நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை

  • Home
  • India
  • Rasipuram
  • நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை

நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை அனைத்து மக்களுக்கும் நன்மைக்கான தகவல் அளிக்கும் பக்கம்

அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்ஸிய கருத்துக்களை வாழ்வியலாக ஏற்கவைத்து முழு இயக்கவாதியாக ஒரு தோழரை முழுவதுமாக வென்றெடுப்பத...
03/12/2024

அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்ஸிய கருத்துக்களை வாழ்வியலாக ஏற்கவைத்து முழு இயக்கவாதியாக ஒரு தோழரை முழுவதுமாக வென்றெடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல....
(பொட்டு,கயிறு, தீட்டு,சடங்கு, விதி மூடநம்பிக்கை,
பெண்ணடிமை )
ஆயிரம் மேடைகளில் தலைவர்களின் பேச்சை ஆழ்ந்து கேட்டு,
பல செய்திகளை, வரலாறுகளை தேடி படித்து....
மூத்த தோழர்களின் அற்பணிப்பை, சமூக பங்களிப்பை, களப்பணியை கேட்டு அறிந்து சிற்பி சிலையை அழகாக வடிப்பதை போல....

அநீதிக்கு எதிராக அறச்சீற்றமும்.., எல்லோரும் சமம் தானே...? என்கின்ற மனிதநேயமே....! ஒரு தோழரை உருவாக்கும்.

(மனிதர்களாக லட்சம் பேர் வாழும் மாவட்டத்திற்குள் கொள்கை பிடிப்புள்ள மனித நேயபண்புகள் கொண்ட தோழர்கள் ஒரு சிலரை விரல் விட்டு எண்ணி விடலாம். )

தோழர்களே.....
அடைய வேண்டிய இலக்கு (சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) வெகு தெலைவில் உள்ளது.

இந்த சமூக மாற்றத்திற்காக எத்தனை அவமானங்களை, இழிவுகளை, வசவுகளை, விமர்சனங்களை தாங்கி கொண்டு சமூக விடுதலைக்கு பாடுபடும் ஒவ்வொரு தோழரின் உழைப்பையும் நேரத்தையும் ஆற்றலையும் இழப்புகளையும் யாராலும் ஈடு செய்ய முடியாது.

(தான் என்ற சயநலத்தோடு தன்பெண்டு தன்பிள்ளை என கடுகு வாழ்க்கை வாழ்வோர் மத்தியில்......)

சமூக விடுதலைக்காக தன்னை அற்பணித்துகொண்ட அனைத்து
#தோழர்களையும் போற்றுவோம்....!

தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்துறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்.... நாமக்கல் மேற்கு மாவட்ட Ex தல...
01/12/2024

தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்துறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்.... நாமக்கல் மேற்கு மாவட்ட Ex தலைவர் சிவசங்கர் தலைமையில்.... மாநில பொறுப்பாளர் செல்வ வில்லாளன் நாமக்கல் மேற்கு மாவட்ட Ex இளைஞர் அணி செயலாளர் தாமரைச்செல்வம் திருச்செங்கோடு Ex நகர செயலாளர் சரவணன் திருச்செங்கோடு நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன் நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ் ஆசிரியர் சாமிநாதன் வட்டூர் மாதேஷ் கைலாசம் பாளையம் மாதேஷ் உள்ளிட்ட தோழர்கள் தலைவர் அவர்களை சந்தித்து டிசம்பர் 23 சென்னையில் நடைபெறும் அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி வெற்றி பெற வாழ்த்துக்களையும் பேரணி வெற்றிக்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.

அரங்கம் அதிர அய்யா அதியமான்‌ பேருரை.
22/09/2024

அரங்கம் அதிர அய்யா அதியமான்‌ பேருரை.

...

13/09/2024
11/09/2024

நாமக்கல் மாவட்டத்தில் இன்று திருமாவளவனை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. https://www.facebook.com/share/fHciQfFHM5ECKYz9/?mibextid=oFDknk

24-03-2024 கோவையில்..I.N.D.I.A கூட்டணி KMDK  கட்சி வேட்பாளர் திரு மாதேஸ்வரன் அவர்கள் அய்யா அதியமான் அவர்களை கோவை தலைமை அ...
24/03/2024

24-03-2024 கோவையில்..
I.N.D.I.A கூட்டணி KMDK கட்சி வேட்பாளர் திரு மாதேஸ்வரன் அவர்கள் அய்யா அதியமான் அவர்களை கோவை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
************************************************

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ER.ஈஸ்வரன் அவர்கள் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. V.S.மாதேஸ்வரன் அவர்களும் KMDK நிர்வாகிகளும் நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுடன்
கோவை ஆதித்தமிழர் பேரவை தலைமை அலுவலகத்தில் #அய்யா அதியமான் அவர்களிடம் வாழ்த்து பெற நேரில் சந்தித்தனர்,நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதியேற்றார்கள்.

#இந்தியா
#நாமக்கல்


#திமுக

23/03/2024

நாமக்கல் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய கொங்கு நாடு மக்க்கள் தேசிய கட்சி முன்னாள் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றத்திற்காக ஒருமித்த குரல் கொடுத்து வேட்பாளர் மாற்றம் வரை உறுதியாக இறுதி வரை நின்று இன்று புதிய வேட்பாளர் #மாதேஸ்வரன் அவர்களுடன் கூட்டணி நிர்வாகிகளுடன் குத்து விளக்கேற்றி நாமக்கல் சேலம் ரோடு அலுவலகம் தொடங்கி வைத்தபோது #ஆதித்தமிழர் பேரவை #நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்களுடன் I.N.D.I.A கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்


#திமுக


#சமூகநீதி_போராளி அதியமான் பேரவை

ஆதித் தமிழர்களின் தலைநிமிர்வுசமூக நீதி போராளிஆதித்தமிழர் பேரவை நிறுவனர்-தலைவர் அய்யா.இரா.அதியமான் அவர்களுடன் திராவிட மாட...
19/03/2024

ஆதித் தமிழர்களின் தலைநிமிர்வு
சமூக நீதி போராளி
ஆதித்தமிழர் பேரவை
நிறுவனர்-தலைவர்
அய்யா.இரா.அதியமான்
அவர்களுடன் திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களை சந்தித்து மகிழ்ந்தோம்..

அண்ணா அறிவாலயம்
தலைநகர் சென்னை
(19-03-2024)

தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்   கூட்டமைப்பு சார்பாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர்  ...
03/02/2024

தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் #அய்யா_அதியமான் அவர்களுக்கு #கலைஞர் விருது வழங்கும் விழா..!! நாள்: 04.02.24 மேட்டுப்பாளையம், கோவை..

#ஆதித்தமிழர்பேரவை

Address

Rasipuram
637505

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share