விதை

விதை உள்ளுவதெள்ளாம் உயர்வுள்ளல்

நண்பர்களுக்கு வணக்கம்.இன்று 29.11.2021 (ஞாயிறு) நமது இயக்கம் சார்பாக வல்லம் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்...
28/11/2021

நண்பர்களுக்கு வணக்கம்.

இன்று 29.11.2021 (ஞாயிறு) நமது இயக்கம் சார்பாக வல்லம் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். இந்த சந்திப்பில் நமது இயக்க நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி எடுத்துரைத்தோம். நமது இயக்க நண்பர் திரு சுதர்சன் அவர்களின் ஆலோசனைப் படி வல்லம் பகுதியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் சம்பத்தப் பட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.

நன்றி

களப்பணிதென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி...
21/11/2021

களப்பணி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் தலைவர் திருமதி சுபா சக்தி அவர்களிடம் நமது விதை இயக்க கோரிக்கையின் நடவடிக்கையாக 21.11.2021 அன்று குப்பைகள் அகற்றப்பட்டு 20 மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.

விதை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று குப்பைகளை அகற்ற உத்தரவிட்டு களத்தில் இறங்கி களப்பணி ஆற்றியதோடு மரக் கன்றுகளை வழங்கிய குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி சுபா சக்தி, அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் சகோதரர் இளவரசன், GREEN EARTH ASSOCIATION மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இன்று (14.11.2021) தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி சுபா சக்தி அவர்களையும்...
14/11/2021

இன்று (14.11.2021) தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி சுபா சக்தி அவர்களையும் துணைத் தலைவர் திரு திருப்பதி ராமர் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது இயக்க கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் சில கோரிக்கைகளை யும் முன்வைத்தோம்.நூலகம் அமைக்கும் கோரிக்கை, குப்பைகள் அதிகம் கொட்டும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடுதல், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க போன்ற கோரிக்கைகள் நமது இயக்கம் மூலம் வைக்கப்பட்டது.

நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் .ஊரின் பெயர் பூசையத்தாள்பட்டி.ஆனால் எழுத்து பிழையாக பெயர் பலகை வைத்திருக்கிறார்கள்.இதை வைத...
11/11/2021

நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் .

ஊரின் பெயர் பூசையத்தாள்பட்டி.ஆனால் எழுத்து பிழையாக பெயர் பலகை வைத்திருக்கிறார்கள்.இதை வைத்து பல நாட்கள் ஆகிறது. இன்று வரை சரி செய்யவில்லை.

 #உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் 🌱  #விதை_இயக்கம் 🌱இயற்கை கொடுத்த இந்த பூமியை பசுமையக்கும் நோக்கத்தோடு நமது விதை இயக்க *வேளா...
03/08/2021

#உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

🌱 #விதை_இயக்கம் 🌱

இயற்கை கொடுத்த இந்த பூமியை பசுமையக்கும் நோக்கத்தோடு நமது விதை இயக்க *வேளாண் மற்றும் பசுமை துறை* சார்பில்🌱 *பசுமை பாரதம்*🌱 எனும் திட்டம் செயபடுத்த உள்ளோம்.

💪 _திட்டத்தின் செயல்பாடுகள்_💪

விருப்பமும் ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கீழ்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்து எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்.

தனியாகவோ அல்லது ஒரு சமூக அமைப்பாக இணைந்தோ தங்கள் பகுதியில் அல்லது பொது இடங்களில் தங்களால் முடிந்த தினம் ஒன்று வாரம் 5 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பாதுகாக்க வேண்டும்.

தாங்கள் வைக்கும் போதோ அல்லது இந்த திட்டத்தின் மூலம் வைத்த மரக் கன்றுகளை பாதுகாக்க களப்பணி செய்யும் போதோ புகைப்படம் எடுத்து நமது குழுவில் பதிவிட வேண்டும்.

செப்டம்பர் 30 2021 ஆம் தேதிககுள் எந்த தனி நபரோ அல்லது சமூக அமைப்புகளோ 100 மரக் கன்றுகள் வைத்து பாதுகாத்து வந்தது நமது திட்ட அலுவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டால் *பசுமை நாயகன்* எனும் மற்றும் சமூக அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌவிக்கப்படுவார்கள்

மேலும் திட்டம் குறித்த செயல்கள் தகவல்கள் பசுமை பாரதம் குழுவில் பகிரப்படும்.

வாட்ஸ்அப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/EzaqSRAq3zeDTwqV6m6zmD

*திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
திரு அருணாசல சேர்மன்
திரு கார்த்திகேயன்

*திட்ட அலுவலர்கள்*
திரு மதுக்குமார்
திரு செல்வம்
திரு பழனிசெல்வன்
திரு ராஜன்
திரு சுடலை
திரு முருகன்

*திட்ட உறுப்பினர்கள்*
திரு சுமன்
திரு அசோக்
திரு மனோஜ்
திரு சுதர்சன்
திரு மைக்கேல்
திரு கபில் ரஞ்சித்

💪என்றும் பசுமை மற்றும் சமூக பணியில்💪
#வேளாண்_மற்றும்_பசுமைத்துறை
#விதை_இயக்கம்

WhatsApp Group Invite

11/06/2021

#உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

அனைவருக்கும் வணக்கம்

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இணைய வழியில் பேச்சு போட்டியானது கடந்த மே மாதம் 11 தேதி *விதை இயக்கம்* சார்பில் தென்காசி மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஏராளமான மாணவ செல்வங்கள் கலந்து கொண்டு தங்களது சிறப்பான படைப்புகளை சமர்ப்பித்தனர்.

கலந்து கொண்ட அனைவரின் படைப்புகளுக்கும் எங்களது விதை இயக்க குழு சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது போட்டி விதிமுறைகளின் அடிப்படையில் அதற்கான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*முதல் பரிசு*
1. சுகதேவ்
ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி
இலஞ்சி

*இரண்டாம் பரிசு*
2. முப்புடாதி
ஶ்ரீ வையாபுரி வித்யாலயா மேல்நிலை பள்ளி
சங்கரன் கோவில்

*மூன்றாம் பரிசு*
3. வர்ஷினி
விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கடையநல்லூர்

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான தங்களுடைய பரிசு மற்றும் சான்றிதழ்கள் பங்கேற்றுள்ள மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் விரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு. வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்களுடைய சரியான முகவரியினை விதை இயக்க பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கவும்.

இணைய வழியில் நடந்த இப்போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் சமூக வலைதள நண்பர்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் *விதை இயக்க நண்பர்கள் குழு* சார்பாக மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

என்றும் சமூக பணியில்
#விதை_இயக்கம்
#உள்ளுவதெல்ல்லாம்_உயர்வுள்ளல்

இயற்கை முறையில்     #சின்ன_வெங்காய  #சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:வளர்ச்சி ஊக்கி தெளிப்பு அட்டவணை 3 ம...
06/06/2021

இயற்கை முறையில் #சின்ன_வெங்காய #சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:

வளர்ச்சி ஊக்கி தெளிப்பு அட்டவணை

3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.

நடவு செய்த 5ம் நாள்
இ.எம் கரைசல் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் இஎம் கரைசல் கொடுக்கவும்.

நடவு செய்த 10ம் நாள்
மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும்.

நடவு செய்த 15ம் நாள்
பஞ்சகாவிய 150 ml per 10 liter tank spray செய்யவும் .

18ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

20ம் நாள்
மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும்.

25ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

30ம் நாள்
பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்

35ம் நாள்
கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மைக்கோரைசா வாம் தரைவழி தரவும்.

40ம் நாள்
E.M 150 ml per 10 liter tank spray செய்யவும். ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி தரவும்

45ம் நாள்
மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும்.

50ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும.

55ம் நாள்
E.M 150 ml per 10 liter tank spray செய்யவும் .ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மைக்கோரைசா வாம் தரைவழி தரவும்

60ம் நாள்
பஞ்சகாவிய 250 ml per 10 liter tank spray செய்யவும்.ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி தரவும்.

ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர், ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர், மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர், WDC ஒரு ஏக்கருக்கு 25 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..

இயலுமானால் வெங்காய சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு செய்து 65 to 70 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.

வேளாண் மற்றும் பசுமை துறை

#உள்ளுவதெல்ல்லாம்_உயர்வுள்ளல் #விதை_இயக்கம்

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு:இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூ...
03/06/2021

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு:

இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது.

#மல்லிகை #சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம்.

1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம்.

2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம்.

3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது.

4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம்.

5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது.

6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை இயக்குவது நல்லது.

7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும்.

8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.

#உள்ளுவதெல்ல்லாம்_உயர்வுள்ளல் #விதை_இயக்கம்

மரப் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை தயார் பண்ணுவதற்கான முறைகள்:1.எந்த வகை நிலமாக இருந்தாலும் முறையான மண் வளபாதுகா...
02/06/2021

மரப் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை தயார் பண்ணுவதற்கான முறைகள்:

1.எந்த வகை நிலமாக இருந்தாலும் முறையான மண் வளபாதுகாப்பு பணியான நிலத்தை சுற்றி வரப்புகள் அமைத்தல் குறித்து வரப்புகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளை முதலில் செய்து கொள்ள வேண்டும்.

2. அடுத்து முடிந்தவரை பலதானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரங்களை வளர்த்து 45வது நாள் மடக்கி உழுது மிகவும் சிறப்பானது.

3.அதன் பின்பு மண்ணுக்கு ஏற்ற வகையிலான குழி எடுத்து தேவையான அளவு இயற்கை இடுபொருட்களை இட்டு வளர்க்கவேண்டும்.

4.ஒவ்வொரு பட்டத்திலும் ஏதாவது ஒரு பயறு வகை பயிர்களை மரத்தின் வேர்களை அதிகம் காயப்படுத்தாத அளவிற்கு மேலோட்டமாக உழுது விதைத்து பயிர் செய்வது நல்லது.

5. அவ்வாறு ஊடுபயிர் செய்ய விரும்பாதவர்கள் கொழுக்கட்டை புல் போன்ற புல்வகைகளை விதைத்து முழுமையாக வளர்த்து பயன்பெறலாம்.

6.பயிருக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்க வைப்பது மரம் எளிமையாக மரத்தின் தண்டு பெருத்து வளர உதவி செய்யும்.

7. நாம் வளர்க்கும் மரத்திலிருந்து விழும் இலைகளை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே மக்க வைக்க வேஸ்ட் டீகம்போஸர் தெளித்து விட வேண்டும்.

8.வருடத்திற்கு ஒருமுறையாவது பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து 45- 50 வது நாள் மடக்கி விடுவது நல்லது.

9. மரத்தின் மொத்த உயரத்தில் தரையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தை மட்டுமே கவாத்து பண்ண வேண்டும் மீதியுள்ள இரண்டு பாகம் அளவிற்கு அதிக இலைகளோடு மரங்கள் இருந்தால் மரங்கள் தண்டு பெருத்து வளரும்.

#உள்ளுவதெல்ல்லாம்_உயர்வுள்ளல்
#விதை_இயக்கம்

23/05/2021

Varshini R
Wisdom Matric Higher Secondary School
Kadayanallur
Tenkasi District

23/05/2021

Sugadev
Ramasamy pillai Higher Secondary School
Ilanji
Tenkasi District

23/05/2021

Reshma Asath
Bharath Vidya Mandir CBSE School
Ilanji

Address

Tenkasi

Telephone

+919025762656

Website

Alerts

Be the first to know and let us send you an email when விதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விதை:

Share

Category