Akila Sathatha Srivaishnava Ramanuja Kootam Trust, Srirangam.

Akila Sathatha Srivaishnava Ramanuja Kootam Trust, Srirangam. Sathatha Sri Vaishnava - UNITY IS OUR STRENGTH SRIRANGAM IS THE HEAVEN OF EARTH.

AKILA SATHATHA SRI VAISHNAVA RAMANUJA KOOTAM TRUST is in the Task of Motivating our people for thier Betterment, Education and Sprituality.

28/05/2016
16/01/2016

Sri Nrusimmha Bhajans

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்பொன்னங் கழற்கமலப் போதிரண்டும். - என்னுடைய‌சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலதார்க...
02/10/2015

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும். - என்னுடைய‌
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலதார்க்
கென்னுக் கடவுடையேன் யான் !.

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளினைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது, ஓங்கும் அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே !.

சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத்
தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச ! இதென் விண்ணப்பமே.
************************************************

* பூமன்னுமாதுபொருந்தியமார்பன், புகழ்மலிந்த‌
பாமன்னுமாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர்
தாம்மன்னவந்த இராமானுசன்சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ, நெஞ்சேசொல்லுவோமவன்நாமங்களே. (1)

ஸ்ரீமதே இராமானுஜாய:ஆழ்வார் ஆசார்யன் எம்பெருமானார்  ஜீயர் திருவடிகளே சரணம்திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த ப்ரபன்ன காயத்ர...
02/10/2015

ஸ்ரீமதே இராமானுஜாய:

ஆழ்வார் ஆசார்யன் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த ப்ரபன்ன காயத்ரி
இராமானுச நூற்றந்தாதி

ஸ்வாமி திருவங்கத்தமுதனார் 11 ஆம் நூற்றாண்டில் ஸ்வாமி இராமானுசரை பாட்டுடை தலைவராக, 108 பாசுரங்களை அந்தாதி வடிவில் கொண்டாடி வடிவமைத்தார், கடைசி மூன்று பாசுரங்கள் ஸ்வாமி இராமானுசர் முன்னிலையில் இயற்றப்பட்டதால் சாத்துமுறை பாசுரங்களாக வைணவ உலகில் அங்கீகரிக்கப்பட்டது.

காயத்ரி மந்திரம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்க்கு இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்கள் வைணவத்தில் மிக முக்கியமாக்கப்பட்டு ப்ரபன்ன காயத்ரி என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீவைஷ்ணவ ராஜதானியான ஸ்ரீரங்கத்தில் அனைத்து உற்சவத்தின் ஒவ்வொரு புறப்பாட்டிலும் வாத்ய ஒலியுடன் நம்பெருமாள் திருவீதி எழுந்தருளுவார், ஆனால் உற்சவ இறுதியான சப்தாவரணத்தில் நம்பெருமாளின் திருவீதி புறப்பாட்டில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்படுகிறது, நம்பெருமாளும் மற்றும் பக்தர்களும் இதை செவிமடுக்க ஏதுவாக வாத்ய ஒலியின்றி திருவீதி வலம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இராமானுச நூற்றந்தாதியை நாம் அனைவரும் சேவித்து 2017 ஆம் ஆண்டு நிகழ உள்ள ஸ்வாமி ராமானுசரின் 1000 வது ஆண்டு திருவிழாவிற்க்காண நமது பங்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் அனைவரும் சிரமம் பாராமல் இராமானுச நூற்றந்தாதியை ஆசார்யன் வாயிலாக கற்று பயணடைய, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரமாக ஒலி வடிவமாக இங்கே இணைக்கப்பட உள்ளது.

ஸ்வாமி ராமானுசரின் 1000 ஆம் அவதார திருநட்சத்திரம் அன்று பக்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி ப்ரபன்ன காயத்ரியான இராமானுச நூற்றந்தாதியை கொண்டாடி சேவித்து ஸ்வாமி ராமானுசரின் அருளிற்க்கு பாத்திரமாகும்படிஅனைவரையும் பிரார்த்திக்கின்றேன்.

அடியேன்

தாமோதர ராமானுஜ தாசன்.
அலை பேசி 094888 93456.

11/03/2015
15/06/2014
19/04/2013

Address

13, Malligaipoo Agraharam, Srirangam
Tiruchirappalli
620006

Alerts

Be the first to know and let us send you an email when Akila Sathatha Srivaishnava Ramanuja Kootam Trust, Srirangam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akila Sathatha Srivaishnava Ramanuja Kootam Trust, Srirangam.:

Share