Thamirabarani River - தாமிரபரணி ஆறு

Thamirabarani River -  தாமிரபரணி ஆறு The Thamirabarani River is a perennial river that originates from the famous Agastyarkoodam peak of The old Tamil name of the river is Porunai.

The Thamirabarani River (Porunai) (Tamil: தாமிரபரணி(பொருனை) is a perennial river that originates from the famous Agastyarkoodam peak of Pothigai hills of the Western Ghats, above Papanasam in the Ambasamudram taluk. It flows through Tirunelveli and Tuticorin districts of the Tamil Nadu state of southern India into the Gulf of Mannar. It was called the Tamraparni River in the pre-classical period,

a name it lent to the island of Sri Lanka. From the source to sea, the river is about 185 kilometres (115 mi) long and is the only perennial river in South India. Its many name derivations of Tan Porunai include Tampraparani, Tamraparni, Tamiravaruni. Tan Porunai nathi finds mention by classical Tamil poets in ancient Sangam Tamil literature Purananuru. Recognised as a holy river in Sanskrit literature Puranas, Mahabharata and Ramayana, the river was famed in the Early Pandyan Kingdom for its pearl and conch fisheries and trade. The movement of people, including the faithful, trade merchants and toddy tapers from Tamraparni river to NorthWestern Sri Lanka led to the shared appellation of the name for the closely connected region. One important historical document on the river is the treatise Thamirabarani Mahathmiyam. It has many ancient temples along its banks. In the Mahābhārata (3:88) the river is mentioned as "Listen, O son of Kunti, I shall now describe Tamraparni. In that asylum the gods had undergone penances impelled by the desire of obtaining salvation".

தாமிரபரணி ஆறு 2021 🙏💥👍🥰🤩🌧🌧🌦⛈☔️💦💧
18/01/2021

தாமிரபரணி ஆறு 2021 🙏💥👍🥰🤩🌧🌧🌦⛈☔️💦💧

பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு..

ஆடிஅமாவாசை - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!! 🤝💧
19/07/2020

ஆடிஅமாவாசை - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!! 🤝💧

ஆடிஅமாவாசை - தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் நடத்த தடை
=======
மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
============

கொரோனா தொற்று பரவலின் காரணமாக இராமேஸ்வரம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தடை உத்தரவானது மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 'தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கக்கூடிய ஒரே புண்ணிய நதி தாமிரபரணி நதியாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற இடத்தில் சமவெளி பகுதியில் தொடங்கி, நதியானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. சுமார் 123 கி.மீ நீண்ட பயணம் செய்யும் இந்த தாமிரபரணி நதிக்கரைவோரத்தில் பல பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயங்களில் ஆண்டுதோறும் படித்துறைகளில் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலிருந்தே பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மற்றும் மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் மேலும் பல முக்கிய சம்பிரதாய சடங்குகளை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, அந்த புண்ணிய நதியில் நீராடுவதும் வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முழுவதும் ஏற்கனவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், முன்னோர்களுக்கு திதி போன்ற சடங்குகளை செய்யும் போது தொற்று பெரிதளவு பரவ வாய்ப்பிருப்பதாலும், நெல்லை மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் அதிகமாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல், இராமேஸ்வரம் பகுதிகளிலும் மக்கள் அனைவரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், இராமேஸ்வரத்திலும் மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பவானி கூடுதுறை, திருச்சி, குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திதி தர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

ஜீவ நதி தாமிரபரணி!!
13/07/2020

ஜீவ நதி தாமிரபரணி!!

30/11/2019

பாபநாசம் ஆற்றின் படித்துறை மற்றும் கரையோரம் - தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாபநாசம் அணையில் இருந்து அதிகளவில் தண....

11/10/2019

ஆற்றில் குளிக்கும் போது உஷாராக இருங்க மக்களே..!

12/01/2019
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை======================தூத்த...
12/01/2019

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
======================

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்று நீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வழங்கும் 20 எம்.ஜி.டி திட்டம் நடைமுறைக்கு வந்தது. தினந்தோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து ''குடிநீர்'' என்ற பெயரில், தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 15 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்பட்டு வந்தது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும்'' என்று தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தடை:
==

விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ந்தேதி ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும்'' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது.

ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்ககோரி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று (ஜன.,11) நீதிபதிகள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று அதிரடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Dinamalar

18/12/2018

Address

Agastya Mala
Tirunelveli
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thamirabarani River - தாமிரபரணி ஆறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share