DYFI வடக்கு மாநகரம் திருப்பூர்

  • Home
  • India
  • Tirupur
  • DYFI வடக்கு மாநகரம் திருப்பூர்

DYFI வடக்கு மாநகரம் திருப்பூர் எல்லோருக்கும் கல்வி!
எல்லோருக்கும் வேலை!
எல்லோருக்கும் சுகாதாரம்!

இன்குலாப் ஜிந்தாபாத்�

*வெற்றி.! வெற்றி.!! வெற்றி.!!!**போராட்டங்களின் முன்னாலே .!**யார் ஆட்டமும் செல்லாது.!!*இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொங்க...
06/08/2025

*வெற்றி.! வெற்றி.!! வெற்றி.!!!*

*போராட்டங்களின் முன்னாலே .!*
*யார் ஆட்டமும் செல்லாது.!!*

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொங்கு நகர் பகுதி கிளைகளின் சார்பில் கொங்கு நகர் பிரதான சாலைகளில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து கடந்த வாரத்தில் தட்டி வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை மாநகராட்சி வாகனங்கள் பகுதி பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத் தோழர்களின் சார்பில் சிறைபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏ கே ஜி நகர் பகுதியில் தினசரி குப்பை சுழற்சி முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் குப்பை தொட்டிகள் சாலையில் வைக்க படாது என்றும் உறுதி அளித்துள்ளனர்.

*இன்றைய போராட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள ஏகேஜி நகர் பகுதியில் மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.*

போராட்டத்தை முன்னெடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு அந்த பகுதி மக்களும், வியாபாரிகளும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.

🏳️🏳️🏳️*இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI திருப்பூர் வடக்கு மாநகர 23 வது மாநாடு இன்று திருப்பூர், அவிநாசி சாலை, தியாகி.பழ...
22/06/2025

🏳️🏳️🏳️
*இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI திருப்பூர் வடக்கு மாநகர 23 வது மாநாடு இன்று திருப்பூர், அவிநாசி சாலை, தியாகி.பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது.*

மாநாட்டின் முதல் நிகழ்வாக S.V. காலனி கிளையிலிருந்து கொடிபயணம் வந்தடைந்தது. தொடர்ந்து, தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி மாநாடு துவங்கியது.

இம்மாநாட்டிற்கு மாநகர தலைவர் தோழர். கண்ணன் உள்ளிட்ட தலைமைக்குழு தோழர்கள் தலைமை ஏற்றனர். கமிட்டி உறுப்பினர் தோழர். பிரநேஷ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் தோழர். ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர். K. பாலமுரளி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். பிரதிநிதிகள் விவாதத்திற்கான வேலை அறிக்கையை மாநகரச் செயலாளர் தோழர். விவேக் முன்மொழிந்தார். மாநகர பொருளாளர் தோழர். கிருத்திகை வாசன் வரவு செலவு அறிக்கையை முன்மொழிந்தார். SFI மாநிலத் தலைவர் தோழர். சம்சீர் அகமது, DYFI மாவட்ட பொருளாளர் தோழர். சிந்தன், மாவட்டத் துணைச் செயலாளர் தோழர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய கமிட்டி மற்றும் கமிட்டி நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்ட தலைவர் தோழர். S.அருள் நிறைவரை ஆற்றினார்.
மாநகரத் துணைச் செயலாளர் தோழர். நளின் குமார் நன்றி தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மாநகர தலைவராக தோழர். விவேக், செயலாளராக தோழர். கண்ணன், பொருளாளராக தோழர். ரமேஷ், துணைத் தலைவர்களாக தோழர்கள். கிருத்திகை வாசன், நவீன் குமார், துணை செயலாளர்களாக தோழர்கள். பிரவீன் குமார், சந்துரு மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக தோழர்கள். சரத்குமார், நளின் குமார், சுபாஷ், மனோஜ், பிரனேஷ், ராதிகா, தனசேகர், மகேஷ் குமார் உள்ளிட்டு 15 பேர் கொண்ட புதிய மாநகர கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

மேலும், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.🏳️✊🏻

_"வடக்கு மாநகரப் பகுதியில்  போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திடக்கோரி"_இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்...
20/06/2025

_"வடக்கு மாநகரப் பகுதியில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திடக்கோரி"_

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாநகர கமிட்டியின் 23வது மாநாடு 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை தோழர் சித்தாராம் யெச்சூரி நினைவு திடல்
பழனிச்சாமி நிலையம் அவிநாசி சாலை 🏳️✊🏻

*வீதிகள் தோறும் DYFI கிளை.!                                           வீடுகள் தோறும் DYFI உறுப்பினர்..!!*என்ற இலக்கை அடை...
18/06/2025

*வீதிகள் தோறும் DYFI கிளை.! வீடுகள் தோறும் DYFI உறுப்பினர்..!!*
என்ற இலக்கை அடைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் *வடக்கு மாநகர குழுவின் 23 வது மாநாடு* வரும் 22.6.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் தியாகி பழனிச்சாமி நினைவகம் அவினாசி ரோடு பகுதியில் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்✊🏻✊🏻

இவன்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாநகர குழு🏳️

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 20ஆவது மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்பு குழு நேற்றைய (13.06.2025)...
14/06/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 20ஆவது மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்பு குழு நேற்றைய (13.06.2025) தினம் அமைக்கப்பட்டது.

வரவேற்பு குழுவின் மதிப்புறு தலைவராக பி.ஆர்.கணேசன் அவர்களும்,

தலைவராக வழக்கறிஞர் வை.ஆனந்தன் அவர்களும்,

செயலாளராக விவேக்
பொருளாளராக கண்ணன்

உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக அமைப்பு தோழர்களை நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக கொண்டு வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வினை வடக்கு மாநகர தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரை சந்துரு மாநாட்டின் நோக்கங்கள் குறித்து மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செயலாளர் பாலமுரளி மற்றும் வாலிபர் சங்கத்தின் முன்னால் நிர்வாகிகள் சௌந்தர பாண்டியன், பி.ஆர்.கணேசன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர். இறுதியாக மத்திய குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் அவர்கள் நிறைவு செய்து உரையாற்றினார்.

மாநாடை வெற்றிகரமாக நடத்துவதற்கான பங்களிப்பினை மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத்திலேயே பல்வேறு கிளைகள் உறுதியளித்து உற்சாகமாக நடைபெற்று முடிந்தது.

ஏழை, எளிய மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடியதற்காக சாதி ஆதிக்க வெறியர்களால் தூக்கிலே தூக்கி மாட்டப்பட...
13/03/2025

ஏழை, எளிய மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடியதற்காக சாதி ஆதிக்க வெறியர்களால் தூக்கிலே தூக்கி மாட்டப்பட்ட *தியாகி. இடுவாய் ரத்தினசாமி* அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...

DYFI யின் மகத்தான ஊழியனாக வெண்கொடி ஏந்தி களமாடிய தியாகி. இடுவாய் ரத்தினசாமி யின் பாதையிலே இளைஞர்களின் மேம்பாட்டிற்காக, மக்கள் ஒற்றுமைக்காக, உழைக்கும் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து பயணிக்க சபதம் ஏற்போம்!!!

Address

1, Jawan Street
Tirupur
641603

Telephone

+919487668353

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI வடக்கு மாநகரம் திருப்பூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI வடக்கு மாநகரம் திருப்பூர்:

Share