04/03/2026
காதலித்து ஏமாற்றியதற்காக தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி பலி.
பெண்ணின் குடும்பத்தை மிரட்டும்ஆதிக்க சமூகத்தின் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - மாதர் சங்கம் கண்டனம்....
சேலம், மார்ச் 04-
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவியை காதலிப்பதாக சொல்லி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏமாற்றியதை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு சாதிய ரீதியாக மிரட்டல் விடும் ஆதிக்க சமூகத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் வன்மையாக கண்டித்து தனது அமைப்பின் சார்பில் கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ரமேஷ் இவரது மகள் கோபிகா நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை இளம்பிள்ளை பகுதியில் குடியிருந்து வரும் சக்திவேல் என்பவரின் மகன் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கார்த்திகேயன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நான்கு ஆண்டுகளை கடந்து காதலித்து வந்த இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி உள்ளனர் தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வரும் கோபிகா கல்லூரி படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார் இதற்கு கார்த்திகேயன் நீ தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர் அதனால் திருமணம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத கோபிகா மனம் உடைந்து கடந்த 13 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இது சம்பந்தமாக ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் முறையான விசாரணையில் ஈடுபடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு உள்ளதாகவும் தங்களின் மகளுக்கு உரிய நீதி வேண்டும் என கோபிகாவின் தாய் ரதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
நெருக்கமாக பழகி வந்து உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திய கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் கார்த்திகேயன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட கோபிகாவிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து காதலித்து ஏமாற்றிய கார்த்திகேயன் காவல்துறையினர் முறையாக விசாரணைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அழித்திருந்த நிலையில்,
மாணவி கோபிகா மார்ச் மூன்றாம் தேதி மாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மாணவியை இளம்பிள்ளை அருகில் உள்ள சித்தர் கோவில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று காதலன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயனின் நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சாதிய ரீதியாக மிரட்டி துன்புறுத்துதல் நடத்தியதால் மாணவி தற்கொலைக்கு மெயின் ரோடு உள்ளார் என ஆதாரங்களுடன் கோபிகாவின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்த போதும் முறையான விசாரணை நடத்தவில்லை தற்போது தற்கொலைக்கு முயன்று தனது மகள் உயிரிழந்துள்ளார் அதற்கு நீதி வேண்டும் எனவும்,
தற்கொலைக்கு காரணமாகஇருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மானகியின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து கோபிகாவின் குடும்பத்தினர் குடியிருந்து வரும் பகுதியில் ஆதிக்க சமூகத்தினர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோபிகாவின் உடலை வாங்க மறுத்து சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்தை தொடர்ந்து காவல் உதவி ஆணையாளர்கள் இருவர் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம், அருந்ததியர் மக்கள் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
காதலிப்பதாக கூறி தற்போது ஒரு மாணவி உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது கருத்தில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்கும் உதவிகளை செய்ய வேண்டும் எனவும், செயலில் ஈடுபட்டவர்கள் நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்ட தலைவர் ஆர் குழந்தைவேல்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பெருமா,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி,இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டார்வின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் கனகராஜ், அருந்ததியர் மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் இராவண பிரபு, அருந்தமிழர் விடுதலைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மாதேஸ் மற்றும் திராவிடர் தமிழர் கட்சி ராமசந்திரன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்