SDPI கட்சி தென்காசி மாவட்டம்

  • Home
  • India
  • Tenkasi
  • SDPI கட்சி தென்காசி மாவட்டம்

SDPI கட்சி தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டம் SDPI கட்சி அதிகாரபூர்வ தளம்

தென்காசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் தென்காசி தொகுதியில் போட...
30/05/2026

தென்காசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற Dr.கலை கதிரவன் MLA அவர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தலும் மற்றும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சுரண்டை கலைஞர் நினைவு அரங்கத்தில் வைத்து
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது

கூட்டத்தில் SDPI தென்காசிமாவட்ட தலைவர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர்கள் சர்தார் மற்றும் அப்துல் பாசித், சுரண்டை நகர செயலாளர் அண்ணன்அமல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்பும்,அமைதியும்,ஆரோக்கியமும்,இன்பமும் எல்லாம் இறைவனால் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.அனைவருக்கும் ஈத் முபாரக்…
27/05/2026

அன்பும்,அமைதியும்,ஆரோக்கியமும்,
இன்பமும் எல்லாம் இறைவனால் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
அனைவருக்கும் ஈத் முபாரக்…




*பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள ரூ.20/- கட்டணத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாய சங...
27/05/2026

*பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள ரூ.20/- கட்டணத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாய சங்கம் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக குளிக்கும் போராட்டம் இன்று 27-05-2026 புதன்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.*

*போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் M.அப்துல் பாசித் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதியின் அமைப்பு பொது செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பங்கெடுத்தனர்*.






நீண்ட நாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு உடனடி பரோல் வழங்கிடுக! - தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!​இதுதொ...
25/05/2026

நீண்ட நாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு உடனடி பரோல் வழங்கிடுக! - தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

​இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

​தமிழகச் சிறைகளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக, அதாவது 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்டனர். அரசின் கருணை விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில், பரோலில் இருந்த இவர்களுக்கான பரோல் காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அவர்கள் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாகக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்துவந்த சிறைவாசிகள் உட்பட அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த மனிதாபிமானப் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

​முன்னாள் சிறைவாசி பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சட்டப்பூர்வ முன்னுதாரணங்கள் உள்ள நிலையில், அதே சட்டக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எவ்விதப் பாரபட்சமுமின்றி துரிதப்படுத்த வேண்டும். மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில், அந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்ய அரசு உரிய ஆவன செய்ய வேண்டும்.

​மேலும், அவர்களின் இறுதி விடுதலைக்கான சட்ட வழிமுறைகள் நிறைவடையும் இடைப்பட்ட காலம் வரை, அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிடத் தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே தற்போதைய முதன்மையான கோரிக்கையாகும். பரோல் நீட்டிப்பு மட்டுமே இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்காலிக நிம்மதியைத் தரும்.

​கால் நூற்றாண்டு காலச் சிறைவாசம் என்பது ஒரு மனிதனின் ஆயுளில் பெரும்பகுதியாகும். இவர்களின் எஞ்சிய வாழ்நாளையாவது தங்களது குடும்பத்தினருடன் கழிக்கும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையைத் தனிப்பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, முதற்கட்டமாக இவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிட விரைந்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

​இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu

ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பதவியேற்பு விழா SDPI மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!தென்காசி மாவட்டம் புளியங்குடி பாரம்பரியமிக...
24/05/2026

ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பதவியேற்பு விழா SDPI மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பாரம்பரியமிக்க மீராசா அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கமிட்டிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் திவான் ஒலி அவர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட செயலாளர் சீனா, சேனா. சர்தார், தென்காசி தொகுதி அமைப்பு செயலாளர் அப்துல்காதர் @அபு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அன்சாரி, வாசு தொகுதி செயலாளர் முசாபர் அகமது, தொகுதி அமைப்பு செயலாளர் இம்ரான்கான், தொகுதி துணை செயலாளர் பாதுஷா, நகர செயலாளர் நவாஸ்கான், நகர இணை செயலாளர் யாசின், கிளை நிர்வாகிகள் சிக்கந்தர், ரஹ்மத்துல்லாஹ், அஜீஸ்,தொகுதி ஊடக பொறுப்பாளர் ஷேக் முகம்மது மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் புளியங்குடி நகர SDPI கட்சியின் அல...
23/05/2026

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் புளியங்குடி நகர SDPI கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து தம்முடைய வெற்றிக்காக பாடுபட்ட SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

👉🏻முஸ்லீம் சிறைவாசிகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
👉🏻புளியங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புளியங்குடி பகுதியை தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
👉🏻புளியங்குடி மேற்கு பகுதியில் கல்லூரி அமைத்தல் மற்றும் காயிதே மில்லத் நகரில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்ந்து செயல்பட வைக்க வலியுறுத்தியும்.

போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது. இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் நிச்சயமாக குரல் கொடுப்பேன் என்று வாசு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயலாளர் நவாஸ் கான், தொகுதி செயலாளர் அகமது SDPI கட்சியின் தொகுதி மற்றும் நகர நிர்வாகிகளும், திமுக நகர செயலாளர் நாகூர் கனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.....

ஜமாத் கமிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா  SDPI கட்சிக்கு அழைப்பு...!தென்காசி மாவட்டம் புளியங்குடி மீராசா அஹ்லுஸ் ...
23/05/2026

ஜமாத் கமிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா SDPI கட்சிக்கு அழைப்பு...!

தென்காசி மாவட்டம் புளியங்குடி மீராசா அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் ( மேலப்பள்ளிவாசல் ) ஜமாஅத் கமிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாளை (24.05.2026,ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகின்றது.விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகள் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் திவான்ஒலி அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட மாவட்ட தலைவர் அவர்கள் புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

21/05/2026

நன்றி ராஜா Tv செய்திகள்.. 💐💥

அரசு மருத்துவமனையா..? அரசியல் கட்சியின் அட்ராசிட்டி கூடமா...?  அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்த தவெக ...
21/05/2026

அரசு மருத்துவமனையா..? அரசியல் கட்சியின் அட்ராசிட்டி கூடமா...?

அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்த தவெக நிர்வாகிகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI கட்சி வலியுறுத்தல்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தென்காசி மேற்குமாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேகி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து, மருத்துவர் போல வெள்ளை கோர்ட் அணிந்து, மருத்துவமனையின் வருகை பதிவேடு மற்றும் நோயாளிகள் சம்மந்தமான தகவல்களை ஆய்வு செய்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்ற விதியினை மீறி அரசியல் கட்சியினர் ஆய்வு செய்வது, பணியில் உள்ள மருத்துவர்களை அதிகார தோரணையுடன் கேள்வி கேட்பது " தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் " என்பது போல் ஆகிவிடும். ஆகவே சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி பெண் நிர்வாகி மற்றும் உடன் சென்ற அனைவரின் மீதும் இந்திய நீதியியல் சட்டம் BNS (பிரிவு 221, 329) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி எவ்வித அரசியல் தலையீடும் இல்லாத அரசு மருத்துவமனை என்பதை உறுதி செய்யும் பொருட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்.

K. திவான் ஒலி
மாவட்ட தலைவர்
SDPI கட்சி
தென்காசி மாவட்டம்.

21/05/2026

| பெண் தொழிலாளர்களுக்கான கழிவறை வசதி உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற வேண்டும்! -எஸ்டிபிஐ

| |

Address

Head Office No 52, Mount Road Tenkasi
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கட்சி தென்காசி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI கட்சி தென்காசி மாவட்டம்:

Share