SDPI கட்சி திண்டிவனம் தொகுதி

SDPI கட்சி திண்டிவனம் தொகுதி SDPI கட்சி திண்டிவனம் தொகுதி அதிகாரப்பூர்வ வலைதள பக்கம்

இன்று 10.04.2026  #திண்டிவனத்தில்   #ரஹ்மானிய மற்றும்  #நவாப் பள்ளிவாசல்களில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின...
10/04/2026

இன்று 10.04.2026 #திண்டிவனத்தில் #ரஹ்மானிய மற்றும் #நவாப் பள்ளிவாசல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின், சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் Vanni Arasu வன்னி அரசு அவர்களுக்கு #பானை சின்னத்தில் வாக்குகளை வழங்குமாறு கேட்டு கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திண்டிவனம் தொகுதி நகர , கிளை, நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

#பானை #வன்னி_அரசு_வெல்லட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும்

Thol.Thirumavalavan Thozhar Rahamath Gingee KS Masthan M. K. Stalin Jaffar Khan Ahamed Navavi Nijam Mohaideen Sdpi A. Abubakkar Siddique

B.சதாம் உசேன் B.A
மாவட்ட செயலாளர்
IT WING
SDPI கட்சி
விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 #மதச்சார்பற்ற_முற்போக்கு கூட்டணியின்  #விழுப்புரம் மாவட்டம்   #செஞ்சி திமுக  வெற்றி வேட்...
03/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

#மதச்சார்பற்ற_முற்போக்கு கூட்டணியின் #விழுப்புரம் மாவட்டம் #செஞ்சி திமுக வெற்றி வேட்பாளர் திரு செஞ்சி மஸ்தான், #திண்டிவனம் விசிக வெற்றி வேட்பாளர் திரு.வன்னியரசு, #மைலம் தேமுதிக வெற்றி வேட்பாளர் L. வெங்கடேசன் ஆகியோரின் #அறிமுக_கூட்டம் மற்றும் அனைத்து #செயல்_வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ்சியின் மாவட்ட,தொகுதி,நகர நிர்வாகிகள் , செயல்வீரர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக SDPI கட்சி திண்டிவனம் தொகுதி Tindivanam Times M. K. Stalin Tindivanam District Nam Tindivanam Mohammed Ahathu Gingee Masthan

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் விசிக வேட்பாளர் வன்னியரசு அவர்கள்  ்சி நிர்வாகிகள் உடன் சந்திப்பு  #ஸ்டாலின்_தொடரட்டும்  ...
03/04/2026

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் விசிக வேட்பாளர் வன்னியரசு அவர்கள் ்சி நிர்வாகிகள் உடன் சந்திப்பு
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வன்னிஅரசு_வெல்லட்டும் #திண்டிவனம்_வளரட்டும்

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திண்டிவனம் தொகுதி வெற்றி வேட்பாளர் வன்னி அரசு அவர்கள்,  #திண்டிவனம் தொகுதியில்    கட...
02/04/2026

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திண்டிவனம் தொகுதி வெற்றி வேட்பாளர் வன்னி அரசு அவர்கள், #திண்டிவனம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் உடன் சந்திப்பு.

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் வன்னியரசு அவர்கள் SDPI கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் இந்நிகழ்ச்சி திண்டிவனம் செஞ்சிரோடு அம்பர் ஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது... இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னி அரசு அவர்கள் பானை சின்னத்தில் ஓட்டுகளை கேட்டும் எஸ்டிபிஐ கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஆதரவு திரட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
இரா. ரவிக்குமார் அவர்கள் வேட்பாளர் வன்னியரசு அவர்களை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆதரவு திரட்டினார் மற்றும் மண்டல, மாவட்ட ,தொகுதி, நகர ,கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ எம் ஆர் சையது ஹசன் மாவட்ட துணைத் தலைவர் சாதிக் பாஷா மாவட்ட செயலாளர் முகமது அஹது மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ எல் ரியாஸ் அகமது ஐடிவிங்கின் மாவட்ட செயலாளர் சதாம் உசேன், திண்டிவனம் தொகுதி செயலாளர் ரஹீம் தொகுதி துணைத் தலைவர் சதக்கத்துல்லா தொகுதியின் செயற்குழு உறுப்பினர் ஆஷிக் அலி மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் திண்டிவனம் நகரத் துணைத் தலைவர் ஆரிப் பாஷா நகர செயலாளர் ஜப்பார் நகர இணை செயலாளர் ஆதம் பாட்ஷா செஞ்சி தொகுதி தலைவர் இரபான் மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது., இதில் வெற்றி வேட்பாளர் வன்னியரசு அவர்களுக்கு SDPI கட்சி முழுமையான ஒத்துழைப்பு அனைத்து நிர்வாகிகள் தெரிவித்தனர்...
#நம்மில்ஒருவர் #நமக்கானஒருவர் #திண்டிவனம்_வளரட்டும் #வன்னிஅரசு_வெல்லட்டும்

தமிழகத்தில் இன்று வெளியாகிறது வாக்காளர் வரைவு பட்டியல்.உங்களுடைய பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவ...
19/12/2025

தமிழகத்தில் இன்று வெளியாகிறது வாக்காளர் வரைவு பட்டியல்.

உங்களுடைய பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.

திண்டிவனம் நகரம்
சமூக ஊடக அணி

07/12/2025
*டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்!* *வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தியும்**அரசமைப்பு சட்டத்...
07/12/2025

*டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்!*

*வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தியும்*
*அரசமைப்பு சட்டத்தின் *முகவுரையை கையில் ஏந்தியும் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!*

*-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!*

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக திண்டிவனத்தில் எஸ்டிபிஐ கட்சி விழுப்புரம் மாவட்டம் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டபொதுச் செயலாளர்
AMR.சையத் ஹசன் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்
Er. A.முகமது அஹது
வரவேற்புரையாற்ற,
பொறியாளர் அணி மாவட்ட தலைவர்
Er . நிஜாமுதீன்
நன்றியுரையாற்றினார். திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி தலைவர் சையத் பரக்கத் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், மாவட்டத் துணைத் தலைவர்
சாதிக் பாஷா

மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ரஷீத்

மாவட்ட செயலாளர் அக்பர் அலி
மாவட்ட செயலாளர் அன்சர் அலி
மாவட்ட பொருளாளர் அபூபக்கர்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ரியாஸ் அலி
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஜான் பாஷா
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அஹமது
SDTU வின் மாவட்ட தலைவர் பக்ருதீன்,
SDTU மாவட்ட செயலாளர் ரஹீம்,
SDPI IT விங் மாவட்ட செயலாளர் சதாம் உசேன்,
மயிலம் சட்டமன்ற தொகுதி தலைவர்
ஷேக் முபாரக்
செஞ்சி சட்டமன்ற தொகுதி தலைவர் இர்பான் பாஷா விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தலைவர் உஸ்மான் கான் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் பாரூக் உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விழுப்புரம்மாவட்ட
தலைவர்
Er .*முகம்மது ரஃபிக்*

கண்டன உரை
*மாநில பேச்சாளர்*
*ஜுனைத்அன்சாரி*
வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.

எஸ்டிபிஐ கட்சியின் *மாநில பேச்சாளர் ஜுனைத் அன்சாரி* பேசுகையில், “1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் நிகழ்ந்த அந்த பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது வெறும் கட்டட இடிப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்கிய பயங்கரவாதச் செயலாகும். இடிக்கப்பட்டது ஒரு பள்ளிவாசல் மட்டுமல்ல – மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் ஆகிய அனைத்தும் ஒருசேரத் தரைமட்டமாக்கப்பட்டன. எனினும் அந்த அநீதிக்கு நீதி என்பது கிடைக்கவில்லை. மாறாக ஆதாரங்களை புறக்கணித்து பெரும்பான்மை மனச்சாட்சி அடிப்படையில் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை, சர்வதேச அளவில் கேலிக்குரியதாக மாறியது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சாதகமாக்கிகொண்ட மதவாத சக்திகள் இன்றைக்கு கியான்வாபி, மதுரா ஷாஹி ஈத்கா, டெல்லி ஜாமா மஸ்ஜித் எனப் பல நூற்றாண்டு பழமையான மஸ்ஜிதுகளை இலக்காக்கி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. மறுபுறம் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் (திருத்த) மசோதா, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளையே பறிக்கும் முயற்சியாக, வக்ஃப் சொத்துகளை அரசு எளிதில் கைப்பற்றவும், அவற்றின் மீதான முஸ்லிம்களின் கட்டுப்பாட்டை அற்றுப்போகச் செய்யவும் சட்டம் இயற்றியுள்ளது.

மதச்சார்பின்மை எனும் அரசியலமைப்பு உத்தரவாதத்தை மெல்ல மெல்ல அரித்து இல்லாமலாக்கும் சதிச்செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப் பிரிவுகள் அல்ல – அது இந்தியத் தேசியத்தின் அடித்தளம். அதைத் தகர்த்தால் இந்தியா என்ற கட்டமைப்பே சிதறிவிடும்.

எனவே சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும், வக்ஃப் உரிமைகளைக் காக்க வேண்டும், மதச்சார்பின்மையை அரசியலமைப்பின் உயிர்நாடியாக மீட்டெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க முழக்கமிட்டனர்.

இப்படிக்கு
IT WING - திண்டிவனம் நகரம்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! நேற்றைய தினம் (25/09/2025) 💚❤️SDPI கட்சியின்திண்டிவனம் நகரம் தொகுதி அலுவ...
26/09/2025

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

நேற்றைய தினம் (25/09/2025)
💚❤️SDPI கட்சியின்
திண்டிவனம் நகரம் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது.. இதற்கு தொகுதி தலைவர் சையத் பரக்கத் அலி தலைமை தாங்கினார்.
நகரத் தலைவர் முஹம்மது யூசுப் அவர்கள் கொடியேற்ற நிகழ்வு நடத்தி மாநில செயலாளர் மரியாதைக்குரிய ஹமீத் பிரோஸ் அவர்களால் கொடி ஏற்றப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டது..
இதில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட பொதுச் செயலாளர்
AMR சையத் ஹசன் அவர்களும்,
முன்னிலை
மாவட்டச் செயலாளர் முகம்மது அகத் அவர்களும்,

மாவட்ட பொறியாளர் அணியின் தலைவர் ஹாஜி நிஜாமுதீன் அவர்களும்,
தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரஹீம் அவர்களும், மயிலம் தொகுதி தலைவர் SA முபாரக் அவர்களும்,
மயிலம் தொகுதி செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும்,
மயிலம் துணைத் தலைவர் அலிபாய் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
உடன் திண்டிவனம் தொகுதி துணைத்தலைவர் சதகத்துல்லா மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஆஷிக் அலி மற்றும் நகர ஊடக நிர்வாகி முகமது ஆஷிக் உதுமான் மற்றும்
நகர தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்....

இப்படிக்கு
IT wing - தகவல் தொழில்நுட்ப அணி
திண்டிவனம் நகரம்

30/08/2025

Address

Tindivanam
604001

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி திண்டிவனம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share