16/02/2023
பரமக்குடி அரசு கலைகல்லுரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபட்ட கல்லூரி உதவி பேராசிரியர் சத்தியசேகரனை கைது செய்யகோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பரமக்குடி காந்தி சிலை முன்பு கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரமக்குடி அரசுகலைகல்லூரியில் வரலாற்று துறை உதவி பேராசிரியராக பணிபுரியும் சத்திய சேகரன் என்பவர் தனது வகுப்பில் பயிலும் சக மாணவியிடம் போனில் தொடர்பு கொண்டு மற்ற மாணவிகளை தகாத முறையில் பேசியதோடு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த போவதாகவும், தகாத முறையிலும் பேசி ஆடியோ வைரல் ஆனது, அதனைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது. ஆனால் காவல்துறை கைது செய்யாமல் வழக்குமட்டும் பதிவு செய்துவிட்டு தப்பிக்கவிட்டுள்ளனர். இதை கண்டித்து உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் , பாதிக்கப்பட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் மிரட்ட கூடாது , அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுப்பதோடு மாணவிகள் பெயரை வெளியிட கூடாது , சாதியமாதவாத சக்திகள் மாணவர்களிடையே தூண்டும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் கல்விநிலைய வளாகங்களில் ஆண்பெண் நட்புறவு குழுக்களை ஏற்படுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட கல்லூரியில் இதுபோன்ற வேறு ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்து மகளிர் நல ஆணையர் தலைமையில் மாணவர் நல அமைப்புகளோடு சேர்ந்த குழு அமைத்து விசாரிக்க பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எஸ்.எப்.ஐ தாலுகா செயலாளர் தோழர். வியட்நாம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மக்கள் பாதை ராவணகுமார், தென் தமிழர் மாணவர் அமைப்பு பாலமுரளி, ஆம்ஆத்மி முத்துகுமார், மாணவர்சங்க மாநிலகுழு உறுப்பினர் வில்லியம் ஜாய்ஸி, மாவட்ட தலைவர் அஜய் ஆகியோர் கண்டணஉரை ஆற்றினர். மாணவர் சங்க முன்னால் மாநில துணைசெயலாளர் தி.இராஜா நிறைவுரையாற்றினார், DYFi தாலுகா செயலாளர் முனியசாமி, பசலை நாகராஜ் உள்ளிட்டவர்களோடு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததை தொடர்ந்து தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,