தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு-மேலப்பாளையம் மண்டலம்

  • Home
  • India
  • Tirunelveli
  • தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு-மேலப்பாளையம் மண்டலம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு-மேலப்பாளையம் மண்டலம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மேலப்பாளையம் மண்டலத்தின் அதிகாரபூர்வ தளம்...

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் இரவு நேரம் கடையில் குப்பைகளை வாங்குவதற்கு வாகனம் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது...
08/07/2026

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் இரவு நேரம் கடையில் குப்பைகளை வாங்குவதற்கு வாகனம் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது கோரிக்கையின் பலனாக இரவு நேரம் கடைகளில் குப்பைகளை வாங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் வாகனம் அனுப்பியதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மேலப்பாளையம் மண்டலம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பணியை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைப்பின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த ...
03/07/2026

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைப்பின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரவு நேரங்களில் மாநகராட்சி வாகனம் மூலம் கடைகளில் குப்பை வாங்கும் பணி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆனால் தற்போது இரண்டு மாதங்களாக இரவு வாகனம் தொடர்ச்சியாக மேலப்பாளையத்திற்கு மட்டும் வருவதே இல்லை மற்ற பகுதிகளில் இந்த பணி சரியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மேலப்பாளையத்தில் மட்டும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்து இன்று மேலப்பாளையம் மாநகராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கும் மேலப்பாளையம் மண்டல சுகாதார ஆய்வாளர் அவர்கள் இரவு நேர வாகனத்தை மேலப்பாளையத்திற்கு மறுபடியும் தொடர்ந்து தொடர வேண்டி மனு அளிக்கப்பட்டது மேலும் வாகனம் சரிவர வராத காரணத்தினால் சாலையில் குப்பைகள் தேங்கும் அவல நிலையும் குப்பையில் இருக்கும் உணவை உண்பதற்காக மாடுகள் சாலையில் திரிவதையும் சுட்டிக்காட்டி போக்குவரத்திற்கு இடையூறும் சுகாதாரத்திற்கு சீர்கேடும் நடப்பதை தெரிவித்து மேலப்பாளையம் வணிகர் சங்க தலைவர் அண்ணன் பீர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மேலப்பாளையம் வணிகர் சங்க செயலாளர் வாஹித் மற்றும் செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் சென்று இன்று மனு அளித்த மேலும் இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக 50வது வார்டு செயலாளர் அவர்களும் உடன் இருந்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து வாகனத்தை சரியான முறையில் அனுப்பாமல் சாலையில் குப்பைகள் தேங்கும் போது வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதில் எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொண்டோம்

மாவட்டத் தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று மேலப்பாளையம் வணிகர் சங்க தலைவர் பீர் மஸ்தான் அவர்களின...
06/06/2026

மாவட்டத் தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று மேலப்பாளையம் வணிகர் சங்க தலைவர் பீர் மஸ்தான் அவர்களின் தலைமையில் பகுதி செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்விநியோகம் தடைபடுவதை சனிக்கிழமை போன்ற முக்கிய வணிக நடைபெறும் நாட்களை தவிர்த்து வேறு நாட்களை தேர்வு செய்து கொள்ளும்படியும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு மதியம் 2 மணிக்குள் பணிகளை முடித்து மின் விநியோகம் தடையின்றி வழங்கும்படியும் மேலப்பாளையம் வணிகர் சங்கம் சார்பாக மின்சார துறை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகள் வைத்து கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

#மேலப்பாளையம்

வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல்,நெல்லை, மேலப்பாளையம் ரெட்டியார்ப்பட்டி ர...
24/01/2026

வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்
சங்க நிர்வாகிகள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல்,

நெல்லை, மேலப்பாளையம் ரெட்டியார்ப்பட்டி ரோட்டில் தமிம் அன்சாரி என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

இன்று மதியம் லோடு இறக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வரும் கடை உரிமையாளர் திரு. தமிம் அன்சாரி மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆகியோரை சந்தித்து மேலப்பாளையம் வணிகர் சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பகுதி தலைவர் பீர் மஸ்தான்,செயலாளர் நேசம் வாஹித் மற்றும் துணை செயலாளர் A.S சிக்கந்தர் ஆகியோர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்ததோடு,

பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து மேலப்பாளையத்தில் வணிகர்கள் பாதிக்கப்படுவதை காவல்துறை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக் கொண்டனர்.

மேலப்பாளையத்தில் கடையில் நுழைந்து வியாபாரியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஎங்கள் பகுதிக்குட்பட்ட ஒரு வணி...
24/01/2026

மேலப்பாளையத்தில் கடையில் நுழைந்து வியாபாரியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

எங்கள் பகுதிக்குட்பட்ட ஒரு வணிக நிறுவனத்தில் இன்றைய தினம் சிலர் அனுமதியின்றி கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை தாக்கிய சம்பவத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

வணிகர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்கான சூழல் நிலைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் பொறுப்பும்.

இச்சம்பவத்தை அதிகாரிகள் கவனித்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடும், தமிழக அரசும் காவல்துறையும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் இந்த பேரமைப்பு கோருகிறது.

இப்படிக்கு,
மேலப்பாளையம் வணிகர் சங்கம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

நாளை  28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வணிகர் நல வாரிய உறுப்பினராக சேர்வதற்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: நம்பர்...
27/08/2025

நாளை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வணிகர் நல வாரிய உறுப்பினராக சேர்வதற்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்:

நம்பர் 104 நேதாஜி ரோடு M.A.S. காம்ப்ளக்ஸ், இத்தாலியன் பேக்கரி அருகில் வரக்கூடியவர்கள்

1. தங்களின் மாநகராட்சி வரி ரசீது அல்லது G.S.T. சான்றிதழ்
2. ஆதார் அட்டை நகல்.
3. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவும்.

 #வருந்துகிறோம் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
03/08/2025

#வருந்துகிறோம் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

வணிகர்களின் பாதுகாவலருக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்💐
05/06/2025

வணிகர்களின் பாதுகாவலருக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்💐

வணிக சொந்தங்களுக்கு வணக்கம்,திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இரவு 10:30 மணிக்கு கடைகளை அடைக்கச் சொல்லி காவல் துறையினர் கட...
23/05/2025

வணிக சொந்தங்களுக்கு வணக்கம்,

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இரவு 10:30 மணிக்கு கடைகளை அடைக்கச் சொல்லி காவல் துறையினர் கட்டாயப்படுத்துகின்றனர்,

இந்த கட்டாயத்தினால் பாதிக்கப்படும் உணவகங்கள் டீக்கடைகளின் உரிமையாளர்கள் நமது மேலப்பாளையம் வணிகர் சங்க தலைவர் #பீர்_மஸ்தான் அவர்களையும் செயலாளர் #நேசம்_வாஹித் அவர்களையும் பொருளாளர் ியாஸ்_அலி அவர்களையும் அனுகி முறையிட்டனர்,

நமது தொடர் கோரிக்கையினால் இன்று நமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்ட தலைவர் அண்ணன் #செல்வராஜ் அவர்களும் செயலாளர் அண்ணன் #நயன்_சிங் அவர்களும் நமது நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இந்த நெருக்கடியின் விளைவினைக் கூறி இதனால் வணிகர்களின் சிரமத்தையும் அவர்களின் பாதிப்புகளையும் எடுத்துக் கூறி இரவு 12 மணி வரை வணிக நிறுவனங்களை அடைக்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் வணிகர்களுக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும்படியும் பாதுகாப்பு வழங்கிடவும் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர் இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்,

வணிக சொந்தங்களின் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அணுகி கோரிக்கை மனு அளித்த மாவட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Collector Tirunelveli

அரசாணை வெளியீடு!
09/05/2025

அரசாணை வெளியீடு!

Address

Tirunelveli
627002

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 7am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு-மேலப்பாளையம் மண்டலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category