Bharat Civilian

Bharat Civilian அகண்ட பாரதம்

ஒன்றிய அரசு ரத்து செய்யாததை, விடியல் அரசு ரத்து செய்தது…🖤💔நீட்டா!?😟இல்ல கரண்ட்!🙃
08/05/2022

ஒன்றிய அரசு ரத்து செய்யாததை,
விடியல் அரசு ரத்து செய்தது…🖤💔

நீட்டா!?😟
இல்ல கரண்ட்!🙃

தளபதியின் கழக ஓராண்டு சாதனைகள TVல பாக்கலாம்னா கரன்ட் போயிடுச்சே..!!🖤💔
07/05/2022

தளபதியின் கழக ஓராண்டு சாதனைகள TVல பாக்கலாம்னா கரன்ட் போயிடுச்சே..!!🖤💔

22/03/2022

திரு. அண்ணாமலை என்றில்லை ..எந்த ஒரு அரசியல் பிரமுகரையும் விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் உண்டு..

ஆனால் அது நாகரீகமாக இருக்க வேண்டும்...உண்மையைத் தழுவி இருக்க வேண்டும்...

நீங்கள் அவர் மேல் வைக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், எடுத்து வைக்கும் தரவுகள் முதலியன அவர் ஆதரவாளர்களையே உங்கள் பக்கம் சுண்டி இழுப்பது போல் இருக்க வேண்டும்...

ஆனால் உலக சமூக நீதியின் தலைமை அலுவலகம் (The head office of social justice) உள்ள தமிழகத்தில் அவர் மேல் வைக்கும் விமர்சனங்கள் சர்வதேச அளவில் உள்ளன...

1) அடேய் ஆட்டுக்குட்டி.
2) டேய் ஆடு..
3) ஆட்டுக்கார பயலே.

மரியாதை குறைவான வார்த்தைகளைக் கூட விட்டு விடுவோம்..

ஆனால் எந்த ஒருவரையும் தொழிலின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ, பிறந்த சமூகம்/மதம் அடிப்படையிலோ ஒரு நாளும் இகழக் கூடாது என்பதுதான் சமூகநீதியின் முதற்படி...

ஆனால் இந்த சமூகநீதி காவலர்கள் தங்கள் விமர்சனத்தை தொடங்குவதே இந்த முறையில் தான்..

இதில் பாதி நபர்கள் நன்கு படித்தவர்கள்...அதில் கணிசமானவர்கள் மருத்துவர்கள்...

அது சரி..உங்கள் நிலைமை புரிகிறது...

1) மூன்று ஆண்டுகள் முன்பு வரை மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தியவர் அண்ணாமலை... ஆனால் இன்று அவருக்கு 15 malls, 25 Binami petrol bunks, லண்டனில் 13 சொகுசு Bungalows இருக்கின்றன..இது எப்படி? - என்றா விமர்சிக்க முடியும்? முடியாது...ஏனென்றால் அவர் அப்படி செய்யவில்லை...இனியும் செய்ய மாட்டார்..

2) மத்திய தலைமை இடத்தை தாஜா செய்து தன் செல்வாக்கை வைத்து தன் குடும்பத்தார் 10 பேருக்கு 2500 கோடிக்கு பங்குகள் வாங்கியுள்ளார்..இது எப்படி? என்றா விமர்சிக்க முடியும்? முடியாது ..ஏனென்றால் அவர் அப்படி செய்யவில்லை...இனியும் செய்ய மாட்டார்..

3) இந்த தமிழ் மொழி ஒரு சனியன்...அது தொலைந்தால்தான் உருப்படும் - என்றா பேசினார்? இல்லை ..இனியும் அப்படி செய்ய மாட்டார்..மொழியாலும் விமர்சிக்க முடியாது ..

4) நீங்கள் எந்நேரமும் வெறுப்பை உமிழும் சமூகத்தில் இருந்தும் அவர் வரவில்லை...அதனால் அதை வைத்தும் அவரை இகழ முடியாது.

வேறு என்னதான் செய்வது? அடுத்து இருப்பது அவர் தொழில்தான்..

அதனால் அவரை இப்படித்தான் உங்களால் விமர்சனம் செய்ய முடியும்....

செய்யுங்கள்..தொடருங்கள்..

ஆனால் ஒரே ஒரு முறை கண்ணாடியில் பார்த்து "நான்தான் சமூக நீதி காவலன்" என்று சொல்லிவிட்டுச் செய்யுங்கள்...

அது தானாகவே உடைந்து நொறுங்கும்...நொறுங்கிய சிதில்கள் உங்களைப் பார்த்து எள்ளி நகைக்கும்..

நன்றி Rajesh Jayaraman

கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் திமுக தலைவர்  #ஸ்டாலின் எச்சரித்தும் பதவி விலகவில்லைமாறாக…பாஜகவ...
07/03/2022

கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் திமுக தலைவர் #ஸ்டாலின் எச்சரித்தும் பதவி விலகவில்லை

மாறாக…

பாஜகவின் 8 மாவட்ட நிர்வாகத்தை கலைக்க்கும் மாநில தலைவர் அண்ணாமலைஜியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள்

அது தான் பாஜக தொண்டர்கள்

27/02/2022

பத்திரமாக மீட்டவர் மோடி...

உண்மை ஊருக்கே தெரியும்...

தமிழ்நாட்டின் கேடி இதில் ஸ்டிக்கர் ஒட்டினாலும் அதனால் "எந்த பயனும் இல்லை"...

வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் சோர்ந்து விட வேண்டாம்...தொடர்ந்து பயணிப்போம்..மாநில தலைவர்..அண்ணாமலை
24/02/2022

வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் சோர்ந்து விட வேண்டாம்...தொடர்ந்து பயணிப்போம்..

மாநில தலைவர்..அண்ணாமலை

21 மாநகராட்சிகள்138 நகராட்சிகள்490 பேரூராட்சிகள்12838 வார்டு நாற்காலிகள்!நம்முடைய பாரதிய ஜனதா  வேட்பாளர்கள் இந்த நகர்புற...
19/02/2022

21 மாநகராட்சிகள்
138 நகராட்சிகள்
490 பேரூராட்சிகள்
12838 வார்டு நாற்காலிகள்!

நம்முடைய பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தினம் 100 வீடுகளுக்கு பிரச்சாரத்திற்க்கு சென்றுள்ளனர்.அதாவது தினமும் 25.60 லட்சம் வாக்காளர்களை சந்தித்துள்ளனர்..

கடந்த 20 நாளில் 2 கோடி வாக்காளர்களை சந்தித்தன் மூலம் இவர்கள் அத்தனை பேரிடமும் தேர்தல் நடைபெறும் அத்தனை இடங்களிலும் தாமரை சின்னம் அடையாளபடுத்தபட்டுள்ளது..

இத்தனை கோடி வாக்களார்களிடமும் அவர்களின் இல்லங்களில் நேரடியாக தாமரை சின்னம் சென்று சேர்ந்திருக்கிறது..

இரண்டு திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகம் முழுவதும் நேரடியாக வாக்களர்களை சந்தித்து அவர்களிடம் தாமரை சின்னத்தை கொண்டு சென்றுள்ளோம்..

எத்தனை இடங்களில் வெற்றி தோல்வி என்பதை விட இதுவே மிக பெரிய வெற்றி தான்..

எந்த வேட்பாளரும் விலை போகவில்லை... பயந்து விலகவில்லை.. வோட்டுக்கு பணம் கொலுசு, புடவை,என பரிசு பொருள் வழங்கும் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடவில்லை..

முழுமையாக பாரதிய ஜனதா கட்சி தனது முழு பலத்தை களத்தில் இறக்கி வேலை பார்த்துள்ளது..

ஆங்காங்கே சின்ன சின்ன குளறுபடிகள் இருக்கலாம்...இந்த குளறுபடி என்பது தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளிலும் நடப்பது தான்..

முறையாக தேர்தலை முழு அளவில் சந்தித்திருக்கின்றோம்...

இந்த மண் எங்கள் பெரியார் மண் என போலியாக அடையாளபடுத்திய மண்ணில் சந்து பொந்து இண்டு இடுக்கு விடாமல் தாமரை சின்னம் சென்று சேர்ந்துள்ளது நம் களபணியாளர்களால்.

பாரதிய ஜனதாவா எங்கே என கேட்டவர்களுக்கு சரியான பதிலடி தந்துள்ளோம்..

தேர்தல் முடிவுகள் வெற்றி தோல்வியா பாரதிய ஐனதா கட்சிக்கு என யாராவது கேட்டால் தெளிவா சொல்லுங்க...

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே நாங்க வெற்றி தான் என.


எங்கள் ஆரம்பம் என்றோ தொடங்கி விட்டது..

இது எங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி...

பாக்க தான போறீங்க எங்களின் ஆட்டத்தை இனி என சொல்லுங்க..

இன்று!இந்துமுன்னணியின் முதல் தலைவர் அமரர் ஐயா  #தாணுலிங்கநாடார் அவர்களின் 107வது பிறந்தநாள்..நீயும் உனது காவல் துறையும் ...
17/02/2022

இன்று!
இந்துமுன்னணியின் முதல் தலைவர் அமரர் ஐயா #தாணுலிங்கநாடார் அவர்களின் 107வது பிறந்தநாள்..

நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு,

இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும் என முதலமைச்சர் எம்.ஜி. ஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னது யார் ?
எப்போது ? ஏன் தெரியுமா ?

மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்தவர் எம் ஜி ஆர்…கலவரத்தை நிறுத்தும் விதமாக அவர் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்து போனார் இந்துக்களின் காவலர் அய்யா தாணுலிங்க நாடார்.

நான் முதலமைச்சர் என்று தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம் ,

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ,மொழி எல்லை போரில் தலைமை தாங்கி.MPயாக ,
MLA வாக ,எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர் என்பதை இப்போது அறிந்தேன்

என்னுடன் மோதியது எனக்கு இணையான தலைவரே பெருமை படுகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவுசெய்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

பொதுமேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொது படியே என்னை இறைவன் அழைக்கிறான் என்று சொல்லி உயிர் விட்டார் அய்யா தாணுலிங்க நாடார்.

"தன் இறப்பை தானேஅறிவித்தவர்" புண்ணியம் செய்த உயிர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள்.

தன் இறுதி மூச்சு வரை இந்துக்களுக்காக போராடியவர் தாணுலிங்கநாடார்.

ஐயா அவர்களின் 107 வது பிறந்தநாளில் இந்து சமுதாயத்திற்கு தொடர்ந்து போராட சபதமேற்போம்.. 🚩

பிப்ரவரி 6ம் தேதி ஆரம்பித்த ஓட்டம் இன்னும் ஓயவில்லை .. சென்னை ஆரம்பித்து கடலூர் முடித்து கோவை தாண்டி குமரி வரை அனைத்து ம...
16/02/2022

பிப்ரவரி 6ம் தேதி ஆரம்பித்த ஓட்டம் இன்னும் ஓயவில்லை ..

சென்னை ஆரம்பித்து கடலூர் முடித்து கோவை தாண்டி குமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சார உழைப்பு ..

அந்த கண்கள் சொல்கின்றன சரியாக தூங்கி
பல நாட்கள் ஆகின்றது என்று.!
வாடிய முகம் சொல்கின்றன உடம்பில் எவ்வளவு வலி, சோர்வு உள்ளன என்று !

ஆனால்?

அவரின் உறுதியான உள்ளம் சொல்கின்றன, திமுகவை ஒழித்துக்கட்டி பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது என்று..!!

உண்மையான உழைப்பிற்கு பலன் நிட்சயம் கிடைக்கும் ❤️

உலகவரலாற்றில் பிப்ரவரி 14  அன்று நடந்த விஷயங்களிலேயே முக்கியமானது, 1984  ம் ஆண்டு   டிசம்பர் 2 -3 தேதிகளில் போபாலில் விஷ...
14/02/2022

உலகவரலாற்றில் பிப்ரவரி 14 அன்று நடந்த விஷயங்களிலேயே முக்கியமானது, 1984 ம் ஆண்டு டிசம்பர் 2 -3 தேதிகளில் போபாலில் விஷவாயு கசிந்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பிற சேதங்களை யூனியன் கார்பைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் 1989 ம் ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி ஒப்புக்கொண்டு சுமார் 47 கோடி அமெரிக்க டாலர்களை இழப்பீடாக தருவதாக உறுதியளித்தது தான்.

இந்த பேரழிவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50000 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிறுவனத்தின் தலைவரை பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து தப்பிக்கவிட்டது யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆம், அவரேதான்.

சொந்தநாட்டின் மக்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் செத்துவிழுந்தபின்னரும், நவீன வரலாற்றில் மிகப்பெரிய தொழிற்சாலை பேரழிவு இந்தமண்ணில் நிகழ்ந்தபின்னரும், அந்நிறுவனத்தை, அதற்கு காரணமானவர்களை பாதுக்காக்க அனைத்து முயற்சிகளும் அடுத்தவர்களை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது.

இவ்வளவு துயரத்திலும், ஆபத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் ஓடோடி சென்று உதவிசெய்தது, இறந்தவர்களை எரியூட்டியது போன்றவற்றை செய்தது யார் என்று கடைசிபடத்தை பார்க்கவும். ஆமாம், காக்கி டவுசர் தான் உதவிசெய்தது.

Address

Thiruverumbur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharat Civilian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share