AnanthDpi

AnanthDpi A Soldier Never Retires He Only Steps Back. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. Belongs to the Dravidian Stock. X - AnanthDpi
Insta- AnanthDpi
Threads- AnanthDpi

08/09/2026

கருப்புப் பணம் தொடர்பான குற்றச்சாட்டில் ₹1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், அந்த அபராதத்தைக் கட்ட மறுத்து நீதிமன்றத்தை நாடிய விவகாரமும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது.

இத்தகைய சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர்கள், மற்றவர்களுக்கு ஊழல் ஒழிப்பு குறித்து அறிவுரை வழங்குவதற்கு முன், முதலில் தங்களது கடந்தகால செயல்பாடுகளுக்கு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.

தன் மீது விழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர், பிறரைப் பார்த்து ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவது எந்த அளவுக்கு நியாயம்?

08/09/2026

வருமானத்தை மறைத்து, ஊழல் செய்து, கருப்புப் பணத்தின் மூலம் சொத்து சேர்த்து மாட்டிக்கொண்டு முகத்தை மூடிச் சென்ற இந்த உத்தமர் யார் என்று உலகறியும்!

முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பதிலுரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு Udhayanidhi Stalin அவர்களை ...
08/09/2026

முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பதிலுரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு Udhayanidhi Stalin அவர்களை பேச விட்டால் கிழித்து தொங்க விட்டு விடுவார் என்ற பயம் இருக்கிற வரை,

சட்டமன்றத்தை எங்கள் அண்ணன் உதயநிதியே சட்டமன்றத்தை ஆள்கிறார்
என்று தான் பொருள். 🖤❤️🔥🔥
DMK Youth Wing DMK ITWing


07/09/2026

ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?

அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?

உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் பற்றிப் பேசலாமா? இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில்,
திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?

அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா?

முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா?

போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது… இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!

தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

தூய சக்தியின் மாற்றம் இதுதானா.. 🤦‍♂️🤦‍♀️
07/09/2026

தூய சக்தியின் மாற்றம் இதுதானா.. 🤦‍♂️🤦‍♀️

மிசா காலத்தில் காவல்துறையின் வன்முறையால் தாடை எலும்பு உடைந்து, வாய் கோணலாகிய நிலையிலும் மக்களுக்காகவும், ஜனநாயகத்திற்காக...
07/09/2026

மிசா காலத்தில் காவல்துறையின் வன்முறையால் தாடை எலும்பு உடைந்து, வாய் கோணலாகிய நிலையிலும் மக்களுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடியவர் #கலைஞர்.

அத்தகைய உடல் பாதிப்பையே சட்டமன்றத்தில் கேலி செய்யும் வகையில் சைகை காட்டுவது, ஒரு முதல்வருக்கு அழகல்ல, அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி!

கலைஞர் அவர்களை “சக்கர நாற்காலி” என்று கேலி செய்தவர்கள் வரலாற்றில் எங்கே இருக்கிறார்கள் என்பதும், அதே கலைஞர் இன்று வரலாற்றில் எங்கே உயர்ந்து நிற்கிறார் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கலைஞரை கேலி செய்தவர்கள் காலத்தால் மறக்கப்பட்டார்கள்,
கலைஞர் மட்டும் காலத்தையே கடந்து வரலாறாக நிற்கிறார்!

அதிகாரம் நிரந்தரமல்ல..!

ஆனால் மக்கள் மனதில் பதிந்த வரலாறு நிரந்தரமானது..!

இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது, தற்காலிக அதிகாரத்தின் மமதையில் இருப்பவர்கள்தான்!

‌Fails

Address

Tamizhagam
635111

Telephone

+919944498892

Website

Alerts

Be the first to know and let us send you an email when AnanthDpi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AnanthDpi:

Shortcuts

Share

Category