19/01/2026
பத்திரிகை அறிக்கை
தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக ஒருசில தமிழக இயக்குனர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது...
மோகன் ஜீ இயக்கத்தில் 23 ந் தேதி வெளியாக உள்ள திரௌபதி 2 என்ற திரைப்படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக முன்னோட்ட காட்சியில் தெரிய வருகிறது
இது சம்பந்தமான மோகன் ஜீ கூறும் போது இங்குள்ள முஸ்லீம்களுக்கு எதிரான திரைப்படம் இல்லை முஸ்லிம் மன்னர்களுக்கு எதிரான திரைப்படம் என கூறுகிறார்
இந்த கருத்து எப்படி உள்ளது என்றால் முகலாயர்கள் படையெடுத்து வந்தார்கள் ஆரியர்கள் வருகை புரிந்தார்கள் என வரலாற்று திணிப்புகளை பாசிச கும்பல் பிரச்சாரம் செய்ததோ அதே பார்மூலாவை இயக்குனர் மோகன் ஜீ கையாண்டு திரெளபதி 2 திரைபடத்தின் மூலம் முஸ்லிம் எதிர்ப்பை விதைத்து உள்ளதாக தெரிகிறது..
ஜனவரி 23ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படும் திரெளபதி 2 திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்..
சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக காட்சிகள் இருந்தது என்று நிறைய காட்சிகளை நீக்கிய சென்சார் போர்டு
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக இருப்பதாக கூறி திரைப்படத்தை வெளியிடாமல் செய்த சென்சார் போர்டு
முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட
திரெளபதி 2 திரைப்படத்திற்கு மட்டும் எப்படி அனுமதி சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு..
ஆகவே உடனடியாக திரெளபதி 2 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்..