General Knowledge -பொது அறிவு

General Knowledge -பொது அறிவு hi friends please join this group

05/08/2016
16/03/2016

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

17/08/2015

Label the Earth's Oceans:

Arctic Ocean - an ocean around the North Pole, bordering northern Europe, Asia and North America. It is the smallest ocean.

Atlantic Ocean - an ocean bordering western Europe, western Africa, Antarctica, and eastern North and South America.

Indian Ocean - an ocean bordering eastern Africa, southern Asia, western Australia, and Antarctica.

Pacific Ocean - an ocean bordering eastern Asia, northeastern Australia, Antarctica, and western North and South America. It is the biggest ocean.

Southern Ocean - the ocean bordering Antarctica and extending from 60 degrees latitude. This fifth ocean was recognized by the International Hydrographic Organization in the spring of 2000.

17/08/2015

About Oceans:

Oceans cover more than 70% of Earth’s surface. About 97% of Earth’s water is contained in oceans and seas. The five oceans—the Pacific, Atlantic, Indian, Southern, and Arctic—are all connected and form an enormous mass of water. Seas are smaller bodies of salty water within the oceans.
The oceans are salty, which makes them unsuitable for drinking. Most of the salt comes from minerals from rocks and soil that have been washed from the land and carried into the oceans by rivers. The minerals are mostly chloride and sodium, which combine to make salt. Most of our table salt comes from the oceans.
The salinity, the amount of salt, varies in the oceans. Oceans in warm, dry areas are more salty than the oceans in cold climates, such as near the North and South Poles. That’s because ocean water in warmer areas evaporates quicker, leaving more salt behind. The saltiest water in the world is in the Red Sea, which is almost entirely surrounded by deserts.
Tides
Tides, waves, and currents cause the oceans to move constantly. A tide is the regular rise and fall of the sea level in oceans and other bodies of water. It is caused by the effect of the Moon’s gravity on Earth. Water on the side of Earth that is closest to the Moon is pulled in the direction of the Moon, creating a bulge in the ocean. On the other side of Earth, the Moon’s gravity pulls Earth away from the water, producing a matching bulge. These bulges form high tides. Because the Earth rotates on its axis, every point on Earth (except the poles) travels through the two high tide zones and the two low tides zones each day. This is why there are two high tides and two low tides each day.
Spring tides, which are especially strong, occur during new and full moons—every two weeks—when Earth, the Moon, and the Sun are in alignment. Neap tides, which are weaker, occur during first and last quarter moons, when the Sun, the Earth, and the Moon form a right angle.
Waves
Wind causes waves in the ocean. As the wind blows over the surface of the ocean, it pushes on the water and transfers some of its energy to the water. The water gets energy from the wind because of the friction between air molecules and water molecules. It may seem that waves move forward or horizontally, but they do not. They move up and down. You can see this by watching a buoy in the water. It bobs up and down with waves rather than moving from side to side.

15/05/2015

மனித உடலமைப்பு-சுவாரஸ்யமான தகவல்கள்

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும். மனித உடலின் ஆச்சர்யமான தகவல் தொகுப்பு இதோ:

நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும்.
ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.
மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.
ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.
கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.
ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும்.
மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.
காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.
ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.
மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது.
ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.
மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும்.
கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.
மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

15/05/2015

சரோகசி (Surrogacy) என்றால் என்ன?

ஒரு பெண் இன்னொருபெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல்
surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்துவதுதான் இந்த சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட் மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.
வாடகை கர்ப்பப்பையை ஏன் நாட வேண்டும்?
பல முறை ஐ.வி.எஃப் முறை செய்தும் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகிறது. சில சமயங்களில்,
பெண்ணின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை 10 மாதங்கள் தாங்க முடியாதபடி பலவீனமாக இருக்கும் போது, அல்லது கர்ப்பப்பை தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகும் போதும் இன்னொரு பெண்ணின் உதவியுடன் தன் குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் விரும்பலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இந்த சரோகசி முறைக்கு பல விதிமுறைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் குழந்தை பெறமுடியாமல் போகும் போது மட்டுமே அந்தப் பெண்ணின் அனுமதியுடன் சரோகசி சிபாரிசு செய்யப்பட வேண்டும்.
வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, ‘Deoxyribo Nucleic Acid’ எனப்படும் டி. ஏன்.எ. பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் (biological parents) அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
கர்ப்ப காலத்தில் வாடகைத் தாய்க்கு கொடுக்கப்படும் பண உதவிக்கு ஆவணச் சான்றுகள் இருக்க வேண்டும். அவருக்கு கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி அளிக்கப் படவேண்டும்.
ஒரு பெண் மூன்று தடவைக்கு மேல் தன் கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது.
வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
நம் நாட்டில் சரோகசிக்கென்றே இருக்கும் பல அமைப்புகளும், மகப் பேறு மருத்துவர்களும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த சரோகசி முறையைப் பற்றி சொல்லுகிறார்கள். அவர்களின் சம்மதத்திற்குப் பிறகு இந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள் வாடகைத் தாயாக ஆவதற்கு தயாராக இருக்கும் பெண்களிடம் பல முறை பேசுகிறார்கள். இந்த முறையை பற்றிய முழு விவரமும் அவர்களுக்கு சொல்லி அவர்களது சம்மதத்தை எழுதி வாங்குகிறார்கள். இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகே இம்முறை செயல் வடிவம் பெறுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் லாபம். ஒரு பெண்ணுக்கு குழந்தையும், இன்னொருவருக்கு பணமும் கிடைக்கிறது.
இந்த சரோகசி முறை இயற்கையில் கர்ப்பம் தரிக்க முடியாத, கர்ப்பப் பை பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அதே போல வறுமையில் இருக்கும் பெண்களுக்கும் இப்படி கர்ப்பபையை வாடகைக்குக் கொடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. கர்ப்ப காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடும், ஒரு மாதத்திற்கு 3000 ரூபாயும், குழந்தை பிறந்த பிறகு 2.5 லட்ச ரூபாயும் வாடகைத் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
தற்சமயம் நம் நாட்டில் இந்த முறையை ஒழுங்கு படுத்த சட்டம் இல்லை. இந்திய ஜனத் தொகையில் கிட்டத்தட்ட 10 % மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். சரோகசி முறையை சரிவரப் பயன்படுத்தினால் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இந்தியா போன்ற பழமையில் ஊறிய நாடுகளில் இம்முறை சிறிது தாழ்ந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது. ஆமீர் கானைப் போன்ற பிரபலங்கள் வெளிப்படையாக தங்களுக்கு இம்முறையில் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறும் போது பழமையில் ஊறிய மனங்களும் மாறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

15/05/2015

பள்ளி வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு, இந்த விதிமுறைகளை வகுத்துள்ளது.

அனுபவமிக்க டிரைவர்கள்

பள்ளிக்கூட வாகனங்களில் உள்ள மாணவர்கள் உட்காரும் இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் வடிவமைப்பு உறுதியானதாக இருக்க வேண்டும், அவசர கால நேரங்களில் வாகனங்களில் இருந்து எளிதாக வெளியேறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும், அனுபவமிக்க டிரைவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 22 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களும் இந்த 22 விதிமுறைகளை பின்பற்றி, உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையிடம் இருந்து மே 30-ம் தேதிக்குள் உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உரிமம் ரத்து செய்யப்படும்

அந்த பரிசோதனையின் போது ஏதாவது குறைபாடு இருந்தால் 1 வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். அந்த கால அவகாசத்திற்குள் இந்த குறைபாடு சரி செய்யாவிட்டால் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டிருக்க கூடாது

பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய ஒரு வருட காலத்தில் சிக்னல் மீறல், வரையறுக்கப்பட்ட வழியில் செல்லாமை உள்ளிட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களில் கூட 2 முறைக்கு மேல் அபராதம் கட்டியிருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மிக வேகம் , குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியிருத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை கூட தண்டிக்கப்படாதவராக இருக்க வேண்டும். மேலும், டிரைவர்கள் காக்கி சீருடை தான் அணியவேண்டும் என்றும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட வாகனங்களில் உதவியாளர்

பள்ளிக்கூட வாகனங்களில் இருக்கும் உதவியாளர்களை ஆன்,பெண் இருந்தாலும் அவர்களுக்கு 21 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் வாகனங்கள் நிற்கும் போது முதலில் இறங்கி, வாகனங்களில் இருந்து மாணவர்களை ஏற்றி, இறக்கும் வகையில், எல்லா உதவிகளும் செய்யும் வகையிலும் மருத்துவ ரீதியாக தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்ட...
15/05/2015

மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!

அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்” என்கின்றனர். இது சாத்தான்களின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக முக்கியமானது “பெர்முடா முக்கோணம்’.
இந்த முக்கோண பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல உரிய இடத்திற்கு போய் சேரவில்லை. புறப்பட்ட இடத்திற்கும் திரும்ப வரவில்லை. இவை அந்த முக்கோண பரப்புக்குள்ளேயே மாயமாக மறைந்து விடும்.ஏன் இந்த கப்பல்கள் இவ்வாறு காணமால் போகின்றன என்பதை ஆராய்வதற்காக 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்கள் சென்றன. ஆனால், அவற்றையும் காணவில்லை. 1872-ல் அந்த பகுதிக்குள் அப்பாவியாக தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதன்முதலாக மாயமானது. தொடர்ந்து “மெடர்’, “சைக்கேளாப்ஸ், கரோல்ஏடீரிஸ், கன்னிமரா போன்ற பிரமாண்ட கப்பல்களும், பிளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் இந்த கடல் எல்லையின் மேல் மிதந்த மற்றும் பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன. இதனுள் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களும் பலியானார்கள்.
நடந்து என்ன? என்ற ஆராய்ச்சியில் நிபுணர்கள் களத்தில் குதித்தனர். வாலண்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர் கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறொரு பரிணாமத்தில் நிற்கின்றன என்று குழம்பினார். அமெரிக்கா விஞ்ஞானிகள் முக்கோண ஏரியாவுக்குள் கிடப்பொருட்கள் சின்னச்சின்ன அணுக்காளாக உடைந்து விடுவதால் பொருட்கள் மாயமாகி விடுகின்றன என்று கூறினார்கள்! ஏலியன்கள் (வேற்று கிரக மனிதர்கள்!) தாக்குதல், மிக அதிகமான புவியீர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் பெர்முடா முடிச்சு அவிழ்ந்தபாடில்லை.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்ப்படும் இது போன்ற நிகழ்வுகள், பெர்முடா முக்கோணம் பகுதியில் ஏற்ப்படும் பொது அது மிகைப்படுத்தப்பட்ட வதந்திகளாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி அல்லது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று உறுதியாக கூறமுடியாததற்கு காரணமும் உண்டு.
பூமியை சுற்றி மின்காந்த அலைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் இதன் தாக்கம் அதிகமாகவும் இருக்கும். புவியீர்ப்பின் வடதுருவமும், காம்பசின் வடதுருவமும் சேரும் இடத்தில் மின்காந்த ஈர்ப்பினால் காம்பஸ் சீரற்ற முறையில் இருக்கும். இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் கப்பல்களோ, விமானம்களோ திசைமாறி சென்று எதன் மீதோ மோதி விபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
பெர்முடா முக்கோணத்திற்கு விடை கிடைக்காத நிலையில் அடுத்து பூதமாக ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் செல்லும் கப்பல்கள் இப்போது காணமால் போக ஆரம்பத்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகளாலும் இதனை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த மர்மான பகுதிக்கு “டிராகன் டிரையாங்கிள்” என்று பெயரிட்டு கவலையோடு ஆராய்ந்து வருகின்றனர். எப்போதும் இந்த இரண்டு முக்கோண மர்மங்களுக்கும் விடை கிடைக்கும் என்பதுதான் புதிராகவே உள்ளது.
- KUMARAN

25/04/2015

பாலாறு

பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வயலார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

More News on : http://naturenaturee.blogspot.in/2015/04/blog-post.html

Address

Tiruchirappalli

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

8124062663

Alerts

Be the first to know and let us send you an email when General Knowledge -பொது அறிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to General Knowledge -பொது அறிவு:

Share

Category