20/01/2020
#தஞ்சை_விமானப்படை_தளத்தின்_முக்கியத்துவம் !!
இன்று முதல் தஞ்சை பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, ஸக்வார்ட்ஸ் தேவாலயம், சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றுடன் தஞ்சை விமானப்படை தளமும் முக்கிய இடங்கள் பட்டியலில் இடம்பெற உள்ளது.
நமது தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தஞ்சை நகரில் உள்ள இந்த விமானப்படை தளமானது மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த முன்னேற்றமாகும் காரணம் ஏற்கனவே கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் நம் நாட்டு சொந்த தயாரிப்பான தேஜஸ் படையணி நிலைநிறுத்தபட்டு இருந்தாலும் அவற்றால் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாது.
ஆனால் நமது சுகோய் 30எம் கே ஐ விமானங்கள் அதிக ஆயுதங்களுடன் குறிப்பாக உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மாஸ் ஏவுகணையை சுமக்கும் திறன் கொண்டவையாகும்.
அதாவது பிரம்மாஸ் ஏ ரக ஏவுகணையில் ஒன்றை சுமக்கும் , ஆனால் பிரம்மாஸ் என் ஜி எனில் அவற்றில் 5 ஏவுகணையை சுமக்கும், இந்த ஏவகணைகள் 300கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியவை, சீன கப்பல்களில் உள்ள விமான எதிர்ப்பு ஏவகணைகள் 200கிலோமீட்டர் மட்டுமே செல்லக்கடியவை என கூறப்படுகிறது ஆகவே சுமார் 100கிலோமீட்டர்களுக்கு முன்னதாகவே நமது விமானங்கள் பிரம்மாஸை சீன கப்பல்களை நோக்கி ஏவி விட்டு திரும்ப முடியும். 1பிரம்மாஸ் ஏவுகணையை இடைமறிப்பதே சாத்தியமற்ற ஒன்றாக கருதப்படும் நிலையில், பல பிரம்மாஸ் ஏவுகணைகளை தடுப்பது என்பது இயலாத காரியம் ஆக எதிரி இலக்குகள் அழிவது உறுதி.
மேலும் இந்த விமானங்களின் தாக்குதல் வரம்பு சுமார் 3000கிலோமீட்டர்கள் ஆகும், இதனால் ஒட்டுமொத்த தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்க தளமான டீயகோ கார்சியாவில் உள்ள கேம்ப் தன்டர்கோவ் மற்றும் ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பகுதியும் இனி நமது கண்காணிப்பின் கீழ் வரும்.
இந்த விமானங்கள் 4.5 தலைமுறை போர்விமானங்கள், தெற்காசிய பகுதியில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்கு நவீனமானவை, கடந்த வருடத்தின் பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதலில் ஈடுபட்ட மிராஜ் விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்படையிடம் இருந்து பாதுகாப்பு வழங்கியது இந்த விமானங்கள் தான என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருடன் காவலாளி இல்லாத வீட்டில் கொள்ளையிட தான் முயற்சிப்பான் அது மாதிரி பாதுகாப்பு அதிகம் இருக்கும் வடக்கு பிராந்தியத்தை விட இந்தியாவின் தென்பகுதி இலகுவான இலக்காகும் (SOFT TARGETS) போர்க்காலங்களில் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மதுரை, கொச்சி போன்ற நகரங்கள் மற்றும் பிற கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் பட்டியலில் உள்ளன ஆகவே தான் இந்த படைத்தளம் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ளது ஆகவே இனி முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானங்களின் வருகையால் இந்த நிலைமை மாறும்.
#குறிப்பு இனி சீன கப்பல்களின் உல்லாச பயணம் எளிதாக இருக்காது 😂😂, ஆக இனி தஞ்சை நமது பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !!
தஞ்சை மக்களே உங்கள் ஊரின் ருசி மிகுந்த சுருள் பொளி உங்கள் நாவுக்கு விருந்து படைப்ப்பது போல, இனி தஞ்சை வான்பகுதியில் சுகோய்30 விமானங்களும் உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன !!
#ஜெய்ஹிந்த்
#வந்தே_மாதரம்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳