Sivasenthil Kumar

Sivasenthil Kumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sivasenthil Kumar, Public & Government Service, Thiruvarur.

இன்று எனது காவல் பணியின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்... #கும்பகோணம்  இன்று(09.10.24) இரவு  8 மணி இருக்கும் நான் எனது க...
10/10/2024

இன்று எனது காவல் பணியின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்...

#கும்பகோணம்

இன்று(09.10.24) இரவு 8 மணி இருக்கும்
நான் எனது காவல் வாகனத்தில் மாலை ரோந்து சென்றபோது கும்பகோணம் , சோலையப்பன் தெரு அருகில் ஒரு மின் கம்பத்தின் வெளிச்சத்தில் ஐந்து சிறுவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து காவல் வாகனத்திலிருந்து இறங்கிச்சென்று அருகில் நின்று ஆர்வமாகப் பார்த்தேன்.உண்மையில்
மனம் நெகிழ்ந்துபோனேன்....

ஐந்து பேரில் இரண்டு சிறுமிகள் மூன்று சிறுவர்கள்.
அனைவரும் அந்த தெருவோர மின் கம்பத்தின் வெளிச்சத்தில் பள்ளி புத்தகங்களுடன் ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தனர்.
நான் அவர்களை உற்று நோக்கினேன்.
அனைவரது எழுத்துக்களும் முத்துக்களாக இருந்தது. அப்போது
என்னை பார்த்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர்.அதுவும் மிக ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து சற்று மெல்ல பேச்சு கொடுத்தும் படிப்பிலிருந்து அவர்களின் கவனம் சிதறவில்லை.
அதில் ஒரு சிறுமி 10 ம் வகுப்பு பயில்கிறார்.அவர் அனைவருக்கும் பாடமும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு தானும் படித்தார்....
அருகில் இருந்த பெரியவர் ஒருவரிடம் விசாரித்தபோது இவர்கள் அனைவரும் தினசரி இந்த இடத்திற்கு வந்து இதுபோன்று படிப்பதாகவும் இவர்களது தந்தை ஒரு கூலித்தொழிலாளி என்றும் தெரிவித்தார்.

தனியார் பள்ளியில் படித்தாலும், டியூசன் வைத்து தேற்றவேண்டிய இக்காலகட்டத்தில், கூட்டாக அமர்ந்து செல்போனில் மூழ்கி சீரழியும் சமுதாயத்தில்,...
தன் எதிர்காலம் கருதி
தன் குடும்பத்தின் நிலை கருதி,
சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,
யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்,
கல்விதான் முக்கியம் என்று அறிந்து இக்காலத்திலும் தெருவோர மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் இக்குழந்தைகள் உண்மையிலேயே சாதிக்கப்பிறந்தவர்கள்...

இவர்களது பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்கள்...
இவர்களது ஆசிரியர்கள் போற்றக்கூடியவர்கள். ..

சிறுவர்கள் அனைவரையும் அழைத்து உற்சாகப்படுத்தி பாராட்டி நான் புறப்பட்டபோது மணி இரவு 9.30 .பின்னர் அங்கிருந்த 5 வயது சிறுவன் மட்டும் எனக்கு கையசைத்து என்னையும் என் காவல் வாகனத்தையும் பார்த்துக்கொண்டே வழியனுப்பினான் .அவன் பார்வையில் மிகப்பெரிய லட்சியம் இருப்பது உறுதி....
அந்த இடத்திலிருந்து வந்துவிட்டாலும் மனம் அங்கேதான் நிற்கிறது.

🚨🚔🚨
08/05/2024

🚨🚔🚨

*தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை* *கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம்*🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥காரிலிருந்து ரூ.*17 லட்சம் பணத்தை திருடி சென்ற...
01/03/2024

*தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை*

*கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
காரிலிருந்து ரூ.*17 லட்சம் பணத்தை திருடி சென்ற ஆறு பேர் அதிரடி கைது*
# # # # # # # # # # # # # # # # # # # # # # #
திருவிடைமருதூய் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த *சந்திரசேகர்* என்பவர் தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட காசோலைகளை எடுத்துக்கொண்டு
பணமாக்க தனியாக
கும்பகோணம் அசூர் மற்றும் கொரநாட்டு கருப்பூர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில்
கடந்த 22.02.24 அன்று ரூபாய் 17 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு
கம்புப்பையில் வைத்து தனது KIA காரில் இடதுபுற இருக்கைக்கு கீழ் வைத்துவிட்டு தானே அந்த காரை ஓட்டிக்கொண்டு
கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகம் கும்பகோணம்,காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள மோகன் காபி கடையின் அருகில் மதியம் 2 மணியளவில் நிறுத்திவிட்டு
காபி தூள் வாங்க சென்றதாகவும்,காரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள் காரில் இருந்த பணத்தை திருடி சென்றதாகவும் கூறி சந்திரசேகர் அன்றையதினம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* திரு ஆஷிஸ்ராவத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்
*திரு.கீர்த்திவாசன்*TPS அவர்களின் நேரடி மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் *திரு.க.சிவசெந்தில்குமார்* மற்றும்
உதவி ஆய்வாளர்கள்
*திரு.சி.கீர்த்திவாசன்*
*திரு.சுபாஷ்*
SSI செல்வகுமார்,
HC சதீஷ், HC சுரேஷ்,
HC பாலசுப்பிரமணியம், HC செந்தில்குமார்,
WHC சுகுனா
GR I ஜனார்த்தனன்,
GR I நாடிமுத்து,
GR I ராஜ்குமார்,
GR II சுகன்யா
PC முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட *1)செந்தில்குமார்@ மண்டை செந்தில்குமார் 40/24*
த/பெ ராஜேந்திரன்
இளங்கோ நகர்
அரும்பாவூர்
பெரம்பலூர் மாவட்டம்

*2)சுக்காபி@சுரேஷ் 27*
த/பெ மூர்த்தி
சித்ரா நகர்
கோட்டூர்புரம்
சென்னை

*3)சசிகுமார் 30/24*
த)பெ சுரேஷ் குமார்
அக்னி குப்பம்
வீடூர்
விழுப்புரம் மாவட்டம்

*4)விஷ்வா 21/24*
த/பெ சுரேஷ்
ஊத்துக்காடு
வாலாஜாபாத்
காஞ்சிபுரம் மாவட்டம்

*5)சாந்தகுமார் 23/24*
த/பெ பாண்டியன்
அண்ணா வளைவு
துவாக்குடி
திருச்சி மாவட்டம்

*6)செல்வ கணபதி@ ராசுக்குட்டி 19/24*
த/பெ பிரதாபன்
சித்ரா நகர்
கோட்டூர்புரம்
சென்னை
ஆகிய *ஆறு பேரையும்*
இன்று(01.03.24) காலை
*கைது செய்து* அவர்களிடம் இருந்து *ரூ.7,72,000/-* பணத்தையும் அவர்கள் பணத்தை திருட பயன்படுத்திய
*மூன்று பஜாஜ் பல்சர்* இருசக்கர வாகனங்களையும்
*3 செல்போன்களையும்*
கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு
சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள
*செந்தில்குமார் @மண்டை செந்தில்குமார்* என்பவருக்கு வழிப்பறி,கொள்ளை,
கன்னக்களவு, உள்ளிட்ட
44 வழக்குகளும்,
*சுரேஷ்* என்பவருக்கு கொலை, வழிப்பறி உள்ளிட்ட
12 வழக்குகளும்,
*சசிகுமார்* என்பவருக்கு வழிப்பறி, கன்னக்களவு, திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகளும், *சாந்தகுமார்* என்பவருக்கு வழிப்பறி , திருட்டு உள்ளிட்ட 08 வழக்குகளும்,
*விஷ்வா* மற்றும் *செல்வகணபதி* ஆகியோருக்கு தலா ஒரு அடிதடி வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில்குமார்,சுரேஷ், சசிகுமார், சாந்தகுமார்,விஷ்வா,செல்வகணபதி ஆகியோர் தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்துகொண்டு திருடிய பணத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துகொண்டு மேலும்
பல குற்றச்செயல்களுக்கு திட்டம் தீட்டி வந்தநிலையில் கும்பகோணம் உட்கோட்ட கிழக்கு காவல்நிலைய தனிப்படையினர் அவர்களை கூண்டோடு அதிரடி கைது செய்துள்ளனர்.

மேலும் தனிப்படையினர் மேற்படி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகளின் கூட்டாளிகள் யார் என்பதை தொடர்ந்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

26/01/2024

சட்டத்திற்கு புறம்பாக புகையிலையை விற்பனைக்கு எடுத்து வந்தவர் கைது...
27/08/2022

சட்டத்திற்கு புறம்பாக புகையிலையை விற்பனைக்கு எடுத்து வந்தவர் கைது...

My Son S.A.சத்ரியன் சிவா
25/06/2022

My Son S.A.சத்ரியன் சிவா

24/06/2022
28/04/2022

My Daughter மீனு
#திருவாரூர்

 #தமிழ்  #தமிழ்புத்தாண்டு #நண்பர்கள்
14/04/2022

#தமிழ்
#தமிழ்புத்தாண்டு
#நண்பர்கள்


11/04/2022

காவல்துறை

Address

Thiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivasenthil Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share