Tntj rajapalayam students wings

Tntj rajapalayam students wings bismillahi rahumanir rahim..in this page, some details about education loan,jobs alert, awarnace, colleges detail, and dhawaa....

30/12/2024
17/09/2022

நெல் & அரிசி வியாபாரிகள் சங்கம்...

 #போராட்டம்_இது_போராட்டம்...!மதவெறிப் பிடித்த மியான்மர் அரசைக் கண்டிக்கும் போராட்டம்...!கலந்து கொள் சகோதரா....!உன் சகோதர...
15/09/2017

#போராட்டம்_இது_போராட்டம்...!

மதவெறிப் பிடித்த மியான்மர் அரசைக் கண்டிக்கும்

போராட்டம்...!

கலந்து கொள் சகோதரா....!

உன் சகோதரனின் துயர் துடைக்க...!

********************************************
போராட்டக்களம் : #இராஜபாளையம்
நேரம் : 16-09-2017 ( சனிக்கிழமை)
மாலை 4 மணிக்கு (INSHA ALLAH)

********************************************

விண்ணை முட்டும் உன் கோசம்...
எதிரியின் நெஞ்சை உலுக்கட்டும்..!

********************************************துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும்....நாம்செய்ய வேண்டிய நற்காரியங்கள...
30/08/2016

********************************************
துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும்....
நாம்
செய்ய வேண்டிய நற்காரியங்களும்..!!

*********************************************
மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 969

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அந்த நாட்கள் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

அந்த நாட்களில் நாம்..

அதிகமதிகமாக...

*உபரியான தொழுகைகள்*

*தான தர்மங்கள்*

*திக்ருகள்*

*பிரார்த்தனைகள்*

செய்பவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ...

துல்ஹஜ் ஒன்பதாம் நாளில் ஹாஜிகள் அல்லாதோர் (அரஃபா)நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம் 1976

துல்ஹஜ் 10 ஆம் நாளில் திடலுக்கு சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

குர்பானி கொடுக்க நாடியிருந்தவர்கள் திடல் தொழுகையை முடித்த பின்னர் இறைவழியில் தூய்மையான உள்ளத்தோடும் இறையச்சத்தோடும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும்.

இந்த அரிய வாய்ப்புகளை இழந்து விடாமல்... நன்மைகளைச் சேகரித்து இறை திருப்தியைப் பெறுவோம்.

 #இராஜபாளையம்_நகர_மக்களே..!நமது ஊரில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் தீர்ந்திட....இறைவனின் அருள்மழை பொழிந்திட..இன்ஷாஅல...
25/08/2016

#இராஜபாளையம்_நகர_மக்களே..!

நமது ஊரில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் தீர்ந்திட....
இறைவனின் அருள்மழை பொழிந்திட..
இன்ஷாஅல்லாஹ்...
எதிர்வரும்... 28-06-2016 (ஞாயிறு) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் #மழைவேண்டி_சிறப்புத்_தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் : கல்பானி ரைஸமில் திடல்,
( TNTJ பள்ளி எதிரில்)
சம்மந்தபுரம். இராஜை.

நேரம் : காலை 7 மணி.

அனைவரும் கலந்து கொண்டு...

இறைவனிடம் பாவமன்னிப்பு
தேடுவோம்..!!

அருள்மழை பெறுவோம்...!

தம்பி ...!ஷிர்க் என்றால் என்னவென்று முதலில் எனக்கு விளக்கமாக சொல்லுப்பா..."" எனக் கேட்ட காவலர்களுக்கு ..."ஷிர்க் என்றால்...
03/02/2016

தம்பி ...!
ஷிர்க் என்றால் என்னவென்று முதலில் எனக்கு விளக்கமாக சொல்லுப்பா...""
எனக் கேட்ட காவலர்களுக்கு ...

"ஷிர்க் என்றால் என்ன??

இறைவனுக்கு ஏன் இணை கற்பிக்க கூடாது ... ""

அழகிய முறையில் அழைப்புப் பணி செய்யும் தவ்ஹீத் சகோதரர்.

அல்லாஹு அக்பர்..!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று காலையில் மழைத்தொழுகை நடத்தப்பட்டது.அல்ஹம்து...
14/09/2014

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று காலையில் மழைத்தொழுகை நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும்...
06/09/2014

மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS)

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவியர்களுக்கு ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) என்ற மூன்று நிலைகளின் கீழ் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2014-15ம் கல்வியாண்டிற்கு, புதிதாக(FRESH) உதவித்தொகை பெற மற்றும் முன் வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகை புதுப்பித்தல்(RENEWAL) செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது

மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) பற்றிய விபரம் மற்றும் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்க வேண்டிய முறை,கடைசி நாள்,தேவையான சான்றிதழ்களின் விபரம் கீழ் வருமாறு


தகுதி:

1) இளங்கலை(UG), முதுகலை(PG நிலை, மருத்துவம்(MBBS) ,பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (BE,ME,B Tech...),கட்டிடக்கலை,சட்டம் போன்ற துறைகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு
2) முழு துறைகளையும் அறிய கீழே உள்ள இணையதளத்தை பார்க்கவும்
http://momascholarship.gov.in/minority_scholarship/internalIndex.jsp

3) குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
4) முன் ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5) வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது
6) ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபர்களுக்கு மட்டும்
7) மாணவியர்களுக்கு 30% ஒதுக்கீடு

கடைசி நாள்: புதியது (Fresher): 30-09-2014 புதுப்பித்தல் (Renewal): 15-11-2014

விண்ணப்பிக்கவேண்டிய முறை: Post Matric & Merit Cum Means Based

புதிதாக விண்ணபித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்

http://www.momascholarship.gov.inஇணையத்தளத்தில் விண்ணப்பதை பூர்த்தி செய்யவேண்டும் . பூர்த்திசெய்த பிறகு “SAVE” பட்டனை CLICK செய்யவும் பிறகு “FORWARD” பட்டனை CLICK செய்யவும். ஆன்லைனில் “FORWARD” பட்டனை CLICK செய்தபின் மாணவர்களுக்கு ஒரு தற்காலிக அடையாள என் (Temporary ID) வழங்கப்படும், பூர்த்தி செய்த விண்ணப்பம் சம்மந்த பட்ட கல்வி நிலையத்திற்கு ஆன்லையன் மூலம் அனுப்பப்படும்.
பூர்த்திசெய்த விண்ணப்பதை “PRINT OUT” எடுத்து, குறிப்பிட்டு உள்ள ஆவணங்களையும் (நகல்) இணைத்து உங்கள் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் , தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2) பிறந்த தேதி சான்றிதழ் நகல்
3) வருவாய் துறையினரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ் (அல்லது) 10 ரூபாய் நீதித்துறை சாராத முத்திரை தாளில் சுய பிரகடனம் செய்யவும் (self-declaration in Rs 10 Non-Judicial stamp paper)
4) சாதி சான்றிதழ் நகல் ( Community Certificate)
5) முந்தய வருட பள்ளிக்கூட மதிப்பெண் அறிக்கை அட்டை (progress report /Rank card)
6) முகவரி சான்று Address Proof (Ration Card, Voter ID, PAN Card etc),
7) அடையாள சான்று Identification Proof
8) கல்வி கட்டண ரசீதுகள்
9) வங்கி கணக்கு என் மற்றும் வங்கி, வங்கி பாஸ் புக் நகல் அல்லது cancelled Cheque leaf , IFS Code (11 Digits)
10) விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவியின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்
11)கல்லூரி அலுவகத்தில் இருந்து கையெழுத்து(counter signed) பெற்ற போன வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற்றதற்கான ரசீது.(only for renewal candidate)
12)விடுதியில் தங்கி இருப்பதற்கான ரசீது அல்லது காலுரியில் இருந்து declaration form பெற்று இணைக்கவும்


பொருளாதாரம் இல்லாமல் கல்வியை பாதியில் கைவிடக்கூடிய மாணவர்கள் நம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளார்கள். அவர்களுக்கு இது போன்று அரசாங்கம் அளிக்கக்கூடிய உதவித்தொகைகளை பெறுவதற்கான வழிமுறைகளை செய்யவேண்டியது மிகவும் அவசியம். ஆகையால்இந்த கல்வி உதவிக்கான வழிகாட்டி முகாம்களை அனைத்து கிளைகளிலும் நடத்தி அதிகமான மக்களை பயனடைய செய்யுமாறு TNTJ மாணவரணியின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

முகாம் நடத்துவதற்கான சந்தேகங்களுக்கு கிழே உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
8056905747
7373926459
9500090682

மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள இணையதளங்களை பார்க்கவும்,மற்றும் உங்கள் கல்வி நிறுவனங்களை அணுகவும்
www.minorityaffairs.gov.in/ScholarshipSchemes
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm
http://www.momascholarship.gov.in

விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு -  டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு :பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப,...
06/09/2014

விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு :

பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

asslamu alaikum....
06/09/2014

asslamu alaikum....

கல்வி உதவித் தொகையை வழங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்..பிளஸ் ஒன், ஐ.டி.ஐ, என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ், எம்.பி.ஏ. படிக...
06/09/2014

கல்வி உதவித் தொகையை வழங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்..

பிளஸ் ஒன், ஐ.டி.ஐ, என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ், எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

பிளஸ் ஒன், ஐ.டி.ஐ, என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ், எம்.பி.ஏ. படிக்கும் 2600 மானவர்களுக்கு பொது துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவித்தொகையை வழங்குகிறது.

+1, ஐ.டி.ஐயில் முதலாம் ஆண்டு படிக்கும் 2000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ருபாய் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவிபெறும் பொது பிரிவு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பொதுப் பிரிவினர் 65 சதவித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஒ.பி.சி பிரிவினர் மற்றும் மகளிர் 60 சதவித மதிப்பெண்களும், மாற்று திறனாளிகளுக்கு 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கும் 300 மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ் படிக்கும் 200 மாணவர்களுக்கும் ருபாய் 3000 விதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதேபோல் எம்.பி.ஏ படிக்கும் 100 மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு பிளஸ்டு பொதுத் தேர்வில் பொது பிரிவினர் 65 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், ஒ.பி.சி பிரிவினர் மற்றும் மகளிர் 60 சதவித மதிப்பெண்களும், மாற்று திறனாளிகளுக்கு 50 சதவித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கு 15 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 1.7.1984 தேதியன்றோ, அதற்கு பிறகோ, 1.7.1999 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்திருக்க வேண்டும்.ஒ.பி.சி மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் சலுகை உண்டு. தொலைநிலை கல்வி முலம் படிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் தங்களது படிப்புகளில் முதல் ஆண்டு படித்து கொண்டு இருக்க வேண்டும். இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பிப்போர் வேறு இடங்களிலிருந்து உதவித்தொகையை பெறக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழை தகுதி வாய்ந்த அரசு அலுவலரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயரில் தனி வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். ஆன்லைன் முலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கையெழுத்து மற்றும் புகைப்படம் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டி இருக்கும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு அதை பிரின்ட்அவுட் எடுத்து போதிய சான்றுகளின் நகல்களோடு இனைத்து விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் அடிப்படையிலும், மாநில வாரியாகவும், மண்டல வாரியாகவும் தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யபடுவார். அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வாயிலாக உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் போனஸ் பரிசாக வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.14

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபாலில் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.10.14

அனுப்ப வேண்டிய முகவரி:
Sify Technologies limited,
(locl Ess I- Test division),
Plot no B 7, Sector-132,
Noida - 201301 (Uttar Pradesh )

மேலும் விபரங்களுக்கு:

http://www.iocl.com/aboutus/scholarships.aspx

- TNTJ மாணவர் அணி
அப்துல் ஹக்கீம்

28/08/2014

BISMILLAHIR RAHMANIR RAHEEM
# # #உயிர் காக்கும் உன்னத சேவைக்கு உதவி செய்யுங்கள் !! # # # # # ASSALAMU ALAIKKUM....
வெளிநாடு வாழ் இராஜபாளையம் நண்பர்களின் கவனத்திற்கு !!!!
-- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராஜபாளையம் கிளையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து சமுதாய மக்களுக்கும் அவசர ஆம்பலண்ஸ் சேவையை இறையருளால் சிறப்பாக செய்து வருவது தாங்கள் அறிந்த விஷயமே!!.
தற்போது நம்முடைய ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் நம்மால் முன்பு போல் மக்களுக்கு திறம்பட உதவிட இயலவில்லை. மதுரை , நெல்லை போன்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லபட வேண்டிய நோயாளிகள் பெரும்பாலும் ஏழை எளிய கஷடப்படும் மக்களாகவே இருப்பதினால் அவர்கள், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையாற்றக் கூடிய நமது ஆம்புலன்ஸையே நாடி வருகிறார்கள். அந்த நேரத்தில் நமது வாகனம் பழுதடைந்திருந்தால் அவர்கள் மற்ற தனியார் ஆம்புலன்ஸ்களை நாட வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.
தனியார் ஆம்புலன்ஸ்கார்ர்கள் அடிக்கும் கொள்ளையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். நோயாளிகளின் அவசர சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அவர்கள் குடும்பத்தாரிடம் பணங்களை கறந்து வருகின்றனர்.
இந்த அவல நிலை மாறிட.... கஷ்டப்படுவோரின் துயர் நீக்கிட... நமது ஊரில் புதிய ஆம்புலன்ஸ் வாங்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளி நாட்டில் பணி புரியும் சகோதரர்களாகிய நீங்கள் பெருமளவில் பொருளாதார உதவி செய்ய வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"எவரொருவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மனித சமுதாயம் முழுவதையும் வாழ வைத்தவர் போலாவார்" -(அல் குர்ஆன் 5-32)
வங்கி மூலமாக பணம் அனுப்ப விரும்புவோர்களுக்காக.... TAMILNADU THOWHEEDH JAMAATH, ACCOUNT No ; 0957101030766, CANARA BANK, RAJAPALAYAM. ---- நணபர்களே....!
படித்து விட்டு உங்கள் நட்பு வட்டாரத்தில் ஷேர் செய்ய மறவாதீர்கள் . குறிப்பு: நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ள சகோதரர்கள் எங்கள் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால் நேரில் வந்து பெற்றுக் கொள்கிறோம்
எங்கள் மொபைல் எண்: முஹம்மது சஃபீக்- 9994827883. திவான்ஷ - 9942549293. ஜான்பாஷா- 9659799799.

Address

Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when Tntj rajapalayam students wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj rajapalayam students wings:

Share