15/07/2024
நம் குழுவின் சார்பில் கடந்த ஆண்டு சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் பள்ளியின் Hockey அணிக்கு ஹாக்கி கோல் கீப்பர் கிட், ஷூ, ஸ்டாகிங்ஸ், knee Pad, Practice Jersey & விளையாட்டு திடல் சீரமைப்பு என 1.15லட்சம்
(உத்தேசமாக) மதிப்பில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.. இதில் கடந்த ஆண்டு மேகலா என்ற மாணவி தேசிய அளவில் இடம் பெற்றார். மேலும் ஜூனியர் & சீனியர் அணி மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டது..
தற்போது இப்பள்ளியின் செல்வி.சசிபிரபா (XI-Std) தேசிய அளவிலான Camp-ல் தேர்வாகி அதில் இருந்து தற்போது Hockey India Sub Junior South Zone, Championshipல் தமிழக அணியில் இடம் பெற்று உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .
போட்டியில் கலந்து கொள்ள
நாளை கேரளா செல்கிறார்...
நிழல் சேவை அன்பு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்..
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், திருமதி.சண்முக தாரணி &
Coach திரு.சிவகுமார் சார் அவர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள். மேலும் பல மாணவர்களை கண்டறிந்து அவர்களின் எதிர்கால வாழ்வினை விளையாட்டு துறையில் மேன்மை பெற பேருதவி செய்ய வேண்டுகிறோம்.
❤️🤝
#நிழல்_படரட்டும் ❤