பாரத் மக்கள் கட்சி

பாரத் மக்கள் கட்சி பாரத மக்கள் நலம் காத்திட பாரத் மக்கள?

07/06/2014
25/02/2014

அரசுத்துரையை பயன்படுத்துவா்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு. அரசு சம்பளம் வழங்க சட்டம் கொண்டு வரவேண்டும்

அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பவர்களுக்கே ஆசிரியா் வேலை வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் அரசு பள்ளி நிர்வாகம் சீர்படும் இதன் விளைவாக கல்வி வியாபாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்

அண்ணாதுரை - பாரத் மக்கள் கட்சி

கச்சதீவை மீட்க பாரத் மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்
25/02/2014

கச்சதீவை மீட்க பாரத் மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்

ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசின் முடிவு சரியானது இல்லை - கருணாநிதி பேச்சு.கரெக்ட். தமிழக அரசு முதலில் கலா மாஸ்டரை கலந்த...
21/02/2014

ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசின் முடிவு சரியானது இல்லை - கருணாநிதி பேச்சு.

கரெக்ட். தமிழக அரசு முதலில் கலா மாஸ்டரை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தை அவர் கிழி கிழி என்று கிழித்திருப்பார். அவர் ஆலோசனையை பெற்ற பின் இதனால் ஏதாவது சட்ட சிக்கல் வருமா என்று பிரசாந்த், ரம்பா, நமீதா என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிடம் ஆலோசித்திருக்க வேண்டும். மூவருமே மானாட மயிலாட ஜட்ஜுகலாக இருப்பதால் இதில் உள்ள நுணுக்கங்களை சொல்லியிருப்பார்கள்.

பிறகு தமிழக அரசு ராசாத்தி அம்மாளிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். அவர் பேரறிவாளனின் தாயாரிடம் இந்த விஷயத்தில் சாதகமாக பேச அமவுண்ட் ஒன்றை கறந்திருப்பார். பிறகு அரசு உதயநிதி ஸ்டாலினிடம் இவர்களை விடுதலை செய்வதால் ஏதாவது பிரச்சனை வருமா என்று கேட்டிருக்க வேண்டும். அவர் நயன்தாராவிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை கூறியிருப்பார்.அந்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு மசோதாவை தயாரித்து அதை பல வருடங்களாக ஜட்ஜாக இருக்கும் லியோனியின் பார்வைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவர் அந்த மசோதாவில் உள்ள தவறுகளை திருத்தி அரசுக்கு கொடுத்திருப்பார்.

பிறகு அதை மந்திரிசபையை கூட்டி ஆலோசித்து அதன் பிறகு குஷ்புவின் ஒப்புதலோடு சட்டசபையில் அறிவித்திருக்க வேண்டும். இது தான் முந்தைய அரசின் நடைமுறை. இதில் எதையுமே பின்பற்றாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தமிழக அரசு செயல் பட்டிருக்கிறது.

21/02/2014

ஒரே மொழி ,ஒரே இன மக்களுக்குள் பிரிவினையை தூண்டி விட்டு ஓட்டு வேட்டை நடத்த காங்கிரஸ் சதி செய்து விட்டது ....

#தெலுங்கானா ....

21/02/2014

தீவிரவாத விஷயத்தில் தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது - பிரதமர்

#புலிய பாரத்து பூனை அறிவுரை சொல்லுச்சாம்...

21/02/2014

உலகத் தாய்மொழி தினம்...

#இன்று....தமிழ் வாழ்க ....

21/02/2014

காடுகளை அழித்தல், நதிகளை மாசடையச் செய்தல் என மனிதன் செய்த பல தவறுகளால், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுதல் ஏற்பட்டு, மனித குலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானதும், மனிதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் என்றால் அது தண்ணீர் பிரச்னையாகும்.

மனித வாழ்க்கைக்கு நீர் ஆதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். எண்ணெயைப் போல அதற்கு எந்த மாற்றும் கிடையாது. மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீரின் ஆதாரம் தற்போது மிகவும் சுருங்கி வருகிறது. தண்ணீர் ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது. உலக பொருளாதாரமே உயர்ந்தாலும், மனிதனின் தாகம் தணிய தண்ணீரைத்தான் நாட வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பணக்காரரோ, ஏழையோ, தென் பகுதியில் வசிப்பவரோ, வட பகுதியில் வசிப்பவரோ யாரும் தப்பிக்க இயலாது. பல நாடுகளில் உள்ள தண்ணீர் ஆதாரங்கள் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. குறிப்பாக ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆற்று மணலை களவாட, ஆறுகளை வற்றவிட்ட நம் மக்கள், நாளை நமக்கே தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது என்பதை இன்னமும் உணரவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை என்பது வெறும் குடிநீர் அல்லது பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது மட்டும் அல்லாமல், மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அதாவது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை ஏழை நாடுகளின் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அங்கு மலேரியா, காசநோய் போன்ற நோய்கள் அதிகமாகப் பரவுவதும், உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, உணவுப் பஞ்சம் ஏற்படுவதும் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகளே.

சரி இதற்கெல்லாம் தீர்வு காண நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் நிச்சயம் இந்த பிரச்னையில் இருந்து ஒரு சில ஆண்டுகளாவது தப்பித்துக் கொள்ளலாம்.
தொழிற்சாலைகளை நடத்துவோர், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே நதியில் கொட்டாமல், அதனை சுத்திகரித்து வெளியேற்றுவதும், மரங்களை வெட்டாமல், இருக்கும் இடத்தில் மரங்களை வளர்ப்பதும் மனிதனின் கடமையாகிறது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதும், தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதும், நீர் ஆதாரங்களை மேலும் சுருக்காமல் பெருக்குவதும் மனிதன் மனிதனுக்காக, அவனது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமையாக இருக்கும்.

இன்றே அதற்கான பணிகளை துவக்குவோம்…

15/02/2014

காங்கிரஸ் ஆதரவோட ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறத பார்த்த போதே தெரிந்தது வெளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டின மாதிரி இருக்குனு ....

#இப்பொழுது அது உண்மையானது போல ....ஹ...ஹ...ஹ

(பட்டு குஞ்சம் அவுந்து போச்சு வெளக்குமாறு பிரிஞ்சு போச்சு ....)

15/02/2014

கேள்வி: மோடி பிரதமராயிட்டா என்ன பண்ணுவீங்க?

பதில்: இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிச்சுற வேண்டியதுதான் ----- மங்குனி புத்திரன்

#எப்படி பல குடும்பஙகளிள் இருந்து பெண்ணை பிரிக்கும் காதல் நாடகம் மாதிரியா??????

15/02/2014

நேற்று மெரினா வந்த இளைஞர்கள் இளைஞிகளிடம் ஆதலால் காதல் செய்யுங்கள் என்று துண்டு சீட்டுகளை கொடுத்த திக வினர் -செய்தி

#ஆமா உங்கள் வீட்டு பெண்களை அங்கிட்டு எவனோடாவது காதல் செய்ய அனுப்பி விட்டு தானே வந்தீர்கள் ...???

Address

பொள்ளாச்சி ரோடு
Tirupur
641604

Telephone

9944768787

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரத் மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பாரத் மக்கள் கட்சி:

Share