Aiadmk It wing sankarankovil

Aiadmk It wing sankarankovil AIADMK IT WING SANKARANKOVIL CONSTITUENCY

17/06/2016
15/06/2016

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாரத பிரதமரிடம் வைத்துள்ள 29 அம்ச கோரிக்கைகள்.

1.காவேரி மேலான்மை வாரியம் தீர்ப்புக்கு எதிரான மேகதாது அணை கட்டும் முயற்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும்

2.நதிநீர் இணைப்பு செய்யப்படவேண்டும்

3.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.

4.மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கவேண்டும்.

5.இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்கவேண்டும்.

6.கட்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

7.அந்தோணியார் கோவில் சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்தவேண்டும்.

8.கூடங்குளம் இரண்டாவது அலகிற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படவேண்டும்.

9.காவேரி மேலான்மை வாரியம் அமைக்கப்படவேண்டும்.

10.பெட்ரோலி பொருட்களுக்கு சேவை வரி விலக்கு.

11.ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படவேண்டும்.

12.தமிழை வழக்காடும் மொழியாக்கவேண்டும்.

13.25,912 கோரி தேசி பேரிடர் நிதியிலிருந்து பெற 2 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 1735 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

14.முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படவேண்டும்.

15.மெட்ரோ ரெயில் சேவை முழுமையடவேண்டும்.

16.பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயிலுடன் இணைக்கவேண்டும்.

17.ஜி.எஸ்.டி மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.

18.தமிழக அரசு கோரிய இடங்களில் எய்ம்ஸ் மருத்தவமனை.

19.உணவு தாணியங்கள் ஒதுக்கீடு குறைக்க கூடாது.

20.அரசு கேபிலுக்கு டிஜிட்டல் உரிமம் தேவை.

21.கெயில் திட்டத்திற்கு மாற்று பாதையில் செயல்படுத்தவேண்டும்.

22.மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்க கூடாது.

23.காவேரி மேலான்மை ஒழுங்குமுறை குழு அமைப்பு.

24.தமிழை ஆட்சி மொழியாக்கவேண்டும்.

25.மெட்ரோ ரெயிலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

26.மருத்துவ நுழைவு தேர்வு நடத்த மாநில அரசை நிர்பந்திக்க கூடாது.

27.மாநில அரசுக்கு கொடுக்கவேண்டிய நிதி உதவிகள் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

28.வெள்ள சேதங்களை சீர் செய்ய கூடுதல் நிதி தேவை.

29.அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும்.

11/06/2016
27/05/2016

படித்ததில் பிடித்தது:-

தனபாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? -கார்டனை கரைய வைத்த நெகிழ்ச்சிக் கதை
தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார் பி.தனபால்.தமிழக சட்டமன்றமும தன்னுடைய இருபதாவது சபாநாயகரை சந்திக்க இருக்கிறது. ' தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பின்னால், நெஞ்சை நெகிழ வைக்கும் 15 ஆண்டு வரலாறு உள்ளது' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
சட்டப் பேரவை தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்தமுறையும் தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியிட இருக்கின்றனர். சட்டசபை வரலாற்றிலேயே 98 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட எதிர்க்கட்சி இதுவரையில் அமைந்ததில்லை. அதற்கேற்ப இவர்களைச் சமாளிக்க, 'பொள்ளாச்சி ஜெயராமனோ, செங்கோட்டையனோ வரலாம்' என அ.தி.மு.கவினர் பேசி வந்தனர். ' மீண்டும் தனபால் வருவார்' என அ.தி.மு.க சீனியர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவர்.
"கார்டன் குட்-புக்கில் இடம் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒருமுறை நம்பிவிட்டால் கடைசி வரையில் தனது கருத்தில் இருந்து முதல்வர் மாற மாட்டார். ஒருகட்டத்தில் துரோகம் செய்கிறார்கள் என தீர்க்கமாக அவர் முடிவெடுத்துவிட்டால், அந்த நபரின் எதிர்காலம் அதல பாதாளத்திற்குப் போய்விடும். ஆனால், தனபால் மீது முதல்வர் கொண்டுள்ள பாசம் அளவிட முடியாதது. அதற்குப் பிரதானமாக சில விஷயங்கள் இருக்கின்றன" என்றவர்,
" 2001-ம் ஆண்டு சங்ககிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் தனபால். தேர்தல் நடப்பதற்கு சில நாட்கள் இருந்த சூழலில், திடீரென கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மிகுந்த கோபத்தோடு அம்மா சில கேள்விகளைக் கேட்டார். 'என்ன மிஸ்டர்.தனபால் தேர்தல் வேலை பார்க்கற கட்சிக்காரங்களுக்கு நீங்க சோறுகூட வாங்கித் தர்றதில்லை. கட்சிக்காரங்ககிட்ட இருந்து விலகியே இருக்கீங்கன்னு புகார் வந்திருக்கு. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?' எனக் கடுமையைக் காட்ட,
அதிர்ந்து போன தனபால், 'அம்மா என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நம்ம கட்சிக்காரங்களுக்கு நான் சோறு செஞ்சு போட்டாலும் யாரும் சாப்பிட மாட்டாங்க. இதுவரைக்கும் இரண்டு தடவை என் சாப்பாடை அவங்க புறக்கணிச்சுட்டாங்க. அத்தனை சோறும் வீணாப் போச்சு. எங்கள மாதிரி அருந்ததியர் சமூகத்து வீட்ல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்கம்மா' எனக் கண்ணீர் வடிக்க, மிகுந்த அதிர்ச்சியோடு தனபாலைப் பார்த்தார். சில நிமிடத்திற்குப் பிறகு, 'இப்படியெல்லாம் நடக்குமா? பார்த்துக்கலாம். நீங்க போய் தேர்தல் வேலையைப் பாருங்க' என அனுப்பி வைத்தார்.
அந்தத் தேர்தலில் வென்ற கையோடு வந்த தனபாலுக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதற்கு என்ன காரணம் தெரியுமா? 'உங்க வீட்டுல சோறு சாப்பிடாம புறக்கணிச்சவங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே நீங்கதான் சோறு போடப் போறீங்க' என்பதுதான் அது. அதன்பிறகு தொடர்ந்து அம்மாவின் குட்-புக் லிஸ்ட்டில் இடம் பிடித்துவந்தார். எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், கோஷ்டியை வளர்க்காமல் கட்சி, விசுவாசம், மென்மையான அணுகுமுறை என கார்டன் வட்டாரத்தில் அணுக்கமாக இருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, முதலில் துணை சபாநாயகர் பதவியையும், பிறகு யாரும் எதிர்பாராமல் சபாநாயகர் பதவியையும் கொடுத்தார். 'உங்களை வணங்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சபாநாயகர் பதவி' எனக் குறிப்பால் உணர்த்தினார் அம்மா" என்றார் நெகிழ்ச்சியோடு.

20/05/2016

அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

20/05/2016

கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவரகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும், ஸ்பென்ஸர் அருகே அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09/05/2016

எங்குமில்லா எங்கள் திட்டங்கள்

09/05/2016

அன்பானவர்களே.
ஒரு முக்கிய செய்தி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னாடி கருனாநிதியை மேடையில் பிரச்சாரம் செய்ய வைத்து மேடையிலே மயங்கி விழவைத்து அப்பல்லோ மருத்துவமனையில்
சேர்த்து மக்களை ஏமாற்றி அனுதாப ஓட்டு வாங்க ஒரு நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறார்கள் அதனால் யாரும் அதை நம்பவேன்டாம் என்று எல்லோருக்கும் அதை தெரியப் படுத்துங்கள். தயவு செய்து யாரும் இதை அலட்சிய படுத்தாதீர்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2016 தேர்தல் அறிக்கை   #நெசவாளர் நலன் #சிந்திப்பீர் வாக்களிப்ப...
07/05/2016

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2016 தேர்தல் அறிக்கை #நெசவாளர் நலன் #சிந்திப்பீர் வாக்களிப்பீர் #இரட்டை இலைக்கே🌱

06/05/2016

2016

Address

Sankarankovil
627756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk It wing sankarankovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share