17/02/2024
அன்பார்ந்த ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய நண்பர்களே வணக்கம்
வருகின்ற 16-03-2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நமது சங்க 45வது மாநில செயற்குழு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் நகர கிளைச்சங்க 16ஆம் ஆண்டு விழா கூட்டமும் ஒருசேர இணைந்து கோபிச்செட்டிப்பாளையம் ,சீதா கல்யாண மண்டபத்தில்( ஈரோடு-சத்தியமங்கலம் மெயின்ரோடு) வைத்து கோபிச்செட்டிப்பாளையம் நகர கிளைச்சங்கத்தின் சார்ப்பில் மாநிலத்தலைவர் திரு.B.K.கோபால்
அவர்கள் தலைமையிலும், கோபி நகர கிளைச்சங்க தலைவர் திரு.T.பழனிச்சாமி மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது அதுசமயம் கோபி நகர்மன்றத்தலைவர் திரு.N.R.நாகராஜன் , நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி. P.தீபா,நகராட்சி ஆணையாளர் திருமதி. T. சசிகலா,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். மாநில செயற்குழு அழைப்பிதழை நண்பர்களின் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன். எனவே நமது நண்பர்கள் அனைவரும் அலைகடலென பெருந்திரளாக வந்து கோபி நகரில் நடைபெறவுள்ள நமது சங்க 46வது மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் மாநிலச்சங்கத்தின் சார்பிலும், கோபிச்செட்டிப்பாளையம்மநகர கிளைசங்த்தின் சார்பிலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோபி நகர கிளைச்சங்கத்தின் சார்பில் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இரா. பாஸ்கரன்,
மாநில இணைப்பொதுசெயலாள்ர்