிகளை மாநில அரசிற்கு மாற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் "*
*தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்*
===================
*இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (09-09-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-*
பஞ்சாயத்து நிதி கணக்குகள் மூன்று , நான்கு , ஐந்து மற்றும் ஆறு ஆகியவற்றில் உள்ள செலவிடப்படாத நிதி , சேமிப்பு நிதி மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் பஞ்சாயத்துகள் மாநில அரசுக்கு உடனே அனுப்பிட வேண்டும் என்ற உத்திரவு இடப்பட்டுள்ளதாக செய்திகள் வருவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது .
மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுப்பப்பட்ட நிதிகளை சரியான , வெளிப்படையான , உண்மையான விளக்கமில்லாமல் பஞ்சாயத்துகளிடமிருந்து திரும்ப பெறுவது , அவற்றின் வளர்ச்சியில் அரசுக்கான அக்கரையின்மையை காட்டுகிறது .
இந்த நிதி எதற்காக திரும்ப பெறப்படுகிறது , இந்த நிதியை என்ன போகிறார்கள் என்ற எந்த விளக்கமும் தரப்படாமல் நிதியை திரும்ப பெறுவது பஞ்சாயத்துகளின் உரிமையில் தலையிடுவதாகும் . ' '
உள்ளாட்சியில் நல்லாட்சி " என்று சொல்லி வெற்றி பெற்ற திமுக , ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி நிதியை மாநில அரசிற்கு மாற்றும் மர்மம் என்ன ? என்று உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் இருந்து கேள்வி எழுந்துள்ளது . அடிப்படை தேவைகளை மக்களுக்கு தங்கு தடையின்றி செய்திட ஊராட்சிகளுக்கு மத்திய , மாநில அரசுகள் , நிதிகளை முறையாக வழங்க வேண்டும் என்றும் , ஊராட்சி மன்ற தலைவர்கள் பணிகள் தேர்வு செய்து , அவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பும் பணிகளுக்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை உள்ளாட்சி மன்ற தலைவர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்னர் .
தமிழக அரசு பஞ்சாயத்துக்கள் நிதிகளை மாநில அரசிற்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் . அதோடு அவர்களின் நிதியை பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து செலவு செய்திட உரிய உத்திரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் , அதோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாவது கணக்கில் இருக்கும் நிதி 14வது நிதிக்குழுவின் நிதியில் முதல் வருடம் இந்த கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டது. அதை நாம் தான் உபயோக படுத்த வேண்டும். மற்ற கணக்கில் உள்ளதை வேண்டுமானால் நாம் அனுப்பலாம் (உங்கள் முடிவின் படி)