லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் - ஏர்வாடி

  • Home
  • India
  • Tirunelveli
  • லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் - ஏர்வாடி

லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் - ஏர்வாடி லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் சார்பாக ?

💙அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு💙"நபியே! யாவற்றையும் படைத்த உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக" ...
24/08/2018

💙அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு💙

"நபியே! யாவற்றையும் படைத்த உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக" அல்குர்ஆன் (96:1)

"வாழ வைக்கும் வாசிப்பு பழக்கம்"

பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

இன்ஷா அல்லாஹ் இன்று 24-08-2018 மாலை 7 மணியளவில் நமது #லெப்பைவளவு_நடுத்தெரு_முகைதீன்_பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
லெப்பைவளவு இஸ்லாமிய நூலகம்,
ஏர்வாடி

💙அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.💙👍 👍 #மாணவர்களுக்கான_கல்வி_வழிகாட்டுதல்_நிகழ்ச்சிவழிகாட்டுதல் என்பது ஒவ்வொ...
05/04/2018

💙அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.💙

👍 👍
#மாணவர்களுக்கான_கல்வி_வழிகாட்டுதல்_நிகழ்ச்சி

வழிகாட்டுதல் என்பது ஒவ்வொரு தனி மனிதனினுள் புதைந்து கிடக்கும் திறைமைகளைக் வெளிக் கொண்டுவருவதும்.,
அதன்படி தன்னுடைய வாழ்க்கையை ஒருவர் மேம்படுத்திக் கொண்டு தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வழியில் அமைத்துக் கொள்வதற்கான அறசெயலே அன்றி வேறில்லை..

"ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத்தினாலேயே அன்னாருக்கு 'ஸுஜூத்' செய்யுமாறு அல்லாஹ் அவர்களை பணித்தான். ஸூரத்துல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது".-அல் குர்ஆன்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14-04-2018 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை 10th,11th,12th மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance Program) நமது #லெப்பைவளவு_நடுத்தெரு_முகைதீன்_பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது..

மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

இப்படிக்கு,
லெப்பைவளவு இஸ்லாமிய நூலகம்,
ஏர்வாடி.
Suhail-9597181899
Samsudeen-9597451033

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!லெப்பைவளவு ஜமாத் மற்றும் L.V இஸ்லாமிய நூலகம் & இளைஞர்கள்இணைந்து நடத்தும்..."ஏர்வாடி அனைத...
21/01/2016

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

லெப்பைவளவு ஜமாத் மற்றும்
L.V இஸ்லாமிய நூலகம் & இளைஞர்கள்
இணைந்து நடத்தும்...

"ஏர்வாடி அனைத்து மஹல்லா ஜமாத்கள் தழுவிய மாபெரும் தீனிய்யாத் போட்டிகள் &
மீலாது நபி பொதுக் கூட்டம்"

>>>> தீனிய்யாத் போட்டிகள்:
நாள்: 23/01/2016 சனி.
நேரம்: காலை 9 மணி முதல்..
இடம்: லெப்பைவளவு ஈத்கா திடல்.

>>>> மீலாது நபி பொதுக் கூட்டம் & பரிசளிப்பு.
நாள்: 24/01/2016 ஞாயிறு.
நேரம்: மாலை 4 மணி.

>>> ஏர்வாடி அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

>>>> சிறப்புரை > தலைப்பு

21/10/2015
கட்டுரைப் போட்டி 2015.லெப்பைவளவு ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் L.V இஸ்லாமிய நூலகம் இணைந்து நடத்தும் மீலாது நபி கட்டுரை...
14/10/2015

கட்டுரைப் போட்டி 2015.

லெப்பைவளவு ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் L.V இஸ்லாமிய நூலகம் இணைந்து நடத்தும் மீலாது நபி கட்டுரைப் போட்டி.

பின் வரும் இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுதலாம்.

தலைப்புகள்:
1) "இன்றைய பிரச்சனைகளும்
இஸ்லாம் கூறும் தீர்வுகளும்."

2) "நாமும் நமது ஊரின் நீராதாரங்களும்"

** அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் போட்டியில் பங்கு பெறலாம்.

** ஒவ்வொரு தலைப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கட்டுரைகளுக்கு சிறப்புப் பரிசுகளும்,
கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் 27/12/2015 அன்று நடைபெறும் லெப்பைவளவு மீலாது விழா நிகழ்ச்சியில் வைத்து வழங்கப்படும்.

******* """""""""" ******** """"""""" *******
*** கட்டுரைப் போட்டியின் விதிமுறைகள் ***
>>> போட்டியாளர் ஏர்வாடியைச் சார்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். வயது வரம்புகள் கிடையாது.

>>> ஒரு நபருக்கு ஒரு கட்டுரை மட்டுமே எழுத அனுமதி.

>>> கட்டுரைகள் பிற நூல்களின், பிற கட்டுரைகளின் நேரடித் தழுவல்களாக இருக்கக்கூடாது.

>>> A/4 அளவுள்ள பேப்பரில் பக்கத்திற்கு 15 வரிகளுக்கு மிகாமல், 8 முதல் 10 பக்கங்களall்குள் இருக்க வேண்டும்.

>>> போட்டியாளர் தனது பெயர், தந்தை பெயர், வீட்டு முகவரி மற்றும் தொடர்புக்கான எண்ணைத் தனியாக ஒரு பேப்பரில் எழுதி இணைத்திருக்க வேண்டும்.

>>> கட்டுரைகளை மின்னஞ்சல் (E-mail) வழியாக அனுப்புவோர் pdf Format -ல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

>>> கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10/12/2015.

>>> நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

*** கட்டுரைகளை நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டிய முகவரி:

1) மீலாது நபி கட்டுரைப் போட்டி.
L.V இஸ்லாமிய நூலகம்,
தெற்கு மெயின்ரோடு,
லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் அருகில்,
ஏர்வாடி pin: 627103.
திருநெல்வேலி மாவட்டம்.

2) S. சேக் முஹம்மது.
"மர்ஹபா சூப்பர் மார்கெட்."
No: 2 S.R.S பில்டிங்,
4-வது தெரு,
ஏர்வாடி pin: 627103
திருநெல்வேலி மாவட்டம்.

மின்னஞ்சலில் அனுப்ப..:
[email protected]

இவண்:
லெப்பைவளவு ஜமாத்தார்கள் & இளைஞர்கள் மற்றும்,
L.V இஸ்லாமிய நூலகம்.
தொடர்புக்கு: 9629966858
Share to all

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...அல்ஹம்துலில்லாஹ்1. ஐக்கியப் பொருளாதாரப்பேரவை ,,அல...
08/05/2015

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
அல்ஹம்துலில்லாஹ்

1. ஐக்கியப் பொருளாதாரப்
பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ்
ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006 தொலைபேசி:
2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட்
பேங்க், ராயபேட்டை,
நெடுஞ்சாலை, சென்னை – 14
தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக்
பவுண்டேசன், 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத்
பண்ட் பவுண்டேசன், 4 மூர்ஸ்
ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள்
டிரஸ்ட், ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 34

7. முஹம்மது சதக்
அறக்கட்டளை, 133 , நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117
ஜெனெரல் பேட்டர்ஸ்
சாலை, சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்,
ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம்
தொண்டு இயக்கம், 118 /
பி வேப்பேரி நெடுஞ்சாலை,
சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம்
பட்டதாரிகள் சங்க வெல்பர்
டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11
வது தெரு, அண்ணா நகர் –
சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம்
அறக்கட்டளை, மாண்டியத் சாலை,
எழும்பூர் – சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத்
தெரு, ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை,
5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்,
Managing Director Professional
Courier’s, 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18

16. மியாசி, புதுக்
கல்லூரி வளாகம், பீட்டர்ஸ்
ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18

மாஷா அல்லாஹ் .... உதவி செய்ய
முன்வந்திருக்கும்
நிறுவனங்களுக்கும் ,
தனியார்களுக்கும் எல்லாம் வல்ல
ரஹ்மான் அவர்களின்
செல்வத்தை இரடிப்பாக்கி கொடுப்பானாக !..
நல்ல ஆரோக்கியத்தையும்
இவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் அனைவருக்கும்
அல்லாஹ் நல்லாரும்
புரிவானாக !.. ஆமீன் ..

எனதருமை சகோதரர்களே !...
மேற்காணும் தகவல்கள் பலரையும்
சென்றடைய share செய்யுங்கள்.

அல்லது காப்பி பேஸ்ட்
செய்து உங்கள் வாலில்
தனிப்பதிவாக
போட்டு உதவுங்கள்.

இன்ஷா அல்லாஹ் ...

ஏர்வாடி மாணவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்!தமிழகத்தில் 12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.மா...
08/05/2015

ஏர்வாடி மாணவர்களுக்கு
நமது நெஞ்சார்ந்த
நல் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் 12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
மாநிலத்தின் மொத்த தேர்ச்சி வீதம் 90.6 விழுக்காடு.
மாணவிகள் 93.4%
மாணவர்கள் 87.5%

ஒவ்வொரு வருடமும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது.
2010-ல் 85.2%
2011-ல் 85.9%,
2012-ல் 86.7%,
2013-ல் 88.1%,
2014-ல் 90.6%
2015-ல். 90.6%
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சமநிலையில் வந்துள்ளது.

ஏர்வாடியின் மேல் நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கடந்த காலங்களைவிட உயர்ந்திருப்பதுமகிழ்ச்சிக்குறியதே
இவ்வாண்டு நமது ஊர் பள்ளிகளில் படித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்:

1) முஹம்மது தவ்சீஃப் - மதிப்பெண் 1153.
ஒன்பதாவது தெரு.
அல்-ஹுதா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி.

2) ஷான்வாஸ் - மதிப்பெண் 1124.
முகைதீன் பள்ளி தெரு, ஹாஜி நகர்.
ராணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி.

3) யாகூப் உசேன் - 1113.
மூன்றாவது தெரு.
அல்-ஹுதா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி.

ஏர்வாடி அல்லாத வள்ளியூர் பள்ளிகளில் படித்த ஏர்வாடி மாணவர்களில் சிலர்,
இவர்களில் சிலரை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்,
ஏர்வாடியின் பள்ளிகளில் படித்த ஏர்வாடி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் இவ்வாறு வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த் நல்வாழ்த்துக்கள்.
மதிப்பெண்களை தவறவிட்ட மாணவர்கள் கலங்க வேண்டாம்.
பெற்றோர்கள் அவர்களை வசைபாட வேண்டாம் முயற்ச்சிக்கான வழிகள் நிறையவே இருக்கிறது.
நிச்சம் அவை உங்களுக்கான வெற்றியை மீட்டெடுத்துத் தரும்.
கல்விப் பயணத்தில் உங்கள் இலக்குகளை அடைய இறைவன் துணை புரிவானாக!

மதிப் பெண்கள் என்பது ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்கு தானே அல்லாது ஒருவரின் அறிவை மதிப்பிடுபவை அல்ல அவை.
எனவே மதிப் பெண்களை இலட்சியமாகக் கொள்ளாமல் மதியைக் கூர்மையாக்குவதை இலட்சியமாக்கினால் மதிப் பெண்களில் மட்டுமல்ல வாழ்வின் எல்லா நிலைகளிலும் மதிக்கப்படுவோம் என்ற சிந்தனையோடு உங்கள் அடுத்தடுத்த அடிகளை முனெடுத்து வையுங்கள்.

பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக,
ஆசிரியர்கள் மற்றும் வயதில் பெரியவர்களை மதித்தவர்களாக,
நமது கலாச்சார மரபு சார்ந்த ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடப்பவர்களாக
உங்கள் அறிவை பெருக்குங்கள்.
காரணம்
உங்கள் தேசமும், சமூகமும் எதிர்பார்க்கும் பிரகாசமான எதிர்காலம் உங்கள் கைகளில்......

ஆக்கம்: "நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்"

Address

லெப்பை வளவு. ஏர்வாடி
Tirunelveli
627103

Alerts

Be the first to know and let us send you an email when லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் - ஏர்வாடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to லெப்பை வளவு இஸ்லாமிய நூலகம் - ஏர்வாடி:

Share

Category