அம்மா

அம்மா மக்களால் நான்… மக்களுக்கா நான்… அம்மாவின் கழக கொள்கை மற்றும் செயல் திட்டங்களை இணைய வாயிலாக கொண்டு சேர்ப்பது தலயாய கடமை.
(290)

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள அராஜக அரக்க ஆட்சியை எல்லாம் வல்ல "பழனிசாமி" அருளால் வீழ்த்தி, மீண்டும் மக்களுக்கான ஆட்சி 2026ல...
07/11/2024

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள அராஜக அரக்க ஆட்சியை எல்லாம் வல்ல "பழனிசாமி" அருளால் வீழ்த்தி, மீண்டும் மக்களுக்கான ஆட்சி 2026ல் அமைக்க உறுதியேற்போம்!

#சூரசம்ஹாரம்

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி...
30/10/2024

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் 'தீபாவளி' வாழ்த்துச் செய்தி

நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கள் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

14/10/2021

#அதிமுக_தொண்டனின்_உள்ளக்குமுறல்.!

கடலூர் திமுக எம்பி ரமேஷ் அவரது முந்திரி தொழிற் சாலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசுவை எம்பி ரமேஷும் அவரது ஆட்களும் அடித்து கொலை செய்த விவகாரத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கையில் எடுத்து கொண்டு அந்த குடும்பத்திற்கு நியாயம் கேட்டு போராடியிருக்கலாம்..அஅதையும் செய்யவில்லை...திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே..திமுகவினரின் அராஜகம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. தற்போது திமுக எம்பி ஒருவரே தொழிலாளி ஒருவரை அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்குமா என்ற அச்சத்தை உண்டாகியுள்ளது...? இது போன்ற விவகாரத்தில் எதிர்க் கட்சி என்ற முறையில் நியாயம் கேட்டு எதிர்த்து அரசியல் செய்திருக்க வேண்டாமா?

அதோடு இல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பில் நிதியுதவி அளித்திருந்தால் அரசியல் களமே தமிழகத்தில் மாறியிருக்கும்.
ஆனால் மாறாக அதிமுக ஏதும் செய்யவில்லை...இதுவே அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால்..திமுக இந்த சம்பவத்தை அஸ்த்திரமாக பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்திருக்கும். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஒவ்வொரு அரசியல் நகர்வையும் துள்ளியமாக பயன்படுத்திக் கொண்டே வந்தது...நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதா விவகாரம் முதல் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை மகன் இறப்பு வரை அதிமுக வை வசைபாடி திமுக எதிர்ப்பு அரசியல் செய்து மக்கள் மனங்களில் மாற்றத்தை கொண்டு வந்தது...

ஆனால் அண்ணன்கள் இரட்டை குழல் துப்பாக்கிகளான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கடலூர் திமுக எம்பி ரமேஷ் விவகாரத்தை அரசியல் செய்து பயன்படுத்த தெரியாமல் கோட்டை விட்டனர் என்றே கூற தோன்றுகிறது..அது ஏன் என்றே தோன்றவில்லை..!
ஒரு வேலை ஆளும் கட்சி தங்கள் மீது அரசியல் அழுத்தம் கொடுத்தால்தான் என்ன.? இல்லையெனில் வழக்குகள் தொடுத்தால்தான் என்ன..?நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காணாத வழக்கா..! அதில் காணாத வெற்றியா..! உங்கள் பின்னால் மாபெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற மாபெரும் இயக்கம் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்...

நீங்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்த தகுதி இல்லாதவர்களாக மாற நேர்ந்தால்.. இப்படிப்பட்ட தலைமையை நம்பி தொண்டர்கள் எப்படி அரசியல் செய்வார்கள்...

திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் அரசியல் செய்கிறார் என்று முதல்வராக இருந்த எடப்பாடியார் அவர்கள் கூறியதற்கு, அரசியல் கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று திமுக பதிலளித்தது.

இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் அய்யகோ பாருங்கள் ஆளும் கட்சி எம்பி ஒருவரே ஒரு தொழிலாளியை அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற கொலைகார ஆட்சி தேவையா.? என்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் பரப்புரை செய்து அதிமுகவை ஓட விட்டிருப்பார்கள்.

ஆனால் அதிமுக தலைமை கிணற்றில் விழுந்த கல் போன்று கிடந்ததால் ஆளும் திமுக விஸ்வரூப வெற்றி பெற்று உள்ளது.

அதிமுக அரசியல் செய்யாமல் போனால் அம்மா வளர்த்த கட்சி எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி 50 வருடம் கொண்டாடும் இந்த நேரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குகூட நீடிக்க முடியாமல் போகும். அப்படி போனால் அது தமிழகத்திற்கும் நல்லதல்ல..

இனியாவது அரசியல் செய்வீர்களா.? செய்வீர்களா.?

30/03/2021
 #அம்மா_உங்களை_வாழ்த்த_வயதில்லை  #வணங்குகிறேன்_அம்மா  தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான் அம்மா அரசியலில் உன்னை தவிர்...
18/02/2021

#அம்மா_உங்களை_வாழ்த்த_வயதில்லை

#வணங்குகிறேன்_அம்மா


தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான் அம்மா

அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை அம்மா

கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது
தனியாக நின்று மக்கள் படையோடு சேர்ந்து
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ

எத்தனையோ போராட்டங்கள்
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில்
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும் அம்மா

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய் அம்மா

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும்
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில்
உன் சிரித்த முகம் நீக்கமற நிறைந்து இருக்கிறது...!

இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றுமே நிலைத்து நிற்கும்
மக்களின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

அம்மா உங்களை போற்றி வணங்கும்
உங்களின் கடைக்கோடி தொண்டன்
🙏🙏🙏K.பாலசந்தர் 🙏🙏🙏

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when அம்மா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share