KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Tirupur
  • KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம்

KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்துறை தெற்கு ஒன்றியம், ஈரோடு தெற்கு மாவட்டம், கொங்குநாடு.

என் சாதி.!என் அடையாளம்..!என் பெருமை...!
14/11/2023

என் சாதி.!
என் அடையாளம்..!
என் பெருமை...!







அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்...
29/06/2023

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா அழைப்பிதழ்.

தேதி: 30.06.2023, நேரம்: மாலை 5.00 மணி.
இடம்: தீரன் சின்னமலை கவுண்டர் திடல், ஆர்த்தி திருமண மண்டபம் எதிரில், விஜயமங்கலம்.

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்...
25/06/2023

அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு கொங்குநாடு கலைக்குழு நடத்தும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா அழைப்பிதழ்.

தேதி: 30.06.2023, நேரம்: மாலை 5.00 மணி.
இடம்: தீரன் சின்னமலை கவுண்டர் திடல், ஆர்த்தி திருமண மண்டபம் எதிரில், விஜயமங்கலம்.

02/07/2021
E.R.Eswaran (KMDK) General Secretary: முதல் கொரோனா அலையில் ஆர்வம் காட்டியது போல மருத்துவர்களும், செவிலியர்களும் இரண்டாவத...
26/04/2021

E.R.Eswaran (KMDK) General Secretary: முதல் கொரோனா அலையில் ஆர்வம் காட்டியது போல மருத்துவர்களும், செவிலியர்களும் இரண்டாவது அலையில் காட்டவில்லை.

முதல் கொரோனா அலை கடந்த வருடம் பரவிய போது மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும் கடவுள்களாக போற்றப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். பலரும் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் அவர்களுக்காக நாட்டு மக்கள் அனைவரையுமே பாராட்டி கைதட்ட சொன்னார். மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ஆனால் கொரோனா முதல் பரவல் குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத்துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட எதையும் அரசாங்கங்கள் வழங்கவில்லை. அதனால் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள். தங்களுக்கும் நோய் தொற்று பரவும் என்பதை அறிந்தும், தங்கள் மூலமாக தங்கள் குடும்பங்களுக்கும் பரவும் என்பதை தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இரவு பகலாக உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள். இரண்டாவது கொரோனா பரவல் இவ்வளவு தீவிரமாக இருக்குமென்று அறியாத மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது தடுமாறி கொண்டிருக்கின்ற நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒத்துழைப்பும் முன்புபோல இல்லை என்ற செய்தியும் வேதனையளிக்கிறது. பல மருத்துவமனைகளில் குறைவான மருத்துவர்களையும், செவிலியர்களையும் வைத்துதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான ஆக்சிஜன் திட்டமிடலும் ஒத்துழைப்பின்மை காரணமாக சரிவர நடக்கவில்லை. தேவையான உயிர்காக்கும் மருந்துகளும் திட்டமிட்டு இருப்பு வைக்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஈடுபாடும், ஆர்வக்குறைவும் தான் காரணம். முதல் கொரோனா பரவலின் போது மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டிருந்த மத்திய மாநில அரசுகள் இப்போது மவுனம் காப்பதும் ஏனென்று புரியவில்லை. மருத்துவர்களையும், செவிலியர்களையும் முழுவீச்சில் களமிறக்காமல் கொரோனா பரவலில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உறுதிமொழி அளித்ததை அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அரசுகளுடைய உறுதிமொழியை மருத்துவர்கள் நம்பாத நிலையில் நீங்கள் அறிவிக்கும் ஊக்கத்தொகைகளை முன்பணமாக கொடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். 24 மணிநேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் காலத்தின் தேவை. மருத்துவர்களுடைய ஆதங்கங்களையும், கள உண்மைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுகின்ற நம் கடமையை செய்திருக்கின்றோம். தவறு எங்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

ஆழ்ந்த இரங்கல்!
24/04/2021

ஆழ்ந்த இரங்கல்!

மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்கள் பிறந்த தினம் இன்று!
17/04/2021

மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்கள் பிறந்த தினம் இன்று!


E.R.Eswaran ( General Secretary, KMDK )மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம்தான் கொரோனா பரவலுக்கு காரணம்.கொரோனா தடுப்பூசி போட...
15/04/2021

E.R.Eswaran ( General Secretary, KMDK )

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம்தான் கொரோனா பரவலுக்கு காரணம்.

கொரோனா தடுப்பூசி போட கிடைத்த கால அவகாசத்தை வீணடித்திருக்க கூடாது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்த போது மத்திய, மாநில அரசுகள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததால் மிக அதிகப்படியான பாதிப்பையும், உயிரிழப்பையும் அனைவரும் சந்திக்க நேரிட்டது. அதேபோல தற்போதைய கொரோனா 2-வது அலை பரவலுக்கும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம். கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான கால அவகாசம் இருந்தும் அதை மத்திய, மாநில அரசுகள் திறம்பட பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்ததே இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க மிக முக்கிய காரணம். கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதே கொரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. கொரோனா தடுப்பு மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதில் காட்டியிருக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்தவுடன் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்த நிலையில்தான் மத்திய அரசிடம் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்தை கேட்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தையும், பாதிப்பையும் உணர்ந்திருக்கும் ஆளும் அரசுகள் கிடைத்த கால அவகாசத்தை தவறவிட்டது மக்களை மிகப்பெரிய பாதிப்புக்கான சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது. இந்திய மக்களின் மீது மத்திய அரசு போதிய கவனத்தை செலுத்தவில்லை. மாநில அரசாவது தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கவனக்குறைவால் மீண்டும் மக்கள் அனைவரும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தீவிரத்தை உணர்ந்து தகுந்த பாதுகாப்போடு மக்கள் அனைவரும் இருக்க வேண்டுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
14/04/2021

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




தமிழ்நாட்டு தளபதி அவர்களுடன் கொங்குநாட்டு தளபதி அவர்கள்!
10/04/2021

தமிழ்நாட்டு தளபதி அவர்களுடன் கொங்குநாட்டு தளபதி அவர்கள்!

வரிசை எண் 2ல் வாக்களியுங்கள்!உங்கள் சின்னம் உதயசூரியன்!!       E.R.Eswaran KKC Balu KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம் KMDK...
05/04/2021

வரிசை எண் 2ல் வாக்களியுங்கள்!

உங்கள் சின்னம் உதயசூரியன்!!









E.R.Eswaran KKC Balu
KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம்
KMDK ஈரோடு தெற்கு மாவட்டம்

அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% சதவீத இடஒதுக்கீடு!       E.R.Eswaran KKC Balu KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம் KM...
02/04/2021

அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% சதவீத இடஒதுக்கீடு!









E.R.Eswaran KKC Balu
KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம்
KMDK ஈரோடு தெற்கு மாவட்டம்

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMDK பெருந்துறை தெற்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share