03/02/2024
💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙
நெல்லை அருகே உள்ள பேட்டை
நரிக்குறவர் காலனியில் குடியரசு தின விழா ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் இன்று நடைபெற்றது.
🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚
நமது மதர் தெரேசா சமூக அறக்கட்டளை மற்றும் முகநூல் நண்பர்கள் குழு உடன் இணைந்து அம் மக்களுடன் பேசி பழகியது இனிமையாக இருந்தது, மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இந்த குடியரசு தினம் மிகச் சிறப்பாக அமைந்தது.
🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚
நிகழ்ச்சியில் பேட்டை நரிக்குறவர் காலனி நாட்டாமை விக்ரம் அனைவரையும் வரவேற்றார், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார், திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் PT ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து காலனி குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர், பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் பொன்னுச்சாமி குழந்தைகளுக்கு குடியரசு தின விழா குறித்து உரையாற்றினார்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இதனையடுத்து மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் PT ஆனந்தராஜ் தனது வாகனத்தில் அவர்களை ஏற்றி அப்பகுதி முழுவதும் சுற்றி சென்று மீண்டும் நிகழ்விடத்திலே சேர்த்ததுடன் நீங்கள் விரும்பும் மேற்படிப்புகள் படித்து அதிகாரிகளாக வர வேண்டுமென வாழ்த்தினார்.
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
இந்நிகழ்வில் திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர் ஜெயராமன்,
"மதர் தெரசா சமூக அறக்கட்டளை"
ப.பாலசுப்பிரமணியன்,
மேலப்பாளையம் அஜீத்,
மற்றும் நரிக்குறவர் காலனி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இதற்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்கள் பணியில்...
#மதர்_தெரேசா_சமூக_அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு.
அழைக்கவும்: 94452 72188.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹