திருப்பத்தூர் தொகுதி திமுக

  • Home
  • India
  • Tirupattur
  • திருப்பத்தூர் தொகுதி திமுக

திருப்பத்தூர் தொகுதி திமுக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக.

16/09/2026
திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் பேரணி.!வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்...
15/09/2026

திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் பேரணி.!

வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் முன்னிட்டு

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை முதல் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலை வரை பேரணியாக சென்று திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ேவராஜி Ex.MLA அவர்களும் திருப்பத்தூர் மு.சட்டமன்ற உறுப்பினர் ்லதம்பி Ex.MLA ஆகியோர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில்
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்,
மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார்,
மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன்,
மு.அமைச்சர் நிலோப்பர் கபில் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, வார்டு கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

பேரறிஞர் அண்ணா ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய மூன்று கொள்கைத் தீபங்களை எந்நாளும் காப்போம்!

அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்!

அண்ணா வாழ்கிறார்! வாழ்விப்பார்!

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் இன்று (12-09-2026) சனிக்கிழமை ...
12/09/2026

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து

திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில்
இன்று (12-09-2026) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
ேவராஜி Ex.MLA அவர்களும் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ்லதம்பி.Ex.MLA, அவர்களும் கலந்துகொண்டு கண்டனங்களை தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில்
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்,
மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன்,
மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார்,
மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன்,
மு.மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி,
மு.அமைச்சர் நிலோப்பர் கபில்,
மாநில தொண்டரணி து.செயலாளர் பி.எம்.முனிவேல் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, வார்டு கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தார்கள்.

முதலமைச்சர் விஜய் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர்  ்லதம்பி Ex.MLA அவர்கள் அறிக்கை! சட்டம...
11/09/2026

முதலமைச்சர் விஜய் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர்
்லதம்பி Ex.MLA அவர்கள் அறிக்கை!

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து நாளை (12-09-2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
ேவராஜி Ex.MLA அவர்கள் தலைமையில் மாபெரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடைப்பெற உள்ளது.

அதுசமயம்
இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, வார்டு கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
்லதம்பி Ex.MLA,
ஒன்றிய கழக செயலாளர்,
திருப்பத்தூர் மாவட்ட திமுக.

கழக தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில்  பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிய  ்லதம்பி நாமக்கல் கிழக்கு மாவட்டம், முல்லை நகர் , கலைஞர...
09/09/2026

கழக தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிய ்லதம்பி

நாமக்கல் கிழக்கு மாவட்டம், முல்லை நகர் , கலைஞர் அறிவாலயம், பேராசிரியர் அரங்கில் 08-09-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் கழக தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடைப்பெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை கழக தொகுதி சீரமைப்பு பிரதிநிதியுமான ்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு கழக தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட,நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Nallathambi Mla திருப்பத்தூர் தொகுதி திமுக எஸ். முரளிதரன்

திருப்பத்தூர் மாவட்­டச் செயற்குழுக் கூட்­டம் இன்று காலை 11.00 மணி­ய­ள­வில் வாணியம்பாடியிலுள்ள மாவட்டக் கழக அலுவகத்தில். ...
05/09/2026

திருப்பத்தூர் மாவட்­டச் செயற்குழுக் கூட்­டம் இன்று காலை 11.00 மணி­ய­ள­வில் வாணியம்பாடியிலுள்ள மாவட்டக் கழக அலுவகத்தில்.

திருப்பத்தூர் மாவட்ட அவைத்தலைவர்
#ஆர்_எஸ்_ஆனந்தன் தலைமையில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
அண்ணன் ேவராஜி Ex.MLA அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில்

தலைமைக் கழக பிரதிநிதிகள்
விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர்
#வே_கௌதமன் அவர்களும்,

தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் #வி_மு_விஜய_கதிரவன் அவர்களும் முன்னால் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ்லதம்பி, Ex.MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ெ_வில்வநாதன்.MLA ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு

22.08.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற தலைமை செயற்­குழு கூட்­டத்­தில் கழக நிர்­வாக சீர­மைப்பு தீர்­மா­னத்­தின் படி ஒன்­றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழ­கம் மறு சீர­மைப்பு பணி­கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலை­மைச் செயற்­குழு, பொதுக்குழு உறுப்­பி­னர்­கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியைப் பெற - அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22.08.2026 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில் முன்மொழியப்பட்ட கீழ்கண்ட தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1

“செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் – ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை; அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்”. “சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 2

கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 3

நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 4

கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 5

இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகிவரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது. அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 6

மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 7

கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

தீர்மானம்: 8

தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில், மீண்டும் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, ஒப்புதலைப் பெற்று, இறுதிப் பட்டியலைத் தலைமைக் கழகத்துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 9

எங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே கிராம ஊராட்சிகளில் குக்கிராமங்கள் வாரியாக கிழைக்கழகங்கள் அமைந்துள்ளது. தற்போது நடைபெறகூடிய உட்கட்சி தேர்தலில் கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு கிளை அடிப்படையில் கிளை அமைப்பு ஏற்படுத்தி தர தலைமை கழகத்தை மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்: 10

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காலை 9.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் திருவுருவ சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிவடைந்தவுடன் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பெரும் திரளாக கலந்து கொள்வது என்று ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Address

Tirupattur
635601

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பத்தூர் தொகுதி திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share