திருவை Special

திருவை Special SPECIALITY OF THIRUVITHANCODE
and
THIRVITHANCODE PEOPLE (KANYAKUMARI DISTRICT)
&
REMEMBERANCES

?

SPECIALITY OF THIRUVITHANCODE
and
THIRVITHANCODE PEOPLE (KANYAKUMARI DISTRICT)

திருவிதாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்

10/09/2025

அமைதியான முறையில் நடந்து முடிந்த #நில_மோசடி_மாபியா பயங்கரவாதிகளுக்கும் மற்றும் மோசடிக்கு துணை போன ஊழல்வாதிகளான #பத்திரப்பதிவுத்துறை_ஊழியர்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்,
அரசியல் கட்சியினர்,
அமைப்பு சகோதரர்கள்,
சகோதர ஜமாத்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் பாதூகாப்புப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவருக்கும் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் அங்கத்தினர்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும்
எங்களுக்கு தோள் கொடுத்து,
இது ஒரு முதற்கட்ட அடையாளப் போராட்டமே என்றும்
நீதி கிடைக்கப்பெறும் வரை அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சூழுரைத்து உரையாற்றிய சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஷாக்கல்லாஹ் ஃபீ ஹைரன்.

#ஓயமாட்டோம்
#ஓயமாட்டோம்
#நீதி_கிடைக்கும்_வரை_ஓயமாட்டோம்

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு பகுதியில் உள்ள திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான வக்ஃப் நிலத்தை மோசடியாக பத்த...
08/09/2025

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு பகுதியில் உள்ள திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான வக்ஃப் நிலத்தை மோசடியாக பத்திர பதிவு செய்த குற்றவியல் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை ( Superintendent of Police ) சந்தித்து ஜமாத் நிர்வாகிகளால் புகார் மனு கொடுக்கப்பட்டது.

ஜனநாயக அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகிற #10.09.2025 (புதன்கிழமை) காலை #11 மணிக்கு வேர்க்கிளம்பி பத்திரப்பதிவு அலுவலக முற்றுகை போராட்டம் நடத்துவதற்கும் ஜமாத் நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது.

ஜமாத் அவசர பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகிற #10-09-2025 (புதன் கிழமை) வேர்கிளம்பி பத்திர பதிவு அலுவலக (சார்பதிவாளர் அலுவலகம்) முற்றுகை போராட்டம் தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியில் உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜமாத் நிர்வாகத்தால் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

நில மோசடிக்கு எதிராகவும்,
மோசடி பத்திரப்பதிவில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அநீதிக்கு எதிராக திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தால் நடத்தப்படுகிற அறப்போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு நீதியை நிலைநாட்டிட ஆதரவு வழங்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். நன்றி!

Address

Thiruvithancode
629174

Telephone

9629950961

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவை Special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருவை Special:

Share

Category