சவுக் & சிங்காரதோப்பு கிளை தமுமுக & மமக

  • Home
  • India
  • Tiruchirappalli
  • சவுக் & சிங்காரதோப்பு கிளை தமுமுக & மமக

சவுக் & சிங்காரதோப்பு கிளை தமுமுக & மமக மக்கள் நலபணியில் என்றும் மனிதநேயத்தின் மறுபக்கமாக அனைத்து மக்களுக்குமான சமூகநீதி காக்கும் அமைப்பாக...

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா மறைவுக்குஇரங்கல்..மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹி...
29/09/2024

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா மறைவுக்கு
இரங்கல்..

மனிதநேய மக்கள் கட்சியின்
தலைவர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேலின்
வான்வழித் தாக்குதலில்
கொல்லப்பட்டிருக்கிறார்.

லெபனானை ஆக்கிரமித்திருந்த
இஸ்ரேலியப் பயங்கரவாதத்தை
எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா
இயக்கத்தை 32 ஆண்டு காலமாக
வழிநடத்திய சக்திவாய்ந்த
தலைவராக ஹசன் நஸ்ருல்லா
இருந்து வந்துள்ளார்.

தொடர்ச்சியாக இஸ்ரேல் தனது
பயங்கரவாத செயல்பாடுகளை
உலக அளவில் விரிவாக்கிக்
கொண்டே செல்கிறது. இதன் நீட்சியாகப் பல்வேறு உலக தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் இன்னும் மௌனித்திருப்பது ஏற்புடையது அல்ல.
தொடர்ந்து பாலஸ்தீனத்தின்
காசா மேற்குக் கரை போன்ற
பகுதிகளை பெரும்பாலான உலக நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் தனது
பயங்கரவாத செயல்களை இஸ்ரேல்விரிவுபடுத்தி வருகிறது.

பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் இஸ்ரேல்
தம் தாய் மண்ணை பறிகொடுத்த பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் களம் கண்ட நஸ்ருல்லாவை பயங்கரவாதியாகச் சித்தரித்திருப்பது வேடிக்கையானது.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்.
பாலஸ்தீன மக்களின்
விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளின் பட்டியலில் தன்னையும்
இணைத்துக் கொண்டிருக்கிறார்
நஸ்ருல்லா. அவரின் வீர மரணத்திற்கு என் ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

தேர்தல் களத்தில் திருச்சி சவுக் கிளை நிர்வாகிகள்திருச்சி 14வது வார்டு கிலேதார் தெரு மேரிஸ்தோப்பு பள்ளி வாக்குசாவடி அருகே...
19/04/2024

தேர்தல் களத்தில் திருச்சி சவுக் கிளை நிர்வாகிகள்

திருச்சி 14வது வார்டு கிலேதார் தெரு மேரிஸ்தோப்பு பள்ளி வாக்குசாவடி அருகே வாக்காளார்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

 #திருச்சி_மாநகராட்சி_கோட்ட_தலைவர்_மதிவாணன்_அவர்களை_வரவேற்ற #திருச்சி_கிழக்கு_மாவட்ட_சவுக்_கிளை_நிர்வாகிகள்இந்தியா கூட்ட...
09/04/2024

#திருச்சி_மாநகராட்சி_கோட்ட_தலைவர்_மதிவாணன்_அவர்களை_வரவேற்ற
#திருச்சி_கிழக்கு_மாவட்ட_சவுக்_கிளை_நிர்வாகிகள்

இந்தியா கூட்டணியின் திருச்சி வெற்றி வேட்பாளர் துரை வைகோ அவர்களுக்கு வாக்கு சேகரிக்க 14 வது வார்டு சவுக் கிளை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அதில் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட சவுக் கிளை சார்பாக தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் அவர்கள் முன்னிலையில் கிளை செயலாளர் அபுதாஹிர்,துணை செயலாளர் இலியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி சார்பாக மும்பையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...
17/03/2024

இந்தியா கூட்டணி சார்பாக மும்பையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா

குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுமனிதநேய மக்கள் க...
17/03/2024

குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ரமலானை முன்னிட்டு அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. அத்தோடு இல்லாமல் வாக்குவாதம் செய்து வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு இலங்கை மாணவர் உட்பட 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘ஏ’ பிளாக்கில் நடந்துள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மடிக்கணினிகள், அலைப்பேசிகள் உடைமைகள் போன்றவற்றையும் வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

குற்றவாளிகளைக் கைது செய்வதில் குஜராத் மாநில அரசு போதிய முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. நமது நாட்டின் விருந்தினர்களாகக் கல்வி பயில வந்துள்ள மாணவர்கள் புனித ரமலான் மாதத்தில் தமது மத வழிப்பாட்டை தமது தங்குமிடத்தில் நடத்தியதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்களிடையே எந்த அளவிற்கு மதவெறி புகுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக இது அமைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டு இருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறோம். குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தவும் தனிமனிதவழிபாட்டு உரிமையைக் காக்கவும் அரசு உரிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

இப்படிக்கு
எம் .எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

திருச்சி கிழக்கு மாவட்டம் குண்டூர்புதிய கிளை உதயம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி யின் ப...
15/03/2024

திருச்சி கிழக்கு மாவட்டம் குண்டூர்
புதிய கிளை உதயம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி யின் பணிகளால் ஈர்க்கப்பட்டு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சகோதரர்கள் தங்களை தமுமுக மற்றும் மமக வில் இணைத்து கொண்டு புதிய கிளையை துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

IPP மாநில து.செயலாளர் முகமது ரபீக்,தகவல் தொழில்நுட்ப அணி மாநில து.செயலாளர் நசீர் மற்றும் முன்னாள் மாவட்ட பொருளாளர் அய்யூப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட து.தலைவர் முஸ்தபா,மாவட்ட துணை செயலாளர்கள் பீனிக்ஸ் ராஜா,ரம்ஜான் அலி,சம்சுதீன் மற்றும் மாவட்ட சுற்று சூழல் அணி செயலாளர் காட்டூர் ரபீக் மற்றும் மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கிளை தொடங்கிய பின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

இன்ஷா அல்லாஹ் கிளை அலுவலகம் விரைவாக திறப்பு விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாவட்ட கழக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் குண்டூர்

தமிழ்நாட்டிற்கும் சேர்த்து 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியவர் மக்களிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டு்ம்?2014...
06/03/2024

தமிழ்நாட்டிற்கும் சேர்த்து
10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியவர்
மக்களிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டு்ம்?

2014இல் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில்

தமிழ்மொழிக்குச் செம்மொழித்
தகுதி வழங்கினோம்...

சென்னை முதல் நாகர்கோவில் வரையில் 4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்...

உளுந்தூர்பேட்டை முதல்
கோயம்புத்தூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்....

திருச்சி முதல் திண்டுக்கல்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...

தூத்துக்குடி முதல் திண்டுக்கல்,
கரூர், நாமக்கல், சேலம் வழியாக
ஓசூர் வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...

பாண்டிச்சேரி முதல் திண்டிவனம்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...

சென்னை முதல் ஓசூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக்
கொடுத்துள்ளோம்...

சென்னை முதல் தூத்துக்குடி
வரையில் இரட்டை ரயில் பாதை
அமைத்துள்ளோம்...

சென்னை முதல் மதுரை
வரையில் ரயில் மின் பாதைகள்
உருவாக்கியுள்ளோம்...

ரயில்வே மேம்பாலங்கள் உட்பட
பல ரயில்வே திட்டங்களை
நிறைவேற்றியுள்ளோம்...

திண்டிவனம் - நகரி,
மயிலாடுதுறை - மன்னார்குடி,
ஈரோடு - பழனி உட்படப்
பல புதிய ரயில் பாதைகள்
அறிமுகப்படுத்தியுள்ளோம்...

ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்
திட்டம் உட்படப் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை வழங்கியுள்ளோம்...

சேது சமுத்திரத் திட்டம்
வழங்கினோம்...

சென்னைப் போக்குவரத்தை
எளிதாக்க தாம்பரம், கத்திப்பாரா,
கோயம்பேடு, பாடி சந்திப்புகளில்
மேம்பாலம் அமைத்தோம்...

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
கொடுத்தோம்...

மதுரவாயல் முதல் துறைமுகம்
வரையில் பறக்கும் மேம்பாலம்
அமைக்கிறோம்...

பல ஆயிரம் புதிய பேருந்துகளை
JnUrm திட்டத்தில் வழங்கினோம்...

அனைவருக்கும் உணவுத்
திட்டத்தை உருவாக்கினோம்...

சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி
மருத்துவமனை உருவாக்கினோம்...

பல மத்தியப் பல்கலைக்- -கழகங்களை உருவாக்கினோம்...

என்று 10 ஆண்டுகளாகப்
பிரதமராக இருந்த டாக்டர்
மன்மோகன்சிங் தாம் கொண்டுவந்த திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்.

2014 - 2024ல் 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த திரு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ன
சொல்லி வாக்கு கேட்கிறார.!

நான் 16 வயதிலேயே
வீட்டை விட்டு ஓடி போய்ட்டேன்!

எனக்குக் குடும்பமோ குட்டியோ
இல்லை! நீங்கள்தான் குடும்பம்.!

திமுக வாரிசு கட்சி,
திமுக ஊழல் கட்சி,
திமுக செய்த ஊழல்
பணங்களை மீட்டெடுத்து
மக்களிடம் கொடுப்பேன்!

எம்ஜிஆர், ஜெயலலிதா
நல்லவர்கள்!

நேரு இந்தியாவிற்கு
ஒன்றுமே செய்யவில்லை!

காமராஜர் நன்றாக ஆட்சி செய்தார்!

காங்கிரஸ் ஊழல் கட்சி!

ராஜாஜி நல்ல முதலமைச்சராக இருந்தார்...

என்று ஹிந்தியிலேயே பேசி வாக்குகள் கேட்கிறார்!

தமிழர்களை முட்டாள் என்று எண்ணுகிறாரா திரு மோடி!

05/03/2024
 #திருச்சியில் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்று கூடல் நிகழ்ச்சிதிருச்சி கிழக்கு மாவட்டத்தில்  மனிதநேய மக்கள் கட்சி தகவல் ...
28/01/2024

#திருச்சியில் தகவல் தொழில்நுட்ப அணியின்
ஒன்று கூடல் நிகழ்ச்சி

திருச்சி கிழக்கு மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தகவல் தொழில்நுட்ப அணியின் " ஒன்று கூடல் " நிகழ்ச்சி மாநில செயலாளர் அல்தாப் அஹ்மது தலைமையில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் சிவகாசி இஸ்மாயில் வரவேற்பு உரையாற்றினார்

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ,மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,எம்.எல்.ஏ, தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி, தமிழ்கேள்வி
ஊடகவியலாளர் தி.செந்தில் வேல்,ஜீவா டுடே
ஊடகவியலாளர் ஜீவன்சகாப்தன் மற்றும்,SYPA TREE அஹமத் ரியாஸ் சிறப்பு உரையாற்றினார்கள் .

இதில் தமுமுக பொருளாளர்
பொறியாளர் ஷபியுல்லாகான்,மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா,தலைமை நிலையச்செயலாளர் ஜைநூல் ஆபிதீன், மமக மாநில அமைப்புச்செயலாளர் மிட்டாய் காதர் மைதீன்,தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக்,தலைமை பிரதிநிதி தாஹிர் பாஷா
மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கலீல் ரஹ்மான் ,மீனவர் அணி மாநில செயலாளர் முகம்மது அலி,தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் செய்யது அலி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர்கள் ஆசப்கான்,நசீர்,இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாவட்டத்தின் அங்கம் வகிக்கும் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகளும் ஏனைய சிறப்பு அழைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரும் பயனடைந்தனர்.


75 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி சவுக் கிளை சார்பாக தேசிய கொடி ஏற்ற...
27/01/2024

75 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி சவுக் கிளை சார்பாக தேசிய கொடி ஏற்றிம் நிகழ்ச்சி கிளை தலைவர் சாகுல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர்
N. சபியுல்லாகான் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

மாவட்டத் தலைவர் முகமது ராஜா,மமக செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர,கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பண்டைய காலம் முதல் இன்று வரையிலான நாணயம் கண்காட்சி அமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபுவுக்கு ரத்தம் வழங்கிய தமுமுகவை சேர்ந்தவர்கள்
25/01/2024

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபுவுக்கு ரத்தம் வழங்கிய தமுமுகவை சேர்ந்தவர்கள்

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when சவுக் & சிங்காரதோப்பு கிளை தமுமுக & மமக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சவுக் & சிங்காரதோப்பு கிளை தமுமுக & மமக:

Share