03/07/2016
Good morning to all...
அனைவருக்கும் வணக்கம் !!!
***அகில இந்திய காங்கிரஸ் ஆய்வு வட்டம் என்று அன்புடன் அழைக்கப்படும் அகில இந்திய ஆய்வு வட்டம் / All India Study Circle (AISC) நிர்வாகிகள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இவ்வமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் தரும் பதில் …
***** Study circle என்பதை ஆய்வு வட்டம் என்று முதலில் தமிழில் பெயரிட்ட நான் All india study circle என்று ஆங்கிலத்திலும் குறிப்பாக அகில இந்திய ஆய்வு வட்டம் என்பது இந்தியாவில் முதல்முறையாக தமிழிலும் முறைப்படி பதிவுசெய்துள்ள டிரஸ்ட் சார்ந்த முதல் அமைப்பு என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு என்னோடு உறுதுணையாக இருந்த, இருக்கின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி…
All India Study Circle நாடு முழுவதும் காங்கிரஸின் கொள்கைகளை பரப்பவும் , மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது.
அரசியல் என்பது எளிதில் சாமானிய மக்கள் நுழைந்து வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை , அரசியலில் நுழைந்தவர்கள் எந்த முறையில் மக்கள் பணி ஆற்றி தன்னை வளர்த்துக் கொள்வது என்று திகைத்து நிற்கும் நிலை , அரசியலில் வர மற்றவர்களையே சார்ந்து நின்றே வெற்றி பெற வேண்டும் என்ற நிலை , நல்ல மக்கள் பணிகளை செய்தாலும் அகில இந்திய கட்சியிடம் உரிய முறையில் அவர்தம் செயல் சென்று அடையாமை , தனக்கென தனித்தன்மையும் , ஆதரவாளர்களையும் உருவாக்காமல் பிறருக்காக அரசியல் செய்து ஏமாற்றம் அடைதல் என்ற நிலை .
காங்கிரஸில் உதாரணமாக மகிளா காங்கிரஸ் என்பது மேலிட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. நம்முடைய அகில இந்திய ஆய்வு வட்டம் (All India Study Circle ) மேலிடத்தால் நன்கு அரியப்பட்ட அமைப்பு . ஆனால் இதை அங்கீகாரம் உள்ள அமைப்பாக மாற்ற , மேலிடம் உங்களை முழுமையாக கவனிக்க , மேலிடத்தில் நேரடி தொடர்பு கொள்ள , வருங்காலங்களில் நீங்கள் செய்யும் field work மூலம் , உங்கள் பலத்தின் மூலம் , நீங்கள் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் இந்த அமைப்பில் உள்ள பெரியோர்கள் மூலம் நீங்கள் அடையாளம் காணப்பட்டு கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் இணைந்து பணியாற்றவும் , எதிர்கால உங்களது அரசியல் வாழ்க்கையை வளமாக்கி கொள்ளவும் All India Study Circle என்ற இந்த அகில இந்திய அமைப்பை முழுமையாக கட்சியால் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்ற All India Study Circle – ல் உள்ள அனைவரும் மக்கள் செல்வாக்குடன் முயல்வோம் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் வரை நம்முடைய மக்கள் பணிகளின் மூலம் சுயவளர்ச்சி , கட்சி வளர்ச்சி , ஆகியவற்றை மனதில் கொண்டு செயல்படுவோம் . இது நமக்கான அமைப்பு , கட்சியின் வளர்ச்சிக்கான அமைப்பு , மக்களுக்கான அமைப்பு , நம் one and only leader ராகுல் காந்திக்கான அமைப்பு. அதிக சிந்தனை வேண்டாம். All India Study Circle –ன் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் பணி செய்தாலே போதும் . ஜாதி , மதம் , படிப்பு இவற்றையெல்லாம் கடந்து மக்கள் சேவையில் உங்களுக்கு உள்ள ஆர்வம் அடிப்படையில் உங்களை தலைவர்களாக உருவாக்கியுள்ளோம் . அதை தக்க வைத்து கொள்வது உங்களுடைய போராட்ட மக்கள் சேவையில் உள்ளது . எங்களை போன்றவர்களின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. ஒத்த கருத்து !!! ஒருங்கிணைப்பு... என்ற உறுதியோடும் “மக்களை நோக்கி அகில இந்திய ஆய்வு வட்டம் என்றும் மக்கள் பணியில் அகில இந்திய ஆய்வு வட்டம்”
உங்களுடன் உங்கள் சகோதரி...
ரேவதி ஷாக்கிலோ,
தமிழ்நாடு மகளிரணி மாநில செயலாளர்,
இந்திய தேசிய காங்கிரஸ்.
தலைவர், அகில இந்திய ஆய்வு வட்டம்,
ALL INDIA STUDY CIRCLE (AISC)
Revathi Shackilo's photo.