18/08/2025
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ‘த.மேட்டூர்’ கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராம மக்களும் பக்தர்களும் அம்மனுக்கு பால் குடங்களை தலையில் சுமந்தபடியும், அலகு குத்தியும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று அம்மன் கோவிலில் வழிபட்டனர்.
மேலும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், இரவு மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில், கிராமத்தின் அனைத்து தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்று மேள தாளத்துடன் ‘அம்மன் மற்றும் விநாயகர் வீதி உலா’ நடைபெற்றது.
மேலும் கிராமத்தில் ஆடி மாத விழாவின் இறுதி நாளில், மஞ்சள் நீராட்டு விழாவோடு நிறைவுபெற்றது. இதில் கிராம மக்களும் பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
#தமேட்டூர் #லால்குடி #ஆடிமாததிருவிழா #தச்சன்குறிச்சி #திருச்சி #திருச்சிமாவட்டம் #லால்குடிவட்டம்