Iuml It Wing Salem

Iuml It Wing Salem politics

*Gen-I League msf பயிலரங்கம் - சேலம் மண்டலம்*சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், நீலகிரி, ஆகிய மாவட்டங்கள் ...
03/09/2026

*Gen-I League msf பயிலரங்கம் - சேலம் மண்டலம்*

சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், நீலகிரி, ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும்
சேலம் மண்டலம் Gen-I League msf பயிலரங்கம் நடத்துவது சம்பந்தமாக 02.9.2026 புதன்கிழமை காலை சேலம் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சையது மூஸா அவர்களை சந்தித்து எம்.எஸ்.எப் மாநில தலைவர் திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, மாநில அமைப்புச் செயலாளர் சேலம் அ.அஸ்கர், மாநில துணைத் தலைவர் மங்கலம் எம். முஹம்மது முஃபீஸ், எம்.எஸ்.எப். மாவட்டத் தலைவர் சி.சக்லைன் ஆகியோர் ஆலோசனை செய்யதனர்.

எம்.எஸ்.எப் மாவட்ட நிர்வாகிகள் ஃபைசல், ஃபர்ஷா, லத்தீப், அப்பாஸ், சித்தீக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் சேலம் ஏற்காடில் உள்ள அரங்கம் மற்றும் விடுதிகளை பார்வையிட்டனர்.

01/09/2026
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அலுவலகத்தில் காயிதே மில்லத் மஹாலில் இன்று30-8-26 வழக்கறிஞர்கள் அணி லாயர் ஃப...
30/08/2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்
மாநில அலுவலகத்தில்
காயிதே மில்லத் மஹாலில் இன்று30-8-26
வழக்கறிஞர்கள் அணி லாயர் ஃபார்ம் தமிழ்நாடு ஸ்டேட் என்ற புதிய பெயரையும் அதன் லோகோவையும் மற்றும் அதன் கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் EX எம்.எல்.ஏ அவர்கள் அதில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் IUML LAWYERS FORUM – TAMIL NADU STATE அமைப்பின் மாநில துணைத் தலைவராக வழக்கறிஞர்
*A.இம்தியாஸ்கான்* அவர்கள் தேர்ந்தெடுக்கபட் டார்.

*தகவல் தொழில் நுட்ப அணி*
சேலம் மாவட்டம்

27/08/2026
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில நிர்வாகிகள் (22.8.2026) பிற்பகல் சென்னை தலைமை நிலை...
23/08/2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில நிர்வாகிகள் (22.8.2026) பிற்பகல் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜிலில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களை சந்தித்து இயக்கப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் *"Gen League"* முழக்கத்துடன் MSF சார்பில் தமிழகத்தில் சென்னை, கடலூர், வாணியம்பாடி, திண்டுக்கல், சேலம் ஏற்காடு மற்றும் காயல்பட்டிணம் ஆகிய 6 நகரங்களில் தலைசிறந்த பயிற்சியாளர்கள், முன்னணி தலைவர்களை அழைத்து மண்டல பயிலரங்கம் நடத்துவதென்றும், அதற்கான ஏற்பாடுகளை விரைவில் துவங்குதல் மற்றும் செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எம்.எஸ்.எப். மாநில தலைவர் திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, மாநில பொதுச் செயலாளர் திருவள்ளூர் வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர். நூர் முஹம்மது, மாநில பொருளாளர் சை.சையத் பாஷித் ரஹ்மான், மாநில அமைப்பு செயலாளர் சேலம் ஏ. அஸ்கர், மாநில செயலாளர்கள் மங்கலம் பேட்டை ஏ. துராபுதீன், வாணியம்பாடி ஹசன் முகமது நௌமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மீஞ்சூர் அப்துல் பதாஹ், சேலம் ஏ. அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.* *இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தேசிய தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன்* அ...
01/08/2026

*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.*

*இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தேசிய தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன்* அவர்களுடைய மூத்த மகனார், K.M.K. ஹபீபுர் ரஹ்மான், K.M.K.பைஜீர் ராஜ்மான் ஆகியோரின் மூத்த சகோதரர்,
மருத்துவர் கே.எம். கே. கலீலுர் ரஹ்மான் அவர்கள் ( 01.08.2026 ) சனிக்கிழமையன்று உடல் நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஜனாஸா 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி, காஜாநகர், அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் அஸர் தொழுகைக்கு பின் ஜனாஸா தொழுகையும் அதனை தொடர்ந்து காஜாமலை அடிவாரம் அருகில் உள்ள கபர்ஸ்தானில் நல்லடக்கம் நடைபெறும் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

*மௌத் இருப்பிடம் :*
நெ.16, காயிதே மில்லத் தெரு,
காஜா நகர் ,
திருச்சி - 20.

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

இப்படிக்கு,
குடும்பத்தினர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய முஸ்லிம் மாணவர் பேரவை(MSF)சேலம் ஜாகீர் ரெட்டி பட்டியில் உள...
16/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய முஸ்லிம் மாணவர் பேரவை(MSF)

சேலம் ஜாகீர் ரெட்டி பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 6 ஆசிரியர்களும்,80 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5-6-26 அன்று அந்த பள்ளியில் முஸ்லிம் மாணவர் பேரவை மேற்கு தொகுதி செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் ஒரு நிகழ்ச்சியை பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவைப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும்,அரசாங்கம் ஆண்டுக்கு வெறும் 12000 நிதி மட்டுமே வழங்குகிறது.இதில் எந்தவிதமான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை என்றும் எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு MSF மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்கர்DME,DNA,.மற்றும்
MSF மாவட்ட தலைவர் C.முகமது சக்லைன் BE (Civil engineer),
மாவட்ட செயலாளர் V.உமர் BA,
அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட முன் முயற்சியால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அணி முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் செய்து கொடுக்கப்பட்டது
இதனையொட்டி பள்ளி நிர்வாகம் பாராட்டி சால்வை அணிவித்து தங்கள் மகிழ்வையும்,நன்றியையும் தெரிவித்தார்கள்.உடன் தொண்டரணி மாவட்ட செயலாளர் அ.அக்பர் BA அவர்கள் உடனிருந்தார்.

Address

Tippu Sultan Marjet
Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iuml It Wing Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share