17/04/2017
வணக்கம்.
நம் தஞ்சையில் என்ன இல்லை.உயர் பல்கலைகழகங்களும், மருத்துவக்கல்லூரியும் உள்ளன.தமிழுக்கென்று உலகினில் இருக்கும் ஒரே பல்கலைகழகமும் நம் ஊரான தஞ்சையில் தானே இருக்கிறது.
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, தஞ்சை மருதவக்கல்லூரி, மதுரை மருதவக்கல்லூரிகள் தான் முறையே முதல் மூன்று இடங்களை பிடிக்கிறது. அது போக சுற்றி இருக்கும் மாவட்டங்களான திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர், நாகைபட்டினம்,விழுப்புரம் ஆகிய மாவடங்களிலிருந்து தினமும் 1000 மேற்பட்ட புறநோயாளிகள்(out patient) தஞ்சை மருதவக்கல்லூரிக்கு வருகை தருகின்றனர்.
தஞ்சையில் பாஸ்போர்ட்(கடவு சீட்டு)(passport) அலுவலகம் ஒன்று பாஸ்போர்ட் கேன்றவின் கீழ் திறக்கப்பட்டது.அது திருவாரூர், நாகைபட்டினம் ,அரியலூர்,தஞ்சை ஆகிய நான்கு மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.திருச்சியை காட்டிலும் தஞ்சை அலுவலகம் தான் ஒரு நாளைக்கு அதிக விண்ணப்பங்களை( 620) பரிசீலிக்கிறது.தமிழகத்தில் அதிக பாஸ்போர்ட் இங்கு தான் தரப்படுகிறது.
90 களில் நமது தஞ்சையில் வாய்தூத் (vaydoot) என்ற "தஞ்சை-சென்னை" விமான சேவை இருந்தது இன்று தஞ்சையில் இருக்கும் பலருக்கு தெரியுமா என்பது சந்தேகமே!!!???(தவறிருப்பின் மன்னிக்கவும்).
திரு.காமராஜர் அவர்களின் காலத்தில் ஒரு கேள்வி கேட்டாராம்.தஞ்சையில் தென்னக ரயில்வே கோட்டத்தை தலைமையாக வைப்போமா?அல்லது LIC யை தலைமையாக வைப்போமா என்று? யாரோ ஒருவர் தஞ்சையில் LIC யை தலைமையாக வைப்போம் என்று கூறினாராம்!!!!!????? அந்த தஞ்சை LIC யானது இன்று 9 மாவட்டங்களுக்கு தலைமை. ஆனால் திருச்சி வாசிகளோ தஞ்சை LIC கோட்டத்தை உடைத்து திருச்சிக்கேன்று தனி கோட்டம் கேட்பதாக செய்தி!!!காரணம் திருச்சி போன்ற பெரிய ஊர்களுக்கு தஞ்சை தலைமையாக இருக்கலாமா என்று?அன்றைக்கு அந்த தென்னக ரயில்வே மட்டும் தஞ்சையில் அமைந்திருக்குமானால் தஞ்சை இன்னும் 20 வருடங்களுக்கு முன்பே மாநகராட்சி ஆகியிருக்கும் .இன்னும் சகல வசதிகளும் தஞ்சைக்கு வாசிகளுக்கு முன்பே கிடைத்திருக்கும்.
அது போல முன்பு ஓடிகொண்டிருந்த பல ரயில்களை காணோம்?
திரு.MGR அவர்கள் தமிழ்நாடு தலைமை செயலகத்தை தஞ்சைக்கும்-திருச்சிக்கும் இடையில் கட்டி,அமைக்க தீவிரம் காட்டினார் .ஆனால் அன்றைய அரசியல் தலைவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. அப்படி அமைந்திருந்தால் இன்னும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கும் நமது தஞ்சை.
நாம் கூறுவதெல்லாம் ஒன்று தான் நில அபகரிப்பை விட மோசமானது தகுதியுள்ளவருக்கு தகுதியானதை தர விடாமல் தடுக்க செய்வது.திருச்சிக்கு வலது கரம் போன்றது நமது தஞ்சை .ஆனால் அவர்களோ நம்மிடம் இருந்து எதையெல்லாம் எடுக்க வேண்டும் என பார்த்து எடுத்து கொள்கின்றனர்.
ஒன்றே ஒன்று தான் நான் கூற ஆசைபடுகிறேன்.வரலாற்று,நவீன காலத்திற்கு ஒரு பாலமாக இருப்பது தமிழகத்தில் தஞ்சை மட்டுமே.அதை போற்றி பாதுகாப்பது அரசின்,மக்களின் கடமை.அதற்க்கு நிறைய கட்டமைப்புகள் அமைத்து தருவது அரசின் கடமை.
அதிகாரம்,வசதிகள் ஒரே இடத்தில இருந்தால்,குவிந்தால் அங்கு நிலைமை மோசமாகும்.உதாரணம் "சென்னை" அங்கு போக்குவரத்துக்கு மிகுந்த சிரமம்.அதனால் ஒரு சில பெரிய நிறுவனகள்,கல்வியகங்கள் போன்றவைகளை தஞ்சை மாதிரி அதிக போக்குவரத்து வசதியுள்ள மாவட்டதிற்கு தருமாறு கேட்டுக்கொள்ள படுகிறது,
எவ்வளவு வசதி வந்தாலும் தஞ்சையை குறை கூறுபவர்கள் தஞ்சையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர்!!!?