தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை

  • Home
  • India
  • Tenkasi
  • தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை

தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை ஜீவகாருண்யம்

12/07/2026
*தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை*​பதிவு எண்: 25/2020​🙏 அன்பார்ந்த நன்கொடையாளர்களே வணக்கம்! 🙏​"யாரும் பசியோடு உறங்கக் க...
02/07/2026

*தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை*
​பதிவு எண்: 25/2020

​🙏 அன்பார்ந்த நன்கொடையாளர்களே வணக்கம்! 🙏

​"யாரும் பசியோடு உறங்கக் கூடாது" என்ற உன்னத நோக்கத்தோடு, கடந்த 6 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்களுக்குத் தொடர்ந்து தினசரி உணவு வழங்கி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

​🌧️ தற்போதைய இக்கட்டான சூழ்நிலை:
​தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால், இருசக்கர வாகனத்தில் உணவை நனையாமல், பாதுகாப்பாக எடுத்துச் சென்று முதியவர்களிடம் சேர்ப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

​🛺 நமது அடுத்த இலக்கு:
​மழைக்காலத்திலும் தடையின்றி உணவு வழங்க ஏதுவாக, ஒரு *எலக்ட்ரிக் ஆட்டோ* (Electric Auto) வாங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிதி திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

*​(உதவிக்கான அழைப்பு : +918270024661)*

​🤝 உங்கள் கரம் கொடுங்கள்... ஒரு உயிர் காப்போம்!

​நல்ல உள்ளம் கொண்ட கொடையாளர்கள் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி, இந்த உன்னத சேவை தடையின்றி தொடர உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*​📲 நிதி உதவி செய்ய வேண்டிய விபரம்:
​GPay / PhonePe / Paytm Number: 82700 24661*

*​"நல்லதே செய்! நன்மையே நடக்கும்!!"*
​தொடர்புக்கு: 8270024661
இடம்: தென்காசி மாவட்டம்,செங்கோட்டை - கற்க்குடி

25/06/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் ஆதி பழங்குடியினர் சுமார் 40 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் இவர்கள் இதுவரையிலும் தனது வாழ்வாதாரத்திற்கு தேவையான எந்த விதமான அரசியல் சலுகைகளையும் பெற முடியாமலும் கல்வியில் தங்கள் வாரிசுகளுக்கு தேவையான உதவிகளை பெற முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்கள் இவர்களுடைய தற்போதைய கோரிக்கை தங்கள் படிக்கும் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் தேவை அதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் தங்களிடம் இல்லாமல் பல போராட்டங்கள் பல மனுக்களை இதற்கு முன்பு இருந்த முதல்வர் அவர்களிடமும் வழங்கி இருக்கிறார்கள் ஒரே ஒரு நபர் மட்டும் எட்டாவது படித்து அந்தப் பள்ளி சான்றிதழில் காட்டுநாயக்கன் என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது இது ஒன்றை மட்டுமே வைத்து அவர்கள் தங்களுக்கான ஜாதி சான்றிதழ் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு முயற்சி செய்தார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் இந்த செய்தியை கருணை கூர்ந்து கவனித்து இந்த மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்

A. கோமதிநாயகம்,
தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை.

19/06/2026

கொரான காலகட்டத்தில் துவங்கிய அன்ன சேவை அன்று பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் வீட்டில் குழந்தைகள் மற்றும் அவர்கள் நண்பர்களோடு சேர்ந்து உதவிய நேரம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள செய்தியை பார்க்க மகிழ்ச்சி...

--- # # # *🙏 _அன்னையின் ஆசீர்வாதம்_ 🙏**முகநூல் உறவுகளே,*  *இன்று எங்கள் மனம் நெகிழ்ந்த நாள்.*  *பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவ...
13/06/2026

---

# # # *🙏 _அன்னையின் ஆசீர்வாதம்_ 🙏*

*முகநூல் உறவுகளே,*

*இன்று எங்கள் மனம் நெகிழ்ந்த நாள்.*

*பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனர்,*
*அன்பு சகோதரர் திரு. குட்டி ராஜா என்கிற கண்ணன் அவர்கள்,*

*தனது தாயாரின் நினைவு நாளை முன்னிட்டு,*
*நமது _தாயின் மடியில் அறக்கட்டளை_ மூலம்*
*150+ ஆதரவற்ற முதியோர்களுக்கு*
*சிறப்பான அறுசுவை உணவு வழங்கி*
*தன் தாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.*

*தாயை இழந்த துயரத்திலும்,*
*பல தாய்மார்களின் வயிற்றுப்பசியை போக்கி*
*அவர்களின் முகத்தில் புன்னகையை பார்த்த*
*உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு*
*கோடி நன்றிகள் சகோதரா 🙏*

*நீங்கள் செய்த இந்த அன்னதானத்தால்*
*உங்கள் தாயாரின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்.*
*வானில் இருந்து உங்களை வாழ்த்தும்.*

*_தாயின் மடியில் அறக்கட்டளை_ சார்பாகவும்,*
*150 முதியோர்கள் சார்பாகவும் நாங்கள்*
*இறைவனை வேண்டிக்கொள்கிறோம்:*

*"எல்லாம் வல்ல இறைவா!*
*திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தை*
*நோய் நொடி இல்லாமல் காத்திடு.*
*அவரது பி.கே.ஆர் குரூப்ஸ் தொழில்*
*மென்மேலும் வளர்ந்து செழிக்க அருள்புரி.*
*அவர் வாழ்வாங்கு வாழ வழிகாட்டு."*

*நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏*

*இப்படிக்கு,*
*A. கோமதிநாயகம்*
*தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை*
*8270024661*

*வாழ்க வளமுடன்* 🤲

Address

Thaiyin Madiyil Social Welfare Trust, Kargudi, Sengottai/Taluck
Tenkasi
627809

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category