09/11/2018
நமது பள்ளிக்கு புதிய இரண்டு மாடி ஆய்வகம் கட்டிட வேலை முடியும் தருவாயில் உள்ளது.
இந்த மகிழ்சியான பொழுதில், இப்பள்ளி ஓவிய ஆசிரியர் திரு ஜி. வெற்றி செல்வன் அவர்கள் பள்ளி நுழைவு வாயில் கதவினை புதிதாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்து கொள்ள ரூபாய் 50,000 வழங்கி இருக்கிறார்கள்.
திரு சர்புதீன் ஆசிரியர் அவர்கள் ரூபாய் 10,000 பார்கிங் டைல்ஸ் அமைக்கவும் பள்ளிக்கு வழங்கி உள்ளார்.
இவ்விரு ஆசிரியர்களையும்,
நம் பள்ளி தலைமை ஆசிரியர் திரு வேதையா அவர்களும், நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு வேலாயுதம் அவர்களும்,
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு முருகன் அவர்களும் வாழ்த்தும் நெகிழ்ச்சியான நிகழ்வு...
என்றென்றும் அன்புடன்,
கோபிநாத். ஜி.
முதுகலை ஆங்கில ஆசிரியர்.