Shencottah library

Shencottah library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shencottah library, Library, near govt boys high school, Shencottah.
(1)

17/08/2025
17/08/2025
செங்கோட்டை நூலகத்தில் புத்தக வெளியீட்டு விழா **************************எழுத்தாளரும் திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரி ...
25/05/2025

செங்கோட்டை நூலகத்தில் புத்தக வெளியீட்டு விழா
**************************
எழுத்தாளரும் திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரி தமிழ் பேராசிரியருமான திருமதி. மாலிக் பாதுஷா அவர்கள் எழுதிய "எங்க வீடு" என்ற நாவல்
வெளியீ ட்டு விழா நடைபெற்றது .இதற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதிமூலம்,
பொருளாளர் தண்டமிழ் தாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் நூலாசிரியர் தந்தையும் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான வரிசைக் கனி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டார் .தமிழ் செம்மல் விருது பெற்ற பாப்பாக்குடி அ.முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எழுத்தாளர்கள் ஐயப்பன், இளங்குமரன், தமிழ்வாணன், தங்கராஜ் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

ஆலங்குளம் ராஜ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் திரு அரிகிருஷ்ணன் அவர்கள் செங்கோட்டை நூலகத்திற்கு குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்கள...
24/05/2025

ஆலங்குளம் ராஜ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் திரு அரிகிருஷ்ணன் அவர்கள் செங்கோட்டை நூலகத்திற்கு குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் காவலர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் குரூப் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேவையான பயனுள்ள நான்கு புத்தகங்களை வழங்கினார். அவர்களுக்கு நூலகத்தின் சார்பாகவும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

21/05/2025

குரூப் 1, குரூப் 4., இலவச
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
*************************
செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும் , விழுதுகள் அறக்கட்டளையும் இணைந்து ,கடந்த 10 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடைபெறும் போது அந்தந்த தேர்வுக்கு தேவையான மாதிரி தேர்வு நடத்தி வருகிறார்கள். தற்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 1 ,தேர்விற்கும் ஜூலை மாதம் நடைபெற உள்ள குரூப்-4 தேர்விற்கும்,
24 /5/25 -சனி
25 /5/25-ஞாயிறு முதல் ஒவ்வொரு சனி ஞாயிறு மாதிரி தேர்வு நடைபெறும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த இலவச தேர்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்வுகள் அனைத்தும் காலை- 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள தென்காசி செங்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் அழைக்கிறோம்.

**************************
24/5/25
வெற்றி அகடமி குரூப்-4 தேர்வு மட்டும்


25/5/25
ஆகாஷ் அகாடமி
குரூப் 1 மற்றும் குரூப் 4

அன்பு நண்பர்களே வணக்கம்                  வயது முதிர்வின் காரணமாக அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளதால் நூல்கள் கணக்கெடுக்க...
10/05/2025

அன்பு நண்பர்களே வணக்கம்
வயது முதிர்வின் காரணமாக அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளதால் நூல்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது நூல் இருப்பு சரிபார்க்கும் அலுவலர் திரு ரவி அவர்கள் சரி பார்க்கும் பணியை தொடங்கி விட்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
(அடுத்த மாதம் ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ள பணி நிறைவு விருந்திற்கும் தயாராகும் படி கேட்டுக்கொள்கிறேன்)

01/05/2025
16/04/2025

செங்கோட்டை நூலகத்தில் 77 -வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் தமிழ் செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டுவிழா
**************************
நாள்:26/04/25. (சனி) நேரம் : காலை-10.00 மணி

இடம் : நூலகம்
**************************
தமிழக அரசின் "தமிழ்ச்செம்மல் "விருது பெற்ற பாப்பாக்குடி. முருகன் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு .இல. பாண்டு ரெங்கன் அவர்கள் எழுதிய "ஒரு ஆத்மார்த்த பயணம்"
என்ற நூல் திறனாய்வும் செய்யப்படுகிறது.
எழுத்தாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் வாசகர்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
****************************
இப்படிக்கு
நூலக வாசர் வட்டம்
செங்கோட்டை

செங்கோட்டை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு************************** செங்கோட்டை நூலகத்திற்கு , எனது முன்னாள் ஆசிரியர் தெய்வத...
29/03/2025

செங்கோட்டை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு
**************************
செங்கோட்டை நூலகத்திற்கு , எனது முன்னாள் ஆசிரியர் தெய்வத்திரு .
கல்யாணி சுந்தரம் அவர்கள் மகனும், ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவரும், வாஞ்சிநாதன் அரசு பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவருமான திரு. பால்ராஜ் அவர்கள் சுமார்-ரூ .2000 மதிப்புள்ள தமிழ் இலக்கிய புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார் .மேலும் ரூபாய் 1000 செலுத்தி செங்கோட்டை நூலகத்தில் 279- வது நூலக புரவலராக இணைந்து கொண்டார். அவருக்கு நூலகத்தின் சார்பாகவும் வாசகர் வட்டத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Near Govt Boys High School
Shencottah
627809

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

04633233221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shencottah library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shencottah library:

Share

Category