Tirunelveli City Municipal Corporation

Tirunelveli City Municipal Corporation Tirunelvelicorporation

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்க...
26/03/2026

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26-03-26) மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் மற்றும் வழிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

226பாளையங்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மரு . மோனிகா ராணா இ.ஆ.ப அவர்களின் உத்திரவுபட...
22/03/2026

226பாளையங்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மரு . மோனிகா ராணா இ.ஆ.ப அவர்களின் உத்திரவுபடி

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே தேர்தலில் 100% வாக்களித்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 22.03.2026 இன்று தினசரி நாளிதழ்களின் முகவர்கள் வீடு வீடாக வாடிக்கையாளர்களுக்கு தினசரி நாளிதழ்களை வழங்கும் போது நாளிதள்களுடன் குறிப்பாக (தினமணி,தினகரன், தினத்தந்தி ) ஆகிய நாளிதழ்களில் தேர்தல் தேதி ஏப்ரல் 23 என குறிப்பிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் இணைத்து வழங்கும் பொருட்டு தேர்தல் நாள் 23 ஏப்ரல் என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மேற்படி நாளிதழ்களுடன் சேர்த்து வழங்குவதற்காக முருகன் குறிச்சி, தெற்கு பஜார், வி .எம் சத்திரம் ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருந்த முகவர்களிடம் இன்று அதிகாலையிலேயே நேரில் சந்தித்து வட்ட வழங்கல் அலுவலர் திருமதி. மகாலெட்சுமி முதுநிலை வருவாய் திருமதி. மாலதி ஆய்வாளர் தனி வருவாய் ஆய்வாளர் திரு. தினேஷ் குமார் ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் . மோனிகா ராண...
21/03/2026

226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் . மோனிகா ராணா இ.ஆ.ப அவர்களின் உத்திரவுப்படி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பாளை சந்தை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நாள் ஏப்ரல் 23 என குறிப்பிட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது , பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் திருமதி. மகாலெட்சுமி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் திருமதி. மாலதி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் திரு. தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்க...
18/03/2026

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று (18-03-26) வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொது மக்களிடையே வட்ட வழங்கல் அலுவலர் திருமதி.மகாலெட்சுமி அவர்கள் அவர்கள் முன்னிலையில் ஜவுளி நிறுவனத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு தேர்தல் நாள் ஏப்ரல் 23 என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் வாக்களிப்போம் தவறாமல் வாக்களிப்பது வாக்காளர்கள் கடமை என வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப, அவர்கள...
17/03/2026

226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப, அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று (17-03-26) பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து வட்ட வழங்கல் அலுவலர் மகாலெட்சுமி அவர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மாலதி அவர்கள் தனி வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார் அவர்கள் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அனைத்து அனுப்புகை தபால்களிலும் பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் மற்றும் தேர்தல் நாள் ஏப்ரல் 23 நாள் குறிப்பிட்டு அனுப்புகை பணி நடைபெற்றது.

27/11/2025

தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக திரு.க.ஜெகஜீவராம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணையாளர் அலுவகத்தில் வைத்து இன்று மாண்புமிகு மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், மதிப்பிற்குரிய ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக ...
27/11/2025

தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திரு.க.ஜெகஜீவராம் அவர்களுக்கு ஆணையாளர் அலுவகத்தில் வைத்து இன்று (27-11-25) மாண்புமிகு மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், முன்னிலையில் மதிப்பிற்குரிய ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப.,அவர்கள் நியமன கடிதத்தினை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக ...
27/11/2025

தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக திரு.க.ஜெகஜீவராம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணையாளர் அலுவகத்தில் வைத்து இன்று மாண்புமிகு மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள், மதிப்பிற்குரிய ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

25/11/2025
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுபடி இன்று 25-11-25 மழைக்கால நடவடிக்கையாக...
25/11/2025

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுபடி இன்று 25-11-25 மழைக்கால நடவடிக்கையாக மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி பணியாளர்களால் சாலையில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுபடி இன்று மழைக்கால நடவடிக்கையாக தச்சநல்லூ...
25/11/2025

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுபடி இன்று மழைக்கால நடவடிக்கையாக தச்சநல்லூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்களால் வாய்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Address

Tirunelveli
627001

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli City Municipal Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tirunelveli City Municipal Corporation:

Share