Tamil Nadu Congress - State Minority Wing

Tamil Nadu Congress - State Minority Wing THIS GROUP IS TO UNITE THE PEOPLE WHO SUPPORT TAMIL MANILA CONGRESS - Minority Wing in Tamil Nadu St

18/06/2025

இறங்கி அடிக்கும் ஈரான்

தெறித்து ஓடும் இஸ்ரேல்

உண்மை வெளி வருகிறது பாருங்கள்உளவுத்துறை எச்சரிக்கை செய்தும் ....... (பீகார் தேர்தலை முன்னிட்டு)குஜராத்திய திருட்டு கூட்ட...
28/04/2025

உண்மை வெளி வருகிறது பாருங்கள்
உளவுத்துறை எச்சரிக்கை செய்தும் .......
(பீகார் தேர்தலை முன்னிட்டு)
குஜராத்திய திருட்டு கூட்டம் செய்த சதி வேலை அம்பலமாகி கொண்டிருக்கிறது

Scene : டேய் அவங்க ரெண்டுபேரையும் பாரேன்...😂😂
09/08/2024

Scene : டேய் அவங்க ரெண்டுபேரையும் பாரேன்...😂😂

“இஸ்ரேல் - ஹமாஸ் போரை இந்தியாவால்தான் நிறுத்த முடியும்"  - ஈரான் தூதர் இலாஹி யாரு?? இந்த ஆளா...😂😂கட்டுன பொண்டாட்டிய வச்ச...
06/08/2024

“இஸ்ரேல் - ஹமாஸ் போரை
இந்தியாவால்தான் நிறுத்த முடியும்" - ஈரான் தூதர் இலாஹி

யாரு?? இந்த ஆளா...😂😂
கட்டுன பொண்டாட்டிய வச்சு காப்பாத்த வக்கில்லா இந்த peanut தாடி காரனாலையா!..😬

06/08/2024

ஷேக் ஹசீனாவிடமிருந்து எப்படி நாட்ட விட்டு ஓடணும்னு தாடி காரன் பயிற்சி எடுக்கிறதா RW க்கள் கூறியதா செய்தி...🔥

அடுத்து நீதாண்டி மாப்ளே..😂

✊✊Muslim population✊✊1⃣Afghanistan 100%2⃣Albania 75%3⃣Algeria 99%4⃣ Angola 25%5⃣Argentina 2%6⃣Australia 2.09%7⃣Azerbaija...
14/06/2016

✊✊Muslim population✊✊

1⃣Afghanistan 100%
2⃣Albania 75%
3⃣Algeria 99%
4⃣ Angola 25%
5⃣Argentina 2%
6⃣Australia 2.09%
7⃣Azerbaijan 93%
8⃣Bahrin 100%
9⃣Bangladesh 85%. Bhutan 5%
1⃣1⃣Brazil 0.6%
1⃣2⃣ Burma 10%
1⃣3⃣Canada 1.48%
1⃣4⃣ Cntral africn rpblc 55%
1⃣5⃣ China 11%
1⃣6⃣ Egypt 94%
1⃣7⃣Ethopia 65%
1⃣8⃣ Fiji 11%
1⃣9⃣ France 7%
2⃣0⃣Georgia 11%
2⃣1⃣ Germeny 3.4%
2⃣2⃣ Greece 1.5%
2⃣3⃣ Guinea 95%
2⃣4⃣Guyana 15%
2⃣5⃣Hongkong 1%
2⃣6⃣ India 14%
2⃣7⃣Indonesia 95%
2⃣8⃣Iran 99%
2⃣9⃣Iraq 97%
3⃣0⃣Isreal 14%
3⃣1⃣ Italy 1%
3⃣2⃣Japan 1%
3⃣3⃣ Jordan 95%
3⃣4⃣Kenya 30%
3⃣5⃣ Kuwait 89%
3⃣6⃣Lebanon 70%
3⃣7⃣Libya 100%
3⃣8⃣ Maldives 100%
3⃣9⃣ Malasiya 52%
4⃣0⃣Mauritius 19.5%
4⃣1⃣ Mayotte 99%
4⃣2⃣Nigeria 75%
4⃣3⃣Oman 100%
4⃣4⃣Pakistan 97%
4⃣5⃣ Phillipines 14%
4⃣6⃣Qatar 100%
4⃣7⃣Romania 20%
4⃣8⃣Russia 18%
4⃣9⃣Saudi arab 100%
5⃣0⃣Singapore 17%
5⃣1⃣Somalia 100%
5⃣2⃣ Sri lanka 9%
5⃣3⃣ Sudan 85%
5⃣4⃣Syria 90%
5⃣5⃣Tazakistan 85%
5⃣6⃣Tanzania 65%
5⃣7⃣Thiland 14%
5⃣8⃣Tunisia 98%
5⃣9⃣Turkey 99.8%
6⃣0⃣UAE 96%
6⃣1⃣UK 2.5%
6⃣2⃣ USA 3.75%
6⃣3⃣Uzbekistan 88%
.......Where the Prophets originated........

✔Adam(A.S) - Sri Lanka
✔Nooh(A.S) - Jordan
✔Shoaib(A.S) - Syria
✔Saleh(A.S) - Lebanon
✔Ibrahim(A.S) - Palestine and died in iraq
✔Ismail(A.S) - Saudi Arabia
✔Yakoob(A.S) - Palestin
✔yahya(AS) palestine
✔zakariya (AS) palestine
✔Ishaq(A.S) - Palestin
✔Yusuf(A.S) - Palestin
✔Looth(A.S) - Iraq
✔Ayub(A.S) - Jordan
✔Hood(A.S) - Yamen
✔Nabi-Muhammad S.A.W) - Saudi Arabia

📝Ages of Prophets📝

✅Adam(A.S) - 1000 Yrs
✅Nooh(A .S) - 950 Yrs
✅Shoaib(A.S) - 882 Yrs
✅Saleh(A.S) - 586 Yrs
✅Zakar
iyya(A.S) - 207 Yrs
✅Ibrahim(A.S) - 195 Yrs
✅Sulaymaan(A.S) - 150 Yrs
✅Ismail(A.S) - 137 Yrs
✅Yakoob(A.S) - 129 Yrs
✅Musa(A.S) - 125 Yrs
✅Ishaq(A.S) - 120 Yrs
✅Haroon(A.S) - 119 Yrs
✅Yusuf(A.S) - 110 Yrs
✅Eesa(A.S) - 40 Yrs
✅NABI MUHAMMAD(S.A.W) - 63 Yrs

✔Plz don't keep it in your :
inbox, share the knowledge.!!

By
Mansoor yasin :M
Tmc
📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📕📒📒📒📒📒

 #நாற்பது ஹதீஸ்கள்  ! ! ! 🔰 اِنّما الاَعْمَالُ بِالنّیَّات✔செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே கூலி வழங்கப்படும்.🔰 اَل...
14/06/2016

#நாற்பது ஹதீஸ்கள் ! ! !

🔰 اِنّما الاَعْمَالُ بِالنّیَّات

✔செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே கூலி வழங்கப்படும்.

🔰 اَلصّلٰوة نُورُ المُومِنِ

✔தொழுகை விசுவாசியின் ஒளி.

🔰 اَلصّیَامُ جُنّةٌ

✔நோன்பு பாதுகாக்கும் கேடயமாகும்.

🔰 اِنّ الدِّینَ یُسْر

✔நிச்சயமாக இஸ்லாமியமார்க்கம் இலேசானதாகும்.

🔰 اَلدِّینُ النَّصِيحَةُ

✔இஸ்லாமிய மார்க்கம் ஓர் உபதேசமாகும்.

🔰 اَلعَینُ حَقٌّ

✔கண் திருஷ்டி உண்மையாகும்.

🔰 طَلَبُ العِلمِ فَرِيضَةٌ علیٰ کُلِّ مُسلِمٍ

✔கல்வியை கற்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை.

🔰 خَیرُ الحَدِیثِ کِتَابُ اللّٰہِ

✔பேச்சில் சிறந்தது குர்ஆன் ஆகும்.

🔰 وَ خَیرُ الھَدیِ ھَدیُ مُحَّمدٍ صلی اللّٰہ علیہ وسلم

✔வழிகளில் சிறந்தது நபி வழியாகும்.

🔰 اَلحَیَاءُ مِنَ الاِیمانِ

✔வெட்கம் ஈமானில் ஒரு பகுதி.

🔰 اَلعَجلَةُ مِنَ الشَّيطَانجلد بازی شیطان کا کام ھے

✔அவசரம் ஷைத்தானின் குணம்.

🔰 اَلبِرُّ حُسنُ الخُلقِ

✔நண்மை என்பது நற்குணத்தின் மறு பெயர்

🔰 اَلطّھور شَطرُ الاِیمَانِ

✔சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.

🔰 مَن صَمَتَ نَجَا

✔மௌனம் காத்தவன் வெற்றி பெறுவான்.

🔰 لا تَسُبُّوا الاموَات

✔இறந்தவர்களை ஏசாதீர்கள்.

🔰 لاَ تَسئَلُونَ النَّاسَ شَیئاً

✔மனிதர்களிடம் யாசிக்காதீர்கள்.

🔰 سَمِّ اللّٰہ وَ کُل بِیَمِینِک

✔பிஸ்மில்லாஹ் கூறி வலது கையினால் சாப்பிடு !

🔰 کُل مِمَّا یَلِیک

✔பாத்திரத்தில் உனக்கு நெருக்கத்தில் உள்ள உணவை சாப்பிடு !

🔰 لاَ یَشرِبَنَّ اَحَدٌ مِنکُم قَائِماً

✔நின்று கொண்டு நீர் அருந்தாதே !

🔰 اَلسِّوَاکُ مَطهَرةٌ لِلفَم وِ مَرضَاةٌ لِلرّبِّ

✔பல் தேய்ப்பது வாயை சுத்தப்படுத்தும், வல்ல அல்லாஹ்வை திருப்தி படுத்தும்.

🔰 اَلسَّلامُ قَبلَ الکَلام

✔பேசுவதற்கு ஸலாம் கூற வேண்டும்.

🔰 اَفشُوا السَلامَ بَینَکُم

✔உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்

🔰 كُلُّ مَعرُوفٍ صَدقَة

✔ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகும்.

🔰 اِنَّ اللّٰہ رَفِیقٌ یُحِبُّ الرَّفِق

✔அல்லாஹ் மென்மையானவன்,மென்மையான அனுகு முறையையே அவன் விரும்புகிறான்.

🔰 لا تُقبَلُ صَلوٰةٌ بِغَيرِطهُور

✔தூய்மையின்றி தொழுகை இல்லை.

🔰 اَحَبُّ البِلادِ اِلیٰ اللّٰہ مَسَاجِدُھَا

✔ஊரிலேயே அல்லாஹ்வுக்கு உகப்பான இடம் பள்ளிவாசல்களாகும்.

🔰 اَبغَضُ البِلادِ اِلی اللّٰہ اَسوَاقُھَا

✔ஊரிலேயே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் கடைத் தெருக்களாகும்.

🔰 تُحفَةُ المُومِنِ المَوت

✔மரணம் முஃமினுக்கு அருளாகும்.

🔰 اَنزَلُوا النَّاسَ مَنَازِلَھُم

✔மனிதர்களுக்கு அவரவர்களின் அந்தஸ்துகளை கொடுங்கள் !

🔰 لا یَرحَم اللّٰہُ مَن لا یَرحَم النَّاس

✔மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

🔰 لا يَدخُلُ الجَنَّة قاطِعٌ

✔உறவை துண்டித்தவன் சுவனம் போக மாட்டான்.

🔰 لا یَحِلُّ لِمُسلِمٍ اَن یُرَوِّعَ مُسلِماُ

✔எந்த முஸ்லிமையும் மிரட்டக்கூடாது.

🔰 لا تَحقِرَنَّ شَیئاً مِّنَ المَعرُوف

✔எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ணக்கூடாது.

🔰 بَلِّغُوا عَنِّی و لو آیہ

✔என் மூலம் ஒரு உபதேசம் கிடைத்தாலும் அதனை பிறருக்கு கூறிவிடுங்கள் !

🔰 لا اِیمَانَ لِمَن لا اَمَانَةَ لَه

✔அமானிதம் காக்கும் தன்மை இல்லையெனில் அவனிடம் ஈமான் இல்லை என அர்த்தம் !

🔰 وَلا دِینَ لِمَن لا عَھدَ لَہ

✔வாக்கு மீறல் இருந்தால் மார்க்கமே இல்லை.

🔰 اَلتّائِبُ مِنَ الذّنبِ کَمَن لا ذنبَ لَہ

✔பாவங்களை விட்டும் மீண்டு தவ்பா செய்தவன் பாவங்களே இல்லாதவனைப் போல, பரிசுத்தமாகி விடுவான்.

🔰 مَن لَم یَشکُرِ النَّاسَ لَم یَشکُر اللّٰ

✔மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.

🔰 زیِّنُوا القُرآنَ بِاَصوَاتِکُم

✔உங்கள் குரல்கள் மூலம் குர்ஆனை அலங்காரப் படுத்துங்கள் !

🔰 خَیرُکُم مَن تَعَلَّمَ القُرآن و عَلَّمَہ

✔உங்களில் மிகச்சிறந்தவர் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்தான்.

#மனனம் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
#சேலத்துசெம்மலா்"...!!

 #நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே  #பயன்படுத்தலாமா"...?? #சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாம...
09/06/2016

#நோன்பாளி ஆஸ்துமாவுக்காக
ஸ்பிரே #பயன்படுத்தலாமா"...??

#சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.

#அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

#நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்!

#அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!

#யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!'என்று இருமுறை கூறட்டும்!

#என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை,அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்!

(மேலும்) "எனக்காக #நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்!

#நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது;

#அதற்கு நானே கூலி கொடுப்பேன்!

#ஒருநன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!

(என்று அல்லாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1894)

#ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன.

இது அவர்களுக்கு #உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.

#நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம், மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம்.

#இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

#இதுபோன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது.

#எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது #உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது.

ஆனால் #ஒன்றைக்கவனத்தில் கொள்ள வேண்டும்.

#நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.

: #தீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அன்புடன்
#சேலத்துசெம்மலா்"...!!

மகாராஷ்டிராவில் காவிகள் வெறியாட்டம் : முஸ்லிம் இஞ்சீனியர் அடித்துக்கொலை !பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; 500 குர்ஆன் எரிப...
06/06/2016

மகாராஷ்டிராவில் காவிகள் வெறியாட்டம் : முஸ்லிம் இஞ்சீனியர் அடித்துக்கொலை !

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; 500 குர்ஆன் எரிப்பு.... கடும் அச்சத்தில் முஸ்லிம்கள்!!

116 காவி குண்டர்கள் கைது !!!

மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும், கடந்த 5 நாட்களாக, 30 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, முஸ்லிம்களின் உயிர்-உடமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (03/06) 'முஹ்சின் சாதிக் ஷேக்' என்ற 24 வயது 'ஐடி இஞ்சீனியர்' அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார், பள்ளியின் இமாம் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த மும்பை ரவுடி பால்தாக்கரே குறித்தும் சத்ரபதி சிவாஜி, மற்றும் சில ஹிந்து தலைவர்கள் குறித்தும் யாரோ ஒரு விஷமி, 'பேஸ்புக்'கில் மார்பிங் செய்து படம் போட்டுள்ளான் எனக்கூறி, கடந்த சனிக்கிழமையன்று, காவிகள், கலவரத்தில் ஈடுபட்டனர்.

200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

குறிப்பாக 'புனே' நகரை சுற்றிவளைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

50 க்கும் அதிகமான 'குர்ஆன்' பிரதிகளை கிழித்தெறிந்தும், தீவைத்துக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.

ஆயிஷா பள்ளிவாசலின் இமாம், மவுலவி அஷ்பாக் மிஸ்பாஹி, கடுமையாக தாக்கப்பட்டு 'இனாம்தார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டேவாடி பகுதியில் உள்ள 5 மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 'மதரசா ஷப்னம் கரீப்நவாஸ்' பாடசாலயில் அரபி பயில வந்த 20 சிறுவர்களையும் தாக்கி, அவர்கள் வைத்திருந்த குரான் உள்ளிட்ட புத்தகங்களை கிழித்துள்ளனர்.

குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு, விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றிப்பெறவே, இக்கலவரங்கள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுபான்மை அப்பாவிகளை துயருக்கு ஆழாக்கும் அணைவருக்கும்
தகுந்த தண்டனையை இறைவன் நிச்சயம்
தருவானாக ஆமீன்"...!!

வேதனையில்
#சேலத்துசெம்மலா்"....!!

 #ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் :- #தமிழ் மாநில காங்...
04/06/2016

#ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் :-

#தமிழ் மாநில காங்கிரஸ்
சிறுபான்மை பிரிவு ...
மாநில துணை தலைவா்
மு மன்சூா்யாசின் வெளியிடும் அறிக்கை :-

#ராஜஸ்தான் மாநிலத்தில் சோட்டி
சத்ரி பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சிட்ரோகர் வழியாக வியாபாரத்திற்காக 50 மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை மறித்து அதிலிருந்த ஓட்டுனர் மற்றும் மூவரை காவல்துறையினரின் கண்முன்னே நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கிய பாசிச வெறிபிடித்த மனித மிருகங்களை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது ....

#இரக்கமற்ற முறையில் அரக்கத்தனமாக சித்திரவதைகள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் நாட்டில் மதவாத பாசிச சக்திகளின் வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவே உணர முடிகிறது.

#இதுமட்டுமல்லாமல் கடும் தாக்குதலுக்கு உட்பட்ட லாரி ஓட்டுனர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் இந்த செயல் ஒரு நியாயமான செயலா ...??

#கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என அக்லாக் என்ற பெரியவரை அடித்துக்கொன்றது, மார்ச் 2016ல் ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக் கறி வியாபாரம் செய்ததற்காக 13 வயது முஸ்லிம் சிறுவன் உட்பட இரண்டு பேரை அடித்து தூக்கில் போட்டுக் கொன்றது என தற்போது அதே கொடூரக் கொள்கைக் கொண்ட வன்முறைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

இருந்தும் .. .

#நாளுக்கு நாள் மனித உரிமை, மனித நேயம் என்ற உயரிய மாண்புகளுக்கு அர்த்தமே இல்லாமல் இந்திய தேசம் போய்க்கொண்டுள்ளது.

மே 2014 முதல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ...

#இந்தசமூக விரோதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துணிச்சலை இந்நாட்டு மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.!!

#இந்நாட்டில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உயிர்களுக்கு உத்திரவாதம் உண்டா இல்லையா?

என்ற கேள்வியை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளது.

#பாஜகதலைமையிலான மத்திய அரசு எப்போதும்போல் வேடிக்கைப் பார்க்காமல் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும், ராஜஸ்தான் அரசு இச்சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் மூலம் தண்டனைப்பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு சாா்பாக வலியுறுத்துகிறது.

இவன்
#சேலத்துசெம்மலா்"...!!

*

 #வரதட்சணை கொண்டு வராததால் பெண்ணுக்கு மொட்டை"!!----------------------------------------------------------------------- #...
04/06/2016

#வரதட்சணை கொண்டு
வராததால் பெண்ணுக்கு மொட்டை"!!
-----------------------------------------------------------------------
#உத்தர பிரதேசம் காஜிபூர் கிராமம் இங்குள்ள ஒரு இந்து தம்பதிக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தில் பேசப்பட்ட வரதட்சணையை பெண் வீட்டாரால் கொடுக்க முடியவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக அந்த பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

இதன் உச்ச கட்டமாக அந்த பெண்ணை பலரது முன்னிலையில் வைத்து மொட்டை அடித்து தங்கள்து வீரத்தை காட்டியுள்ளனர் இந்த கோழைகள்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை வழக்கு பதிவும் செய்துள்ளது.

பசு என்ற மிருகத்துக்காக மனித உயிர்களை எடுக்கும் இந்துத்வாக்கள் தற்போது எங்கு போனார்கள்?

முத்தலாக்குக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மாதர் சங்கங்கள் எங்கு போனார்கள்?

(முத்தலாக் இஸ்லாத்தில் கிடையாது: மார்க்கம் அறியாத மூடர்கள் 'தலாக் தலாக் தலாக்' என்று சொன்னாலும் அது ஒரு தலாக்காகத்தான் கருதப்படும்.

மற்றொரு தலாக் சொல்ல கால இடைவெளி உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை.)

நியாயத்துக்காக ஒரு கேள்வி

இவன்

#சேலத்து செம்மலா்"...!!


http://thelogicalindian.com/news/womans-head-shaved-and-expelled-from-family-for-dowry/

With numerous incidences happening all around the country the greed in people for dowry doesn’t seem like getting over. The country has witnessed several deaths, tortures, and harassments that women undergo for committing the crime of not bringing the dowry along with them at the time of marriage. A...

 #உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது"...!!                       திருக்குர்ஆன் 22:73ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய ...
04/06/2016

#உங்களால் ஒரு ஈயை கூட
படைக்க முடியாது"...!!

திருக்குர்ஆன் 22:73

ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம்.

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் :

“ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்

எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர்

மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது.

அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர்.

ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.

இவ்வளவு அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான் என்றால் ஈயைவிடவும் பன்பமடங்கு பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்துனை எத்துனை அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்க வேண்டும்.

ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில் அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன.

ஓரிடத்தில் ஈயொன்று போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான நுண் கிருமிகள் தொற்றிக்கொள்கின்றன.

ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள் எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன.

இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான்.

ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான்.

இன்று விஞ்ஞானம் கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் கூறினார்கள்.

“உங்கள் குடிபானத்தில் ஈ வீழ்ந்தால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்து விடவும்.

ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றையதில் நிவாரணமும் உள்ளது”
(புஹாரீ, அபூதாவூத்)

ஈக்களின் ஒளி ஊடுபுகும் விதத்தில் அமைந்திருக்கும் இறகுகள் மிக விரைவாகப் பறப்பதற்கு ஏற்றவிதத்தில் உறுதியாகப் படைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கண்களுக்குத் தென்படாத அமைப்பில் மிக மெல்லிய இரத்த நரம்புகள் நூற்றுக் கணக்கில் அவற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பொலித்தீன் போன்று மிக மெலிதாக அவ் இறக்கைகள் இருந்தாலும் பறக்கும்போது அவை பிய்ந்துவிடாத வண்ணம் அல்லாஹ் பாதுகாத்துவைத்துள்ளான்.

"மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பப் பறித்துக்கொள்ளவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமானவர்களே!” (22:73)"

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...

படியுங்கள்...
பகிருங்கள்...

#திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...

"இனிய காலை ஸலாம்
என் அருமை நண்பா்களே"...!!

அன்புடன்
#சேலத்துசெம்மலா்

Address

Corporation Of Salem
Salem
636007

Telephone

9677116350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Congress - State Minority Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Nadu Congress - State Minority Wing:

Share