தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம், சேலம் மாவட்டம்

  • Home
  • India
  • Salem
  • தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம், சேலம் மாவட்டம்

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம், சேலம் மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம், சேலம் மாவட்டம், Social service, Kulalar Thagaval Maiyam, Kollapatty, Salem.

இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தீப திருநாள் வாழ்த்துச் செய்தி உடன் நமது மாவட்ட தலைவர் அவர்கள் 'களிமண்ணணால் செய...
13/12/2024

இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தீப திருநாள் வாழ்த்துச் செய்தி உடன் நமது மாவட்ட தலைவர் அவர்கள் 'களிமண்ணணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை பயன்படுத்துங்கள்' என்ற வேண்டுகோளையும் மக்களுக்கு வைத்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார்

💐💐 இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தீப திருநாள் செய்தி💐💐💐
13/12/2024

💐💐 இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தீப திருநாள் செய்தி💐💐💐

இன்று பல்வேறு பணிகளுக்கு இடையேயும் குருக்கப்பட்டிற்கு மாத நாள்காட்டி வழங்க வருகை தந்த நமது சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாள...
10/12/2024

இன்று பல்வேறு பணிகளுக்கு இடையேயும் குருக்கப்பட்டிற்கு மாத நாள்காட்டி வழங்க வருகை தந்த நமது சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தின் பாசமிகு தலைவர் Er N ராஜாமாமா அவர்களும் மற்றும் செயலாளர் திரு கதிர்வேல் Red S | அவர்களும் பொருளாளர் திரு கிருஷ்ணன் போக்குவரத்து ஓய்வு அவர்களும் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் திரு.தங்கராஜ் அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாமா திரு.வரதன் அவர்களும்குறுக்கப்பட்டி குலாலர் மக்களை சந்தித்தும் அவர்கள் செய்யும் பணியினைபார்த்ததோடு அல்லாமல் எங்களோடு சேர்ந்து சூலை வைக்கும் பணியினை மேற்கொண்ட நமது மாவட்ட நிர்வாகம்

இன்று 23.11.2024 அன்று சேலம் அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் நமது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாண்புமிகு சுற்றுலாத்துறை...
23/11/2024

இன்று 23.11.2024 அன்று சேலம் அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் நமது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ராஜேந்திரன் அவர்களை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து நமது கோரிக்கைகளை அடங்கிய மனுவை நிர்வாகத்தின் சார்பாக வழங்கிய தருணம்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் Er.N. ராஜா, செயலாளர் S. கதிர்வேல், பொருளாளர் M. கிருஷ்ணன், மாநில இளைஞரணி தலைவர் திரு .P. துரை சஞ்சீவ், சட்ட ஆலோசகர் G. ஹரி பாஸ்கர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் H. அமுதா ஹரிபாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A. வரதராஜ் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

இன்று 18.11.2024 திங்கட்கிழமை அன்று  அமைப்புசாரா தொழிலாளர்க்கு தேவையான உதவிகளை அரசு தடை இல்லாமல் வழங்க கோரியும் மண்பாண்ட...
18/11/2024

இன்று 18.11.2024 திங்கட்கிழமை அன்று அமைப்புசாரா தொழிலாளர்க்கு தேவையான உதவிகளை அரசு தடை இல்லாமல் வழங்க கோரியும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வருடந்தோறும் வழங்கும் பொங்கல் தொகுப்பில் பொங்கல் பானையும் சேர்த்து வழங்க கோரியும் சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் தலைவர் திரு.N.ராஜா அவர்கள் தலைமையில் செயலாளர் திரு. S.கதிர்வேல் மற்றும் துணைத் தலைவர் T. கமலநாதன் ஆகியோர் சேர்ந்து மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கினோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று 17.11.2024 ஞாயிற்றுகிழமை தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான 'கல்யாண மாலை' நிகழ்வானது நமது சேல...
17/11/2024

இன்று 17.11.2024 ஞாயிற்றுகிழமை தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான 'கல்யாண மாலை' நிகழ்வானது நமது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாவட்ட நிர்வாகத்தின் குலாலர் தகவல் மையமும் கல்யாண மாலை நிகழ்வில் இணைந்து நமது குலாலர் மக்களின் நலனுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளது என்றால் மிகையல்ல.

வரன் தேடும் நிகழ்வான கல்யாண மாலை நிகழ்ச்சியில் நமது சேலம் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கமும் கலந்து கொண்டதற்கு கல்யாண மாலையின் நிறுவனர் டிவி மோகன் அவர்கள் சேலம் மாவட்ட தலைவர் திரு Er. N. ராஜா BTech, செயலாளர் கதிர்வேல் SI (Rtd), பொருளாளர் கிருஷ்ணன் ATC (Rtd) மாநில இளைஞரணி துணைத் தலைவர் துரை P சஞ்சீவ் BE ஆகியோரை பொன்னாடை போர்த்தி திரு மோகன் அவர்கள் கௌரவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட துணைத்தலைவர் சிற்பி அசோகன், இளைஞரணி தலைவர் திரு கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் திரு RG விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குலாலர் திருமண தகவல் மையத்தை தொடர்புகொள்ள 9677695152

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி இன்று 17 11 24 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9...
17/11/2024

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி இன்று 17 11 24 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9:00 மணி அளவில்* ஜங்ஷன் உழவர் சந்தை அருகே HMS அமைப்புசாரா தொழிலாளர்கள் நிர்வாகத்தோடு இணைந்து மத்திய , மாநில அரசை நமது அடிப்படை கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரி மாவட்ட தலைவர் Er.ராஜா B. Tech அவர்கள் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நமது மாவட்டம் நிர்வாகம் சார்பாக கலந்து கொண்ட நமது மாவட்ட தலைவர் திரு Er.ராஜா B. Tech அவர்கள் மாவட்ட செயலாளர் S. கதிர்வேல் அவர்கள் மாவட்ட பொருளாளர் M. கிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாநில இளைஞரணி துணைத் தலைவர் துரை சஞ்சீவ், மாவட்ட துணைத் தலைவர் T.கமலநாதன் அவர்கள் A.அசோகன் மாவட்ட துணைத் தலைவர், இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன்,மாவட்ட மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் R.G.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும் மாவட்ட சட்ட ஆலோசகர் G. ஹரிபாஸ்கர், மாநில மகளிரணி துணைத் தலைவி அமுதா, செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ,மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் கலந்து கொண்டு சிறப்பித்து தருணம் கிளைச் சங்கங்கள் வட்ட முத்தாம்பட்டி, வீராணம் குருகுப்பட்டி, சூரமங்கலம் ,மேச்சேரி சவுரியூர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நவீன மின் திருவை இயந்திரங்கள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே காட்டம்பட்டி கதர...
07/11/2024

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நவீன மின் திருவை இயந்திரங்கள் வழங்கும் விழா
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே காட்டம்பட்டி கதர் கிராம தொழில் வாரிய அரசு குடோனில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின் திருவை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 06.11.2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகளவில் காலம் காலமாக தங்களது குல தொழிலை மறவாமல் மண்பாண்ட பொருட்களான மண் பானை, மண் சாமி சிலைகள், மண் அடுப்பு, அகல் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுத்து வருகிறது. அவ்வகையில் ஜலகண்டாபுரம் காட்டம்பட்டியில் சேலம் மாவட்ட கதர் கிராம நல வாரிய துணை இயக்குநர் திரு. செந்தில்குமார் தலைமையில் மற்றும் துறை அலுவலர்கள் குபேந்திரன், அமுதா, ஆகியோர் கலந்துகொண்டு 100 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் திருவை இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் Er. N. ராஜா, மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணை தலைவர் துரை P. சஞ்சீவ், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் நுட்ப அணித் தலைவர் RG. விஜயபாஸ்கர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் அமுதா, மற்றும் மாவட்ட துணை தலைவர்கள், கமலநாதன், அசோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நமது மாவட்டத்தின் கிளை மன்றங்களான கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, அம்மாபேட்டை, சூரமங்கலம், ஆத்தூர், முல்லைவாடி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு நவீன மின் திருவை இயந்திரங்கள் பெற்றுக் கொண்டனர்.

31/10/2024

Address

Kulalar Thagaval Maiyam, Kollapatty
Salem
636030

Opening Hours

Monday 10:15am - 5:30pm
Wednesday 10:15am - 5:30pm
Thursday 10:15am - 5:30pm
Friday 10:15am - 5:30pm
Saturday 10:15am - 5:30pm
Sunday 10:15am - 1:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம், சேலம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category