Sri Thripurantheeswara Temple,palai

Sri Thripurantheeswara Temple,palai சிவமே செல்வம்

21/03/2026

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
>>>>>>>>>>>>>>>

17/02/2026

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#ஓம்நமசிவாய_ஓம்நமசிவாய
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
****************************
#திருநாவுக்கரசர்_நாயனார்
#தேவாரம்
💢💢💢💢💢💢💢
தலம் : #திருவதிகை
€€€€€€€€€€€€€€€€€€€
பாடல் எண் : 2 பண் : #கொல்லி
********************************
🙏 #நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
🙏 #வஞ்சம்இது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
🙏 #நஞ்சாகிவந் தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
🙏 #அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே!
§§§§§§§§§§§§§§§§§
பொழிப்புரை:
¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢¢
🙏 #அதிகைக்_கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.
*********************************
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
#சிவாயநம_சிவாயநம
*********************************

14/01/2026

🍍🍓🍑🍎🍏🍐🍈🍇🍊🥭
🌿 #திருச்சிற்றம்பலம்🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#ஆல்போல்_தழைத்து
#அருகு_போல்_பெருகி_வாழ்க*
🌹🌷🌺💐🌸🌻🌹🌷🌺🌼🍁
***********************************
🔔 #திருஞானசம்பந்தா் தேவாரம் 3 ம் திருமுறை🔔
************************************
🕉 #திருக்கழுமலம்
♦||===||===||===||♦

🌿🍃🌱🌴☘🍀🌿🍃🌱❇️🌴
♦ #பாடல்எண் : 1♦
=========================
♦ #மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

♦ #எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை

♦ #கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்

♦ #பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 🌹 #பொழிப்புரை:
#உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
********************************
♥ #தமிழா்திருநாளாம் !
♥ #தைத்திருநாளாம் !!
♥ #தரணிபோற்றும் !!!
♥ #தங்கநன்நாளாம் !!
♥ #இனியதைப்பொங்கல்
♥ வாழ்த்துகள்..
***********************************
🔆🙏🔆🙏🔆🙏🔆🙏🔆
\\\\\\\\\\\\\\\\\/////////////////////
திரு. மயிலை சற்குருநாத ஓதுவாா் குரலில் பாடல்
*********************************** ♥ #சிவாயநமசிவாய♥
***********************************

06/01/2026

#முருகாசரணம்
🌷🌺🌹🙏💥🙏🌷🌺🌹

🔥💫🔥💫🔥💫🔥💫🔥♦ #நமபாா்வதி_பதயே♦♦ ாதேவா♦{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ ♦ #மஹாதேவஷ்டமி♦   ||=====||=====||===...
11/12/2025

🔥💫🔥💫🔥💫🔥💫🔥
♦ #நமபாா்வதி_பதயே♦
♦ ாதேவா♦
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
♦ #மஹாதேவஷ்டமி♦
||=====||=====||=====||
}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருள்தரும் ஸ்ரீகோமதிஅம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீதிரிபுராந்தீசு்வரர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ♦ #மஹாதேவருக்கு♦
*************************************
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விஸ்வவாசு வருடம் வருடம் | 201 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26 ம் தேதி [12~12~2025] வெள்ளிக்கிழமை அமரபட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி அன்று காலை மணி 9.30 முதல்
சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம், மற்றும் அலங்கார தீபாராதணையும்
நடைபெறும்

மதியம் 12,00 மணி முதல் சிறப்பு ♦ #அருள் பிரசாதம்♦ வழங்கப்பட உள்ளது.
இடம் : திருக்கோவில் எதிரே உள்ள அய்யா தையல் நாயகி கல்யாண மண்டபம்
*************************************
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*************************************
இந்த மகாதேவஅஷ்டமி கேரள மாநிலத்தில் ஸ்ரீவைக்கத்தில் நடைபெறுவதை போன்றே நமது பாளை சிவன்கோவிலில் நடைபெறும்.
+++++++++++++++++++++++++++++
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
**************************************
அன்று சிவபெருமான் நம்மோடு உணவருந்துவதாக ஐதீகம்
இந்த மகாதேவஅஷ்டமி திருவிழாவில் தாங்கள் குடும்ப சகிதமாக கலந்துகொண்டு ஸ்ரீமகாதேவர் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
கட்டளைதாரர்:-
மு.வள்ளிநாயகம்
K.T.C நகர்
பாளையங்கோட்டை
*************************************
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*************************************
♦ #நமபாா்வதி_பதயே♦
♦ ாதேவா♦
*************************************
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
==================================

சிவ சிவ🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 #மஹா_சிவராத்திரிவிழா🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏மனசெல்லாம் மஹா சிவராத்திரி எண்ணம்முதல் காலம்**************மு தல் காலத்தில...
13/02/2025

சிவ சிவ
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
#மஹா_சிவராத்திரிவிழா
🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
மனசெல்லாம் மஹா சிவராத்திரி எண்ணம்

முதல் காலம்
**************
மு தல் காலத்தில் சிவபெருமானுக்கு அனைத்து விதமான திரவியங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும். பொதுவாக, சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நான்குகால பூஜை வேளையிலும், அனைத்துவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் என்பது சாஸ்திரம்.

ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் ஓர் அபிஷேகம் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் காலத்தில் விசேஷமான திரவியமாக சொல்லப்பட்டு இருப்பது பஞ்சகவ்யம்.

இந்த பஞ்சகவ்யத்தை தயாரிப்பது பற்றியும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்பது பசுவிலிருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்களைக் குறிப்பது ஆகும். பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் முறைப்படி ஒவ்வொரு படி எடுத்துக்கொள்ளவும். பிறகு நடுவில் பசுவின் பாலையும், அதன் கிழக்கே தயிரையும், தெற்கே நெய்யையும், வடக்கே கோமியத்தையும், மேற்கே பசுவின் சாணத்தையும் வைத்து, முறைப்படி நடுவே ஈசானன், கிழக்கே தத்புருஷன், தெற்கே அகோரன், வடக்கே வாமதேவன், மேற்கே ஸத்யோஜாதன் என்பதாக இறைவனின் ஐந்து நாமாக்களையும் கூறி பூஜிக்கவேண்டும்.

பின்னர் பசுவின் சாணத்தை எடுத்து, கோமியத்தில் இட வேண்டும். அடுத்து இந்தக் கலவையை பசுநெய்யில் சேர்க்கவேண்டும். பிறகு, இந்த மூன்றும் சேர்ந்த கலவையை பசுந் தயிருடனும் கலந்தபிறகு, நிறைவாக அனைத்தையும் பசும்பாலில் கலந்துகொள்ளவேண்டும். இப்படி பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய மந்திரம் சொல்லி கலக்கவேண்டும். தெரியாதவர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.

பஞ்சகவ்யம் தயாரானதும், அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து, அந்த பொருளை பூஜிக்கப்பட்ட ஒரு விசேஷத் திரவியமாகக் கொள்ள வேண்டும். இந்த பஞ்சகவ்யம் அபிஷேக திரவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யத்தை நாம் வெவ்வேறு வண்ண பசுக்களிடமிருந்து பெற வேண்டும். பால் சிவப்புநிற பசுவிலிருந்தும், தயிரானது வெண்மை நிற பசுவிலிருந்தும், நெய்யானது சாம்பல் நிற பசுவிலிருந்தும், கோமியம் கறுப்பு நிற பசுவிலிருந்தும், பசுஞ்சாணம் பலவர்ணமுடைய பசுவிலிருந்தும் பெறப்பட வேண்டும். ஒருவேளை அப்படி கிடைக்காவிடில், அனைத்தையும் கறுப்பு வண்ண பசுமாட்டிலிருந்து இவற்றைப் பெறலாம்.

முதல் கால அபிஷேகம் முடிந்ததும் ஸ்வாமியின் திருமேனியில் சந்தனம், தேன் கலந்து தடவவேண்டும்.
முதல் காலத்துக்கு உரிய விசேஷ அபிஷேகப் பொருளாக பஞ்சகவ்யம் திகழ்வதுபோன்று, விசேஷ பூக்கள், வஸ்திரம், நைவேத்தியம் முதலானவை குறித்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவை: வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டு
மாலை: வில்வம்
தூபம்: சந்தனக் கட்டைளைத் தூள் செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பருப்பும் நெய்யும் சேர்த்த அன்னம்.
பாராயணம்: ரிக்வேதம் மற்றும் சிவபுராணம்
--------------------------------------------------------------------.
இரண்டாவது காலம்
***********************
இ ரண்டாவது யாமத்தில் அனைத்துவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதுடன், விசேஷ திரவியமாக பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும்.
இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ரச பஞ்சாமிர்தம், மற்றொன்று பழ பஞ்சாமிர்தம். நாம் பார்க்கின்ற இந்த சிவராத்திரியிலே இரண்டாவது காலத்திலே சொல்லப்படுகிற பஞ்சாமிர்தம் ரச பஞ்சாமிர்தம். ரசம் என்றால் திரவநிலை.
சிவப்பு பசுவிலிருந்து பெறப்பட்ட பாலை நடுவில் வைக்கவேண்டும்.

பின்னர், வெள்ளை பசுவின் பாலில் உருவான தயிரை கிழக்கிலும், சாம்பல் பசுவின் பாலில் பெறப்பட்ட நெய்யை தெற்கிலும், அச்சுவெல்லம் அல்லது தூள்சர்க்கரையை வடக்கிலும், தேனை மேற்கிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு முன்னர் சொன்னதுபோன்று சிவமந்திரம் அல்லது சிவநாமம் சொல்லி பூஜித்து அவற்றை கலந்துகொள்ளவேண்டும். இந்தக் கலவைக்கே ரச பஞ்சாமிர்தம் என்று பெயர். இயலாவிடின், ஐவகை பழங்களைக் கொண்டு பழ பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்தும் வழிபடலாம்.

இரண்டாம் கால அபிஷேகம் முடிந்ததும், பச்சைக் கற்பூரம் அரைத்து சுவாமியின் திருமேனியில் பூசவேண்டும்.
வஸ்திரம்: மஞ்சள் வண்ண வஸ்திரம்.
மாலை: குருந்த மர இலைகளால் ஆன மாலை. துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
தூபம்: சாம்பிராணியும் குங்கிலியமும் கலந்து தூபம் இடவேண்டும்.

தீபம்: இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பாயசம்.
பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
மூன்றாம் காலம்
*******************
மூ ன்றாம் யாமத்தில் அதாவது காலத்தில், சிவபெருமானுக்கு அனைத்துவிதமான திரவியங்களுடன், விசேஷமாக தேனபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும், கஸ்தூரி சேர்த்த சந்தனத்தை ஸ்வாமிக்குப் பூசவேண்டும்.

வஸ்திரம்: வெள்ளை வஸ்திரம்.
மாலை: கிலுவை இலை மற்றும் விளா இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையும் ஜாதிமுல்லை மாலையும் மூன்றுதள வில்வத்தால் அர்ச்சிக்க வேண்டும்.
தூபம்: குங்கிலிக பூவினால் தூபம் போடவேண்டும்
தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: மாதுளை, எள் அன்னம்.
பாராயணம்: சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
நான்காம் காலம்
******************
நா ன்காம் கால பூஜையின்போது, கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவேண்டும். புனுகு, சந்தனம் சேர்த்துப் பூசவேண்டும்.
வஸ்திரம்: பச்சை அல்லது நீலவண்ண வஸ்திரம்.

மாலை: கருநொச்சியினால் அலங்காரம் செய்து, வெள்ளை நந்தியாவட்டையால் ஆன மாலையை அணிவிக்கவேண்டும். மேலும் நிறைய புஷ்பங்களால் அலங்கரிக்கவேண்டும்.
தூபம்: கற்பூரம் மற்றும் லவங்கப்பட்டையைப் பொடி செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நைவேத்தியம்: வாழை முதலான அனைத்துவகைப் பழங்களும், சர்க்கரைப்பொங்கலும் படைக்கலாம்.
பாராயணம்: அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும்.

சிவ சிவ

திருசிற்றம்பலம்

07/02/2025

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌿 #திருச்சிற்றம்பலம்🌿
*********************************
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
🕉 #கண்ணப்பநாயனார்
#குருபூஜை
=============================
♦ஆங்கிலமாதம்: 08~02~2025
♦கிழமை: #சனிக்கிழமை
♦பெயா்: #கண்ணப்பநாயனாா்
♦குலம்: #வேட்டுவர்
♦பூசை நாள்: #தைமாதம் 26 ம் தேதி
♦குருபூசை நட்சத்திரம்: #மிருகசீருஷம்

♦அவதாரத் தலம்: #உடுப்பூர்
♦முக்தித் தலம்: #திருக்காளத்தி

♦கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும்,

♦நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்

♦கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேட்டுவர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தாட் கொண்டருளினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♦ #சிவாயநம♦️
🌿 #தில்லையம்பலம்🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

22/01/2025

💥💥💥💥💥💥💥💥💥💥 *****************************
#கந்தா_சரணம்
*****************************
#அருணகிரிநாதர் அருளிய
#கந்தர்_அலங்காரம்
*****************************
பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
#வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
#காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
#சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
........ #சொற்பிரிவு .........

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
........ #பதவுரை .........

#சிவந்த_திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
குறையும் உண்டாகாது.
*******************************
#முருகா சரணம்
********************************
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

08/01/2025

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#ஓம்நமசிவாய_ஓம்நமசிவாய
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
****************************
: #திருநாவுக்கரசர்நாயனார் #நான்காம்திருமுறை
தலம் : #திருப்பாதிரிப்புலியூர்
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
#கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
#உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
#திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
#தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே
*********************************
#பொழிப்புரை:
*****************
#திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன். கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன். வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக.
*********************************
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
#சிவாயநம_சிவாயநம
*********************************

06/01/2025

🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
************************************
#மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் அருளியது
************************************
♦ #திருப்பள்ளியெழுச்சி♦
||=====||====||====||====||
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
♦ #பாடல்எண்_3
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
#கூவின பூங்குயில் கூவின கோழி
#குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

#ஓவின தாரகை யொளிஒளி உதயத்
#தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

#தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
#திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

#யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
#எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
************************************
♦ #பொழிப்புரை:♦
************************************
#தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக.
************************************
♦ #மாணிக்கவாசகா்_மலரடிகள்♦
♦ #போற்றி_போற்றி♦
************************************
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
=================================

06/01/2025

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*************************************.
#சிவசிவசிவசிவசிவசிவசிவ
*************************************
#வாயிலார்நாயனார்
♥ #குருபூஜை♥
||===||===||====||===||===||
♥பெயர்: #வாயிலார்_நாயனார்

♥குலம்: #வேளாளர்

♥பூசை நாள்: #மார்கழி_ரேவதி

♥அவதாரத் தலம்: #திருமயிலை

♥முக்தித் தலம்: #திருமயிலை

❤️மாா்கழி மாதம் 23 தேதி 07~01~2025 செவ்வாய்க்கிழமை

♦ #வரலாறுசுருக்கம்:♦
*******************************

♥" #நெஞ்சகமே கோயில் நிறைவே சுகந்தம்; அன்பு மஞ்சள் நீர்; பூசைகொள்ள வாராம் பராபரமே"*
என்று பரம்பொருளைக் கூவியழைக்கிறார் தாயுமானவர்.

♥ #இறைவழிபாடுஇருவகைப்படும்:

♥1. #புறவழிபாடு
♥2. #அகவழிபாடு

♥ #புறவழிபாடு என்பது, ஆலயம் சென்று வழிபடுவது. ஆலயம் தூய்மை செய்வது, தீபம் ஏற்றுவது போன்றவை.

♥ #அகவழிபாடு என்பது, தன் உள்ளத்துக்குள்ளேயே இறைவனை அமர்த்தி, ஆத்மா என்ற தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்து முக்தி அடைவது ஆகும். இவ்வகை வழிபாட்டில் முக்தி நிலை பெற்றவருள் மிகச் சிறந்தவர் வாயிலார் நாயனார்.

♥ #அதுமட்டும் இன்றி சரியைத் திருத்தொண்டுகளான திருவலகிடல், திருமெழுக் கிடல், திருவிளக்கேற்றல், தலை வணங்கல், சிவன் புகழ் பாடல் ஆதியன புறவுறுப்புக்களாகிய கை, தலை, நா முதலியன சிவஞ்சாரும் நெறியில் நிற்கப் பயிற்று மாறுபோல தூபம், தீபம், மலர், நீர், நைவேத்தியம் முதலியன செய்வித்து வழிபட்டு செய்தார்.

♥ #அவர்_சென்னையில் உள்ள
மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் வேளாளர் 12 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.

♥ #இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
சேக்கிழார் அவர்கள் தம்முடைய
பெரியபுராணத்திலும் , 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும்.

♥ #இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து வந்தார்.சிவ பூஜை ஒரு தவமாக மேற்கொண்டார்.

♥ #பரமசிவனை ஒருபொழுதும் மறவாத மனமாகிய ஆலயத்துள் இருத்தி, ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தமாகிய திருமஞ்சனமாட்டி, அன்பாகிய திருவமுதை நிவேதித்தலாகிய ஞானபூசையை நெடுங்காலஞ்செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.

♥ #இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,

♥" #மன்னு_சீர்மயி_லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்று கூறுகின்றார்.

♥ #இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும்.

♥ #தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது. வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு. மார்கழியில் ரேவதி
நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு.
*************************************
#சிவசிவசிவசிவசிவசிவசிவ
*************************************

04/01/2025

💥💥💥💥💥💥💥💥💥💥💥
************************************
#மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் அருளியது
************************************
♦ #திருப்பள்ளியெழுச்சி♦
||=====||====||====||====||
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மாா்கழி 21 ம் நாள் 05~01~2025
♦ #பாடல்எண்_1
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
#போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
#புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

#ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
#எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

#சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
#திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

#ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
#எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
************************************
♦ #பொழிப்புரை:♦
************************************
#என்_வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக
************************************
♦ #மாணிக்கவாசகா்_மலரடிகள்♦
♦ #போற்றி_போற்றி♦
************************************
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
==================================

Address

Tirunelveli
627002

Telephone

9865830310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Thripurantheeswara Temple,palai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri Thripurantheeswara Temple,palai:

Share

Category