Vickramasingapuram

Vickramasingapuram Vickramasingapuram is a beautiful town at the foot of Podhigai Hills, near Papanasam, in Tirunelveli Dist, in TN state, India.

Such a greeneries fill and surround the town, with a major river and a huge canal flowing through, surrounded by a lot of lakes. http://en.wikipedia.org/wiki/Thamirabarani

படித்ததில் பிடித்தது, as received in whatsApp*மேற்கு தொடர்ச்சி மலை*குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் ...
14/09/2024

படித்ததில் பிடித்தது, as received in whatsApp

*மேற்கு தொடர்ச்சி மலை*
குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் *மேற்கு தொடர்ச்சி மலை* ஒரு உலக அதிசயம்.

இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .
பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி " இடம் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.
தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக்கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.
"வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை.

மேற்கு தொடர்ச்சிமலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. .இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது.
மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம்" உள்ளது.
உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் "குறிஞ்சி மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.
இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.
களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.

திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய "குற்றாலமும் "இங்குதான் உள்ளது.
ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான "பாண தீர்த்தம் " இங்குதான் உள்ளது.
"ஜோக் பால்ஸ் " என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது.

காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான "குடகின் வனப்புமிகு தலைக்காவிரியும் உள்ளது.
இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக்கொண்டமேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.

ஆங்கிலன் அதை மட்டுமா செய்தான் பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!.
பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேபடுத்தினான்.
ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன!.
விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது!.

இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது!.
வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.
இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்துவிட்டது பெரும் சோகம் .
சூழலியலில் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூரையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்ரமித்துக்கொண்டன.

இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன!.
ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தணமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விசமிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரை படத்தில் "தென் இந்தியா " பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது !.
மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.
தகவலாக..

16/01/2024

A nice article received on WhatsApp from a friend:

#பொங்கச்சோறும்_சுண்டக்கறியும்:

✴️திருநெல்வேலிக்காரன் தின்னே கெட்டான்னு ஒரு சொல் வழக்கு உண்டு. அந்த வகையில சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும்.

✴️தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொறியல், சிறுகிழங்கு பொறியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

✴️பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

✴️அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

✴️இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொறியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

✴️பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார், அவியல், பச்சடி என அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

✨அதென்ன சுண்டக்கறி?✨

✴️மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொறியல் என அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

✴️இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

✨பொங்கச்சோறு✨

✴️பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

✴️இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

✴️பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

✴️அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்....

✴️பொங்கல் முடிந்த இரண்டு நாட்களுக்கு சுண்டக்கறி தான் எல்லாத்துக்கும் தொடுகறி.... 😊🔥

-திருநெல்வேலிக்காரன்.

Also, the 2nd book "Management & Leadership Essentials for Kingdom Ministers & Involvers" is also on Amazon!
23/12/2023

Also, the 2nd book "Management & Leadership Essentials for Kingdom Ministers & Involvers" is also on Amazon!

It is conspicuous evidence that many organizations are struggling to thrive due to a deficit in managerial acumen and leadership nuances. There are a many ways to improve the growth of an organization / ministry, but under challenging conditions, the prevailing efforts, talents, plans, and strate...

Now the 1st book (revised / 2nd edition), "Hi-Pot & Hi-Per Professionals of God" is on Amazon!
23/12/2023

Now the 1st book (revised / 2nd edition), "Hi-Pot & Hi-Per Professionals of God" is on Amazon!

It is rare to find a voice that speaks to the Marketplace generation. Peter Christopher Raj, from his journey from the bottom to top of his professional career, has captured the experience side of the Kingdom of God in this book. Peter coming with his professional expertise in Operations, Quality...

பாபநாசம் படித்துறையில் சற்று முன் (8.45) சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கரை அருகில் சுற்றி வருகிறது 🤷‍♂️🤷‍♂️(குறிப்ப...
01/05/2023

பாபநாசம் படித்துறையில் சற்று முன் (8.45) சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கரை அருகில் சுற்றி வருகிறது 🤷‍♂️🤷‍♂️(குறிப்பு- நமது ஊரில் இரவு நேரங்கள் குளிக்க செல்லும் நபர்கள் கவனமாக செல்லவும்) (posting as received in WhatsApp).

29/12/2022

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட,

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில்,

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து,

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்).

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள்.

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே,
ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள்.

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு

மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை.

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரேஷன் அட்டை,
ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள்.

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று,
நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல்

சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN -
695 011

படித்துவிட்டு, இதனை பகிருங்கள், ஏதோ ஒரு உயிர் இதனால் காப்பாற்றப்படலாம்..!!

26/11/2022

A Poetry received in WhatsApp, on Tenkasi, our neighbor town:

தென்காசி மாவட்டம்

என் தகப்பா.....
🌾நெல்லையப்பா....
நானுனக்கு
🏯பிள்ளையப்பா....

சரிக்குச்சரி
ஊரினைப்
பிரித்து
👌தென்காசி
எனும்
பேரினைக்
கொடுத்தாய்...

தற்கால
பெருமை
சொல்லும்
🌉மேம்பாலம்
உனக்கு

கற்கால
பெருமை
சொல்லும்
🌊குற்றாலம்
எனக்கு...

🤣சேட்டைகள்
செய்யும்
நெல்லை
உனக்கு

சேட்டன்கள்
வாழும்
🌴கேரளத்தின்
எல்லை
எனக்கு...

பாரம்பரியமிக்க
🏛பாளையங்கோட்டை
உன்னிடம்

💪தன்மானமிக்க
தலைவன்கோட்டை
என்னிடம்...

வம்பை
தவிர்க்கும்
🥰அம்பாசமுத்திரமும்
வம்பை
வளர்க்கும்
😡கோபாலசமுத்திரமும்
உங்களுக்கு...

😘பண்பை
வளர்க்கும்
பாவூர்சத்திரமும்

⭐வளர்ச்சியான
#சுரண்டையும்

அன்பை
👬பெருக்கும்
பனவடலிசத்திரமும்
எங்களுக்கு...

கைதியை
அடைக்கும்
🧱சென்ட்ரல்
உங்களுக்கு

மனதினை
மயக்கும்
🏞தென்றல்
எங்களுக்கு...

#தாமிரபரணி
🏝ஆற்றங்கரை
குளியல் உங்களுக்கு
#குற்றால
🏔அருவி குளியல்
எங்களுக்கு

உங்களுக்கு
⛺ராதாபுரம்

எங்களுக்கும்
🧱செங்கலுக்கும்
மாதாபுரம்...

கூடங்குளத்து
அணு
உலையின்
💈மின்சாரத்திற்கு

ஆலங்குளத்து
ஆலையின்
🍚அரிசியை
பதிலளிப்பேன்...

மானூரிலிருந்து
லேட்டா
வந்தாலும்
🥞பிரானூர்
புரோட்டாவை
பரிசளிப்பேன்...

பழவூரின்
🥛பசுமோரை
பாவூரின்
🥬பசுங்கீரைக்கு
பகிர்ந்தளிப்பேன்...

🌊மணிமுத்தாரை
வைத்துக்கொண்டு
🌊அடவிநயினாரை
எனக்களித்தாய்...

🧔கட்டபொம்மனையும்
👳‍♂️பாரதியையும்
பங்காளிக்கு
வழங்கிவிட்டு

🥋வாஞ்சி
நாதனையும்
🐅பூலித்தேவனையும்
தென்காசிக்கென
முழங்கிவிட்டாய்...

🏖கடல்
இல்லையென
கவலை
கொண்டோம்

பாதி
உடலையும்
🙏காசி
விஸ்வநாதன்
திடலையும்
தந்து
திகைக்க
வைத்தாய்...

ஒன்றின்மேல்
ஒன்றமர்ந்தாலும்
குன்றின்மேல்
குடியிருக்கும்
எங்கள்
⛰திருமலைக்
குமரனுக்கு
ஈடில்லையென
குதூகலித்தோம்...

மங்கையான
🏯சங்கை
அதிவிரைவில்
தங்கையாக
உதயமாக
எங்கள்
பங்கை
செலுத்திடுவோம்

நெல்லையின்
🔪கெத்து
இல்லையெனும்
🦁 #சொல்லை
#உடைத்திடுவோம்...

🦁 #தாய்ப்புலி
#எட்டடியெனில்
🐅 #குட்டிப்புலி
#பதினாறடி
பாயாதா...

அப்பனே
நெல்லையப்பா
🌰 #அல்வாவாலும்
🔪 #அரிவாளாலும்
நீ
பேர்பெற்றாய்.....

நாங்கள்
😍 #அன்பாலும்
👨‍🎓 #அறிவாலும்
புகழ்
பெறுவோம்...

வாலே
என்றதும்
🐈வாலாட்டிச்
செல்லமாட்டோம்

ஏலே..
என்றால்
#என்னலே...
எனக்கேட்கும்
🦁தில்லானவங்க
*எங்க*
*தென்காசிக்காரங்க*...

*என்றும்*
*அன்புடன்*...
*தென்காசி சொந்தங்கள்*.......

22/11/2022

A praiseworthy video from a person who did an excellent job of cleaning our beloved Tambraparani River!

திருநெல்வேலி, தூத்துக்குடிதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி, தூத்துக்குடியை சேர்ந்தவர்கள...
17/11/2022

திருநெல்வேலி, தூத்துக்குடி

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி, தூத்துக்குடியை சேர்ந்தவர்களே.

சென்னையின் பெருமைக்கு காரணம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களே.

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியைச் சார்ந்தவர்களே.

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பார்.

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நெல்லையைச் சேர்ந்தவராகவே இருப்பார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள்….

T V Sundram Iyengar ( TVS Group ),

S Anatharamakrishnan ( Amalgamations Group ),

Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ),

INDIA CEMENTS

M G Muthu ( Founder, MGM Group ),

Everest Stabilizers,

Ideal Cookwares,

Prestige Cookwares,

Aryaas group of hotels,

VVD coconut Oil,

RMKV,

Pothys,

Saravana Stores,

Jeyachandran Textiles,

Aarthi Scans,

Bharath Scans,

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு வற்றாத ஜீவநதி தாமிரபரணிதான்...தென் இந்திய எட்டு ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி தாமிரபரணிதான்.

தாமிரபரணிதான் நெல்லை, மற்றும் சகோதர மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி தாமிரபரணிதான்,

தமிழ்நாட்டின் தைரியமான பெண்கள் என்றால் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள்தான்...சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி சகோதரிகள்தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.

தமிழக புவியியல் அமைப்பில் கடல், மலை, காடு, வயல், பாலைவனம் என ஐந்து வகை நிலங்களும் அமையப் பெற்ற மாவட்டம்.

விக்கிரமசிங்கபுரம், தென்காசி, செங்கோட்டை, களக்காடு ஆகிய பகுதிகள் குறிஞ்சியாகவும்,

அம்பை, புளியங்குடி, சுரண்டை பகுதிகள் முல்லையாகவும்,

கல்லிடைக்குறிச்சி, ராயகிரி, சேரன்மகாதேவி, ஆலங்குளம் பகுதிகள் மருதமாகவும்,

திசையன்விளை, கூடங்குளம் பகுதிகள் நெய்தல் ஆகவும்,

ராதாபுரம், தேரிக்காடு பகுதிகள் பாலையாகவும்,

என ஐவகை நிலங்களும் கொண்ட மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் மட்டுந்தான்.

இப்படி ஒரு புவியியல் அமைப்பு வேறு எங்கும் இல்லை,

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக… சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி, வேலூர் வழியாக திருச்சியைத் தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே முடியாது.

தமிழில் எங்கள் நெல்லைத் தமிழுக்கு இணை எங்கள் நெல்லைத் தமிழ்தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என நிர்வாக ரீதியாகப் பிரிந்து இருந்தாலும் எங்கள் மூன்று மாவட்ட மக்களும் பின்னிப் பிணைந்துதான் வாழ்ந்துவருகின்றோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை.

ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நெல்லை மக்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவார்கள். சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையை விட, முதல் மூன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள்.

பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் நெல்லைதான்..

இன்னும் 100 வருடங்களுக்கு பிறகும் தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டுந்தான்.

உலக சுகாதார நிறுவனம் கணக்குபடி, இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.

*வெள்ளைப் பரங்கியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்டத்தை நடத்திய மாமன்னர் மாவீரன் புலித்தேவர் பிறந்து ஆட்சி செய்ததும் நெல்லை மண்ணில்தான்*

*கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்*,

*மகாகவி சுப்பிரமணிய பாரதியார்*,

சுப்பிரமணிய சிவா,

வீரபாண்டிய கட்டபொம்மன்,

மாவீரன் சுந்தரலிங்கம்,

வாஞ்சிநாதன்,

வீரன் அழகுமுத்துக்கோன்,

மார்ஷால் நேசமணி,

தோழர் ஜீவா,

*வீரமாமுனிவர்*,

முஹமது இஸ்மாயில்

போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணிய பூமி.

தமிழ்நாட்டில் அதிக சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த பூமி நெல்லை.

நெல்லைக்கார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..

மதச்சார்பின்மைக்குச் சான்று நாங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதியைப் பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச்சைப் பார்க்கலாம்..

தமிழ்நாட்டில் இதுவரையில் மத கலவரங்கள் நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. ஆனால், சாதி கலவரங்கள் அதிகம் கொண்ட மாவட்டமும் நெல்லைதான்.

Tirunelveli Medical College( govt ) TMC,

Govt College of Engg Tirunelveli,

Tirunelvili Law College,

Govt agricultural college,

Govt Siddha Medical College,

Govt Veterinary College,

St Xavier's College,

Sadakuthullah Appa college,

St John's College,

MDT Hindu College,

Sarah Tucker college,

Rani Anna College….

என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை.... அதனாலேயே தமிழகத்தின் Oxford என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாகப் பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கே முதலிடம்.

பதிவுத் திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று.

விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லைக்கு முதலிடம்.

முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் திருநெல்வேலிதான்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்குப் பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லைதான். *District of Youth*.

ஆக மொத்தத்தில்…

அன்புக்கு 'அல்வா'

இதுவே எங்கள் திருநெல்வேலி….

25/09/2022

An interesting article received in WhatsApp:

போஜனப்பிரியர்கள்: திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும்.

" தின்னு தீர்த்தே சொத்தை இழந்தவன் திருநெல்வேலிக்காரன்" என்று சொல்வார்கள்.( இது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்ல முடியாது. ஒரு வேடிக்கையாக இப்படி சொல்வார்கள் )
திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள் பெரியவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் சமைக்கும் " கூட்டாஞ்சோறு " ரொம்ப பிரபல்யமானது. எல்லாக் காய்களையும் சேர்த்துப் போட்டு சமைக்கும் இந்த உணவு நல்ல ருசியானதும் கூட.
(வெஜிடபிள் பிரியாணிக்கும் கூட்டாஞ்சோறுக்கும் வித்தியாசம் உண்டு.)
கூட்டாஞ்சோறுக்கு " தொட்டுக்கிட" கூழ்வற்றல், வெங்காய வடகம், சீனியவரக்கா வத்தல், கல்லிடைக்குறிச்சி அப்பளம்..என்று ஏகப்பட்ட டிஸ்கள் உண்டு.
இதைப்போல, தேங்காய்ப்பாலில் செய்யும் " சொதிக்குழம்பு" பிரபலம்.
அதிக காரம் இல்லாத இந்த குழம்பு வகை, தென்னை அதிகம் விளையும் இலங்கையில் இருந்து வந்தது என்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்,
கல்யாணத்திற்கு மறுநாள் சொதிச்சாப்பாடு போடுவது மரபு.
" மாப்ளெ..அந்தானைக்கு கிளம்பீராதீரும்..இருந்து நாளைக்கு மறுவீட்டு சொதிச்சாப்பாட்டை சாப்பிட்டுப் போங்க.." என்று உரிமையோடு சொதியின் ருசிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.
சொதிக்கு உருளைக்கிழங்கு பொரியலும், இஞ்சி பச்சடியும் உற்ற துணை. சொதிக்குழம்பு செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் சொதப்பி விடும். தேங்காய்ப்பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதில், முருங்கைக்காய், அவரைக்காய், காரட் போன்ற காய்களைப் போடுவார்கள். சொதிக்குழம்போடு சேர்த்து சாப்பிட முன்பு குறிப்பிட்ட அப்பளம், கூழ்வத்தல் வகையறாக்களும் கட்டாயத் தேவை.
மாவட்டத்தின் கறி வகைகளுள் முக்கியமானது அவியல். வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போட்டு செய்வது. இவர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கும் மற்றொன்று அரைக்கீரை.
அரைக்கீரை செய்யும் நாளில் பெரும்பாலும் புளிக்குழம்பு உண்டு. இரண்டையும் கலந்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது.

இரவு மீதமுள்ள அவியல்,குழம்பு,கீரை போன்றவற்றை மண் சட்டியில் போட்டு கிண்டி " பழங்கறி " செய்வார்கள் . நன்றாக சுண்ட வைப்பதால், " சுண்டைக்கறி " என்றும் சொல்லப்படுவதுண்டு.
" சுண்டைக் கறியின் சுவையறியார் அறியார் பண்டைத்தமிழ்ப் பெருமை"என்று திருநெல்வேலிக்காரன் பாட்டை வேறு எழுதி வச்சிருக்காம்னா
பார்த்துக்குங்க..

தமிழ்நாட்டின் பெருமைக்கும் சுண்டைக் கறிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா ? ( சவத்தை விட்டுத் தொலைங்க அண்ணாச்சி..)
வீடுகளில் இலை போட்டு பரிமாறுவது என்பது இங்கே தனி கலை.
சாப்பிடத் தானே போறோம் என்று வாழை இலையை இஷ்டப்படி போடக்கூடாது. திருமணம் போன்ற விஷேச வீடுகளில் இலையின் நுனிப்பகுதி இடதுகைப்பக்கம் இருக்குமாறு இலையை போட வேண்டும். தண்ணீரை ஒரு குத்தாய் எடுத்து தெளித்து இலையை துடைத்த பிறகு, முதலில் உப்பும், மிதுக்கு வத்தலும் ஓரத்தில் வைப்பார்கள். அடுத்து பிட்டு,பொரியல், அவியல்,பச்சடி வைத்து விட்டு,இலையின் கீழ்ப்பகுதியில் வலதுபுறத்தில் பருப்பும் வைப்பர்.
நடு இலையில் சோறு படைத்தவுடன், அதில் ஒரு பகுதியை இடது கைப்பக்கம் ஒதுக்கி விட்டு மீதியுள்ள சோற்றை பருப்பு, நெய், சாம்பார் விட்டு பிசைந்து உண்பார்கள். அதன் பிறகு ரசம், வத்தல் குழம்பு ,பாயாசம் (பாயசத்தை இலையில் ஊற்றி,அதன் மேல் அப்பளம்,பூந்தி போட்டு கலந்து உண்பது உண்டு ), மோர் என்ற ஒரு முறைப்படியே சாப்பிடுவதை மரபாய் வைத்துள்ளனர்.
இதிலே, வீட்டுக்கு மணமாகி வந்த புது மருமகள் பொரியலையோ, பருப்பையோ இடம் மாற்றி பரிமாறி விட்டால் போதும் .

" பொண்ணை என்ன வளத்துருக்காவோ ..
இலையில எப்படி பரிமாறணும்னு கூட தெரியாம .." என்று ஏகடியம் பேசுவார்கள்.
இதெல்லாம் ஒருசில சமூகத்தில் நடப்பதை சொல்லுகிறேன்.
" காலம் ரொம்ப மாறிப்போச்சு வே..இலையப் போட்டு சாதம் வச்சு நெய் ஊற்றுற காலமெல்லாம் போச்சு..சோத்துக்கு முன்னாடி பிரியாணின்னு ஒன்ன வச்சுட்டு போறான்..அத சாப்பிட்டு அப்புறம் சோத்தை திங்க முடியுமா வே..எந்தப் பேதீல போவான் இதைக் கண்டுபிடிச்சான்னு தெரியல.." என்று முணங்கும் பெருசுகளை இப்போதும் திருநெவேலியில் பார்க்கலாம். அவர்கள் எல்லாம் சொத்தை விற்று தின்னு தீத்த பரம்பரையின் கடைசிக் கண்ணியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

டவுண் ஆர்ச் அருகே உள்ள விஞ்சை விலாஸ் இட்டிலி புகழ் பெற்றது.
அங்கே ஆவி பறக்கும் இட்லிகள், தோசைகள் மட்டுமின்றி,
தேங்குழல், பாசிப்பருப்பு உருண்டை, தட்டை,சீடை, கைசுற்று முறுக்கு,
என பல தின்பண்டங்களும் கிடைக்கும்.
நீங்கள் நன்னாரி சர்பத் குடித்திருப்பீர்கள். நன்னாரிப்பால் குடித்திருக்கிறீர்களா ? அது இங்கே பேமஸ்.சில காலம் முன்பு வரை நாலஞ்சு மரப்பெஞ்சுகள் மாத்திரம் போடப்பட்டு பத்து பன்னிரண்டு பேரு மட்டுமே சாப்பிட முடியும் அளவிற்கு தான் இடம் இருந்தது. நேரமானாலும் பரவாயில்லை என்று வாசலில் ஒரு கூட்டம் காத்துக் கிடக்கும்.
" இந்த மாறி இட்டிலி வீட்ல கூட கெடைக்காது டே .." என்று சொல்லிக் கொள்வார்கள். தற்போது விசாலமாய் தோற்றமளிக்கிறது விஞ்சை விலாஸ்.
அங்கிருந்து சந்திப்பு வந்தால், நூறாண்டு பாரம்பரியமிக்க சந்திரவிலாஸ் ஓட்டல் ரொம்பவே பிரபலம். " சந்திர விலாஸ் காபி குடிச்சா, அடி நாக்கில் நாலு நாளைக்கு மணக்கும் " என்று சொல்லி பழைய நெனைப்பில் மூழ்கும் பல பெரியவர்கள் இன்றும் உண்டு. இங்கு சாம்பார்,ரசத்திற்கு தினமும் வீட்டில் இருந்து பொடி இடித்து வரும் என்று சொல்வார்கள். மதியம் இங்கே போடும் தவல் வடைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. வடையில் தேங்காய் பல்லு பல்லாய் நறுக்கி போட்டிருப்பார்கள். அக்காலங்களில் மதியம் தரையில் அமர்ந்து இலை போட்டுத் தான் சாப்பாடு சாப்பிடுவார்கள். இந்த பாரம்பரிய உணவு விடுதியில்.
பாலஸ் டி வேல்ஸ் சினிமாக்கொட்டகை அருகே இருந்த மாருதி விலாஸ் ஓட்டல் பூரிக்கிழங்கு மணம் பாளையங்கோட்டை வரை கூட அடிக்கும் என்பார்கள். ஓரணாவிற்கு ரெண்டு பூரியும் கை நிறைய கிழங்கும் கொடுப்பார்கள் என்று சொல்லும் 85 வயது காஷ்யபன்

" சாயந்தரம் இதை சாப்பிட்டம்னா மறுநாள் காலை வரை பசிக்காது "
என்று சொல்லி சிரிக்கிறார்.
பாளையங்கோட்டையில் பஸ் ஏறி, ஜங்ஷன் வந்து முந்திரிப்பருப்பு மெதுபக்கோடா அல்லது பாஸந்தி சாப்பிட ஒருத்தன் வருகிறான் என்றால் அவன் ராஜ் கஃபே பிரியன் என்று அர்த்தம். சந்திப்பு பேருந்து நிலையம் எதிரே இருந்த ராஜ் கஃபேயில், நெல்லைக்கு வரும் திரைப்பட நட்சத்திரங்கள் சாப்பிட்டதாக சொல்வார்கள். கை விரல்களில் ஏழெட்டு மோதிரங்கள் மின்ன கோல்டு பிரேம் கண்ணாடி, மொறுமொறு வெள்ளை வேட்டி சட்டையில் சிரித்த முகத்துடன் இருந்த நடராஜ பிள்ளை முகத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள். சின்ன வயதில் கொழும்பில் ஓட்டலில் பணிபுரிந்த அனுபவம், அந்த அனுபவத்தை திருநெல்வேலியில் புகுத்தி வெற்றி கண்ட மனிதர். மினி காபி என்ற கான்செப்ட்டை திருநெல்வேலியில் 1970 களிலேயே அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இங்கே காபி 70 பைசா. மினி காபி 40 பைசா.

பித்தளை வட்டகையில் உள்ள டம்ளரில் நுரை பொங்கி வழியும் ராஜ் கஃபே காபி எவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.
இங்கு மூன்று நேரமும் கூட சாதம் கிடைக்குமாம்.
நெல்லை லாட்ஜ் வளாகத்தில் இருந்த மற்றொரு உணவகம் சுப்ரபாத்.
வீட்டு சாப்பாடு போல இருக்கும்.
சாலைக்குமாரசாமி கோவில் எதிரே இருக்கும் கௌரி ஷங்கர் உணவு விடுதியில் அடைஅவியல் பிரபலம். திருபாகம் சாப்பிடணும் என்றால், சங்கர் கஃபே தான்.

இட்லி,தோசை தவிர்த்து சப்பாத்தி பிரியர்கள் விரும்பும் ஓட்டல் என்றால் அது ராஜஸ்தான் ஓட்டல் தான். சந்திப்பு தானா மூனா கட்டிடத்தில், மாடியில் முகம்மத் ராஃபியின் இந்திப்பாடலை ரசித்துக் கேட்டபடியே சப்பாத்திகளை எண்ணிக்கையின்றி சாப்பிடலாம்.
எண்ணெய் இல்லாத மெதுவான சப்பாத்திகளுக்கு துணையாக சால்னா, வெள்ளரிக்காய், தக்காளி,வெங்காய துருவல், கெட்டிதயிர், ஒரிஜினல் மாம்பழ ஜூஸ் என சுவையான சாப்பாடு. வட இந்திய ஓட்டல் ஒன்றில் இருப்பதான உணர்வு எப்போதும் இருக்கும் இங்கே.

பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் இருக்கும் அளவிற்கு உணவகங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கூறினார்.
ஒரு காலத்தில் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் இருந்த தோணி செட்டியார் கடையில் இட்லி,தோசை, ஊத்தாப்பம் விலையும் மலிவு, ருசியோ அதிகம் என்று சொல்லுவார் எல்ஐசி இசக்கிராஜன்.
இங்கிருந்த குமரன் கஃபே, சங்கர் கஃபே போன்ற ஓட்டல்களும் அக்காலத்தில் பிரபலமானவை என்கிறார்.
அத்தியாயத்தில் முன்பு குறிப்பிட்ட சொதிசாப்பாடு எங்கு கிடைக்கும் என்று உங்கள் மனதில் இதற்குள் தோன்றியிருக்க வேண்டும்.
பாளையங்கோட்டை அருணாச்சலம் பிள்ளை ஒரு பிரபல தவசுப்பிள்ளை . தவசுப்பிள்ளை என்ற வார்த்தை கூட இங்கு தான் அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்.நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் தாமு,வெங்கடேஷ் பட், மல்லிகா பத்ரிநாத் போன்றோரை செஃப் என்று சொல்வோம் இல்லையா..
அவர்களைத் தான் நெல்லையில் தவசுப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.
உணவு ஆர்டரின் பேரில் தயாரித்துக் கொடுப்பவர் தவசுப்பிள்ளை அருணாசலம்பிள்ளை. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள இவரது வீட்டை கடக்கும் போதெல்லாம் சாம்பார்,அவியல் வாடை மணக்கும்.

நெல்லையின் சொதி சாப்பாடு தயார் பண்ணுவதில் நம்பர் ஒன் இவரே. 500 பேருக்கு சொதிச்சாப்பாடு என்றாலும், தேர்ந்த ருசியுடன் தயார் செய்து தருவார். பல அலுவலகங்களில் பணிநிறைவு விழாக்கள், இட மாறுதல் போன்ற நிகழ்விற்கு விருந்து சாப்பாடு எனில்,
அருணாச்சலம் பிள்ளை எண்ணிற்கே போன் போகும். அலுவலக வாசலுக்கே வண்டியில் வந்து இறங்கி இலை போட்டு பரிமாறி விட்டு செல்வார்கள் அவரது பணியாட்கள். 100 பேருக்கு நாம் ஆர்டர் செய்தால்,
125 பேர் கூட வயிறு முட்ட சாப்பிடலாம். விலையும் குறைவு.
" நம்மிடம் ஆர்டர் கொடுத்தால், சாப்பாடு தட்டுப்பாடு என்ற ஆவலாதியே வரக்கூடாது சார்.. மனுசங்க வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, வாழ்த்தி விட்டுப் போகணும் " என்பார் தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை.
தற்போது அவரது மகன் நடத்தி வருகிறார்.
நெல்லையில் ஏராளமான உணவகங்கள் வந்து விட்டன.இருந்தாலும், மேலே சொன்ன உணவகங்கள் காலாகாலத்துக்கும் பெயர் சொல்லக் கூடியவை.

02/08/2022
07/04/2022

திருநெல்வேலி, தூத்துக்குடி 🎿🎿....

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி, தூத்துக்குடியை சேர்ந்தவர்களே.
சென்னையின் பெருமைக்கு காரணம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களே,

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே,

தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பர்,

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார்,

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தொழில் அதிபர்கள்

T V Sundram Iyengar ( TVS Group ),
S Anatharamakrishnan ( Amalgamations Group ),
Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ),
AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi Masala Group ),
V G Paneer Das ( Founder, VGP Group ),
M G Muthu ( Founder, MGM Group ),
Everest Stabilizers,
Ideal Cookwares,
Prestige Cookwares,
Aryaas group of hotels,
VVD coconut Oil,
Vasanth & CO , TV
RMKV,
Pothys,
Saravana Stores,
Jeyachandran Textiles,
Aarthi Scans,
Bharath Scans,
Dr.Sivanthi Adhiththanaar
( Dina thanthi daily ).

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு வற்றாத் ஜீவநதி தாமிரபரணி தான்...தென் இந்திய 8 ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி தாமிரபரணி தான்.
தாமிரபரணி தான் நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி தாமிரபரணி தாய் தான்,

தமிழ்நாட்டின் தைரியமான பெண்கள் என்றால் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்,

தமிழக புவியியல் அமைப்பில் கடல், மலை, காடு, வயல், பாலைவனம் என ஐந்து வகை நிலங்களும் அமையப் பெற்றமாவட்டம்,
Vikramasingapuram, தென்காசி, செங்கோட்டை, களகாடு, கொண்ட பகுதிகள் குறிஞ்சி யாகவும், அம்பை, புளியங்குடி, சுரண்டை பகுதிகள் முல்லையாகவும், கல்லிடைக்குறிச்சி, ராயகிரி, சேரன்மகாதேவி, ஆலங்குளம் பகுதிகள் மருதமாகவும், திசையன்விளை, கூடங்குளம் பகுதிகள் நெய்தல் ஆகவும், ராதாபுரம், தேரிகாடு, பகுதிகள் பாலையாகவும், கொண்ட மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்தான்.
இப்படி ஒரு புவியியல் அமைப்பு வேறு எங்கும் இல்லை,

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர் வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே
முடியாது,

தமிழில் எங்கள் நெல்லை தமிழுக்கு இணை எங்கள் நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என நிர்வாக ரீதியாக பிரிந்து இருந்தாலும் எங்கள் மூன்று மாவட்ட மக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை,

ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நெல்லை மக்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவார்கள். சென்னை, கோவை. திருச்சி.
மற்றும் மதுரை யை விட, முதல் முன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள்,

பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் நெல்லை தான்..

இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும் தான்,

உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி, இந்தியாவில் வாழ தகுதியான
நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை,
பாரதியார்,
சுப்பிரமணிய சிவா,
புலித் தேவன்,
வீர பாண்டிய கட்டபொம்மன்,
மாவீரன் சுந்தரலிங்கம்,
வாஞ்சிநாதன்,
வீரன் அழகுமுத்துகோன்,
ஒண்டி வீரன்,
மார்ஷால் நேசமணி,
தோழர் ஜீவா,
வீரமாமுனிவர்,
முஹமது இஸ்மாயில் போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணிய பூமி.
தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த பூமி நெல்லை.
கர்ம வீரர் காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும் அவருக்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மக்கள் மீது அன்பு அதிகம். மதிய உணவு திட்டத்தை அவர் கருகொண்ட இடம் சேரன்மகாதேவி ரயில்வே கேட்.

நெல்லைகார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..

மதச்சார்பின்மைக்கு சான்று நாங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச் யை பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள் நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.

Tirunelveli Medical College( govt ) TMC,
Govt College of Engg Tirunelveli,
Tirunelvili Law College,
Govt agricultural college,
Govt Siddha Medical College,
Govt Veterinary College,
St Xavier's College,
Sadakuthullah Appa college,
St John's College,
MDT Hindu College,
Sarah Tucker college, Rani Anna College, என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை.... அதனாலேயே தமிழகத்தின் Oxford என்று அழைக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி முதலிடம்.
பதிவு திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று.
விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.
முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் திருநெல்வேலி தான்.

தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்கு பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். *District of Youth*.

Address

Tirunelveli Dist
Tirunelveli
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vickramasingapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share