Thirunavukkarasar Narseyal Mandram

Thirunavukkarasar Narseyal Mandram அறம் செய விரும்பு

நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும்  விழா - 07.03.2026 (சனிக்கிழமை) இறையருளோடும்...
09/03/2026

நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா - 07.03.2026 (சனிக்கிழமை)

இறையருளோடும், சமயக்குரவர்கள் நால்வர் திருவருளோடும், விழா நெல்லை, கதீட்ரல் காலனி, "பைம்பொழில் கு.பாலசுப்பிரமணியன் நினைவு நூலகம்" அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இறை வணக்கப்பாடலுடன் விழா இனிதே தொடங்கியது.

மன்றத்தின் நிறுவனர்/தலைவர்,
நூலகத்தின் அமைப்பாளர், திரு.பா.ஹரிஹர கார்த்திகேயன், வரவேற்புரையாற்றினார்.

விழா தலைவர், பேட்டை, ம.தி.தா. இந்துக்கல்லூரியின் முதல்வர், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், அவர்கள், மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, தலைமையுரையாற்றினார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர், ம.தி.தா. இந்துக்கல்லூரி, ஓய்வு பெற்ற இயற்பியல் துறை த் தலைவர், பேராசிரியர் பா.ஆதிவராகமூர்த்தி அவர்கள், மன்றத்தின் நற்செயல்களை பாராட்டி, கல்வியின் பயனை எடுத்துரைத்து, கல்வி உதவித் தொகையினை மாணாக்கர்களுக்கு வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.

மன்றத்தின், துணைத் தலைவர் சீர்மிகு.பா.வேலாயுதம், துணைச் செயலாளர், சீர்மிகு.கைலாஷ் கட்டளை, பொருளாளர் திரு.சீ.கோபி,
மதிதா பள்ளி - தலைமையாசிரியர் திரு.மு.சோமசுந்தரம், (அறிவியல்) பட்டதாரி ஆசிரியை, திருமதி.கு.சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழா நிறைவாக, மன்றத்தின், செயலாளர், திரு.ரா. சிவக்குமார், நன்றியுரையாற்றினார்.

மன்றத்தின், செயற்குழு உறுப்பினர்கள், திரு.கோ.சீத்தாராமன், திரு.நெல்லை கோமான், திரு.பழனிக்குமார், திரு.பேச்சிமுத்து, திருமதி.கவிதா, செல்வி.மோனிக்கா, மதிதா பள்ளி ஆசிரியர், திரு.இரா.மார்கண்டன், ஆசிரியை, திருமதி.சு.மாரியம்மாள்,
செந்தில் ஸ்டூடியோ, திரு.செந்தில், திரு.முருகேசன், திரு.மாரியப்பன், மாணாக்கர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகளை, பாளை, லொயோலா கான்வென்ட் தொடக்கப்பள்ளி, மாணவி ஹரி.சம்யுக்தா சீதா தொகுத்து வழங்கினார்.

விழாவில் இந்த கல்வியாண்டில் பணிநிறைவு பெற இருக்கும் ஆசிரியை திருமதி.கு.சுப்புலட்சுமி அவர்களை பாராட்டி, பரிசு வழங்கி மகிழ்ந்தனர் மன்றத்தின் நிர்வாகிகள், மாணாக்கர்கள்.

விழா இனிதே நிறைவு பெற்றது.

அழைப்பில் மகிழும் திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம்
05/03/2026

அழைப்பில் மகிழும் திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம்

மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 2026, கலந்து கொண்ட நம் மன்றத்தின் உறுப்பினர்கள் திருமதி.மாலா, திருமதி.பத்மா...
12/01/2026

மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 2026, கலந்து கொண்ட நம் மன்றத்தின் உறுப்பினர்கள் திருமதி.மாலா, திருமதி.பத்மாவதி, திருமதி.உமா சிதம்பரம், செல்வி.மா.மோனிக்கா ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்துகள் கூறி மகிழ்வோம்.

வணங்கி மகிழ்கின்றேன்.பேட்டையில் வாழ்ந்து வரும் தமிழ் பற்றுடைய ஓவியர் பொ.தங்கவேல் அவர்களை பாராட்டியும், வாழ்கவென்று வாழ்த...
26/11/2025

வணங்கி மகிழ்கின்றேன்.

பேட்டையில் வாழ்ந்து வரும் தமிழ் பற்றுடைய ஓவியர் பொ.தங்கவேல் அவர்களை பாராட்டியும், வாழ்கவென்று வாழ்த்தியும் மகிழ்கின்றோம்.

திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம்.

திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பாக திடியூர் ஊராட்சி, ஈஸ்வரிபுரம் கிராமத்தில் வாழும் விவாசாயக் குடும்பத்தினருக்கு, 2...
18/10/2025

திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பாக திடியூர் ஊராட்சி, ஈஸ்வரிபுரம் கிராமத்தில் வாழும் விவாசாயக் குடும்பத்தினருக்கு, 2025 தீபாவளி பண்டிகை புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி மகிழ்ந்த தருணம்.

நன்றி - பெருமாள்புரம், குரு க்ருபா லாலா ஸ்வீட்ஸ், நிர்வாக இயக்குநர்

"திருநாவுக்கரசர் நற்செயல் மன்றத்தின்" வளர்ச்சியை நோக்கிய (தூத்துக்குடி மாவட்டம்) பயணத்தில், சைவசமயக் குரவர்கள் "நால்வர்"...
14/04/2025

"திருநாவுக்கரசர் நற்செயல் மன்றத்தின்" வளர்ச்சியை நோக்கிய (தூத்துக்குடி மாவட்டம்) பயணத்தில், சைவசமயக் குரவர்கள் "நால்வர்" திருவுருவப்படத்தை பெரியோரிடம் அளித்து மகிழ்ந்தோம்.

1) முக்காணி கிராமம் சீர்மிகு.இராமய்யர், அவர்கள்.
2) தூத்துக்குடி, பணிநிறைவு பெற்ற ஆசிரியை திருமதி.கோமதியம்மாள் அவர்கள்.
3) தூத்துக்குடி வாழ் 'மதிதா' பள்ளி மேனாள் தலைமையாசிரியர் சீர்மிகு.க.சிவசுப்பிரமணிய சிவா, அவர்கள்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து பெற்ற தருணம்.

நட்பும், உறவுமாக வருக! வருக!!
22/03/2025

நட்பும், உறவுமாக வருக! வருக!!

மன்றத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்களிப்பினை ஆண்டுதோறும் வழங்கி மகிழும், அன்பு நண்பர் IBF Product Service, ARUNA Applia...
06/02/2025

மன்றத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்களிப்பினை ஆண்டுதோறும் வழங்கி மகிழும், அன்பு நண்பர் IBF Product Service, ARUNA Appliances, சீர்மிகு.அண்ணாமலை அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் புத்தாண்டு (2025) வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த தருணம்.

மன்றத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்களிப்பினை ஆண்டுதோறும் வழங்கி மகிழும், அன்பு நண்பர் வெல்கம் அசோசியேட்ஸ், நிறுவனர் சீர...
31/12/2024

மன்றத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்களிப்பினை ஆண்டுதோறும் வழங்கி மகிழும், அன்பு நண்பர் வெல்கம் அசோசியேட்ஸ், நிறுவனர் சீர்மிகு.அய்யப்பக்குமார் அவர்களுக்கு புத்தாண்டு (2025) வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த மன்றத்தின் நிர்வாகிகள்.

28/11/2024

Address

PLOT NO. 22/2, CATHEDRAL COLONY
Tirunelveli
627007

Opening Hours

Monday 4:30pm - 7:15pm
Tuesday 4:30pm - 7:15pm
Wednesday 4am - 7pm
Thursday 4pm - 7pm
Friday 4:30pm - 7pm
Saturday 10am - 12:30pm
Sunday 10:15am - 12:30pm

Telephone

+919842626070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirunavukkarasar Narseyal Mandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thirunavukkarasar Narseyal Mandram:

Share

Category