டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் இளைஞர் விழித்தெழு இயக்கம் - அழகுபெருமாள்குப்பம்

  • Home
  • India
  • Pudupet-Panruti
  • டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் இளைஞர் விழித்தெழு இயக்கம் - அழகுபெருமாள்குப்பம்

டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் இளைஞர் விழித்தெழு இயக்கம் - அழகுபெருமாள்குப்பம் 🕺🏻சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்!🫂
📘கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!💪🏻
💥சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!💙❤️

02/01/2025

#மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதையே திருமாவளவன் சொல்லியுள்ளார்”
- சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பு

#இந்து பெண்களை மிக மோசமாகவும் , ஆபாசமாகவும் சித்தரிக்கும் மனு ஸ்மிருதி குப்பையை அம்பலப்படுத்தி சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்கள் ஆற்றிய உரையை திரித்து நாடெங்கும் கலவரத்தில் ஈடுபட முயன்ற பாஜக உள்ளிட்ட சனாதன கும்பலை நேருக்கு நேராக களத்தில் சிறுத்தைகள் எதிர்கொண்டனர். அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது வழியில் சனாதன எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றி வன்முறைக்கும்பலின் சதியை முறியடித்தார் தலைவர். போராட்ட களம், தேர்தல் அரசியல் களம் என்று எல்லா களங்களிலும் வென்று வரும் தலைவர், அவருக்கு எதிராக பதியப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றங்களிலும் வென்று வருகிறார்.

மனுஸ்மிருதி குறித்த பேச்சுக்காக மதுரை பேரையூர் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எமது தலைவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பி.வேல்முருகன்,
கடந்த திச.21 அன்று அளித்த தீர்ப்பின் விவரம் இன்று வெளியாகியுள்ளது.

’மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளின் தமிழ் மொழியாக்கத்தை தான் எனது உரையில் பயன்படுத்தினேன். இதில் எனது தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. இந்திய பெண்கள், குறிப்பாக இந்து பெண்கள் குறித்து எந்த தவறான நோக்கத்திலும் பேசவில்லை.’ என்று தலைவர் தரப்பில் தகுந்த ஆதாரங்களுடன் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ’சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்ததில், மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்ட கருத்துகளை மேற்கோள்காட்டி தான் திருமாவளவன் பேசியுள்ளார் என்பது தெளிவாகிறது. அதனை அவர் பொதுவான பேச்சுவழக்கில் பேசியுள்ளார். இந்த விடயத்தில் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவது அவரது நோக்கம் இல்லை என்பதை இந்த தருணத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது’ என்று தீர்ப்பளித்து தலைவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது.

இனியாவது,
#பாஜக கும்பல் திரிபுவாதத்தின் மூலம் வன்முறை செய்வதை கை விட வேண்டும்.
-வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
2.1.2025

2025 - ஆங்கிலப் புத்தாண்டு: -----------------------------------------------------சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாக மலரட்டு...
31/12/2024

2025 - ஆங்கிலப் புத்தாண்டு:
-----------------------------------------------------
சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாக மலரட்டும்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
-------------------------------------------------
2025 ஆம் ஆண்டு "சனநாயகம் தழைத்தோங்கும்" ஒரு புதிய ஆண்டாக மலரட்டும்; சாதி- மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும்;
சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும் என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2024ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று ஒரு மாநில கட்சியாக வலுப்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அத்தகைய அங்கீகாரத்தை எமக்கு வழங்கிய தமிழக மக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

2024ஆம் ஆண்டு சனாதன -சாதிய, மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக அகில இந்திய அளவில் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து 'இந்தியா கூட்டணியை' உருவாக்கியதும்; அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதான சக்திகளின் பெரும்பான்மை பலத்தை உடைத்திருக்கிறோம் என்பதும் கடந்த ஆண்டில் நிகழ்ந்த சிறப்புக்குரிய சாதனைகளாகும்.

அத்துடன், கடந்த ஆண்டு விசிக சார்பில் சனவரி-26 இல் "வெல்லும் சனநாயகம் மாநாடு", அக்டோபர்-2ல் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு" ஆகிய இரண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடுகளை நடத்தினோம் என்பதும்; அவற்றின் மூலம் பரந்துபட்ட அளவில் வெகுமக்களின் நன்மதிப்பைப் பெற்று, அரசியல் களத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதும் குறிப்பிடத் தக்கவையாகும்.

அதே வேளையில், ஃபெஞ்சால் புயலினால், கனமழை மற்றும் வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை,தரும்புரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது. அது வேதனைகள் நிறைந்ததாய் அமைந்தது.

மலரும் புத்தாண்டான 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக

💙💥❤️🎖️🐆21ம் நூற்றாண்டில் வாழும்  #அம்பேத்கர், #தலைவர்_திருமா அவர்கள்...💯
29/12/2024

💙💥❤️🎖️🐆
21ம் நூற்றாண்டில் வாழும் #அம்பேத்கர்,
#தலைவர்_திருமா அவர்கள்...💯

💙💥❤️🎖️🐆
29/12/2024

💙💥❤️🎖️🐆

🎁 கிறிஸ்துவ சொந்தங்கள் அனைவருக்கும் 🎉✨ கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...🎄
25/12/2024

🎁 கிறிஸ்துவ சொந்தங்கள் அனைவருக்கும் 🎉
✨ கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...🎄

💙❤️ வேர்களில் இருந்து வலுப்பெறும் விசிக💥
09/11/2024

💙❤️ வேர்களில் இருந்து வலுப்பெறும் விசிக💥

‘நாங்கள் அதிகாரத்தை பிடிக்க முடியாது, அதை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும்’டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்காக பத்திரிக்கைய...
05/11/2024

‘நாங்கள் அதிகாரத்தை பிடிக்க முடியாது, அதை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும்’

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்காக பத்திரிக்கையாளர்கள் ஜூலி மாரியப்பன் மற்றும் ஜெயா மேனன் அவர்களுக்கு தலைவர் அவர்கள் அளித்த பேட்டி தமிழாக்கம்!

நிருபர் கேள்வி: ஒரு தலித் தலைவராக நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்...?

தலைவர் பதில்: நான் பறையர் சமூகத்திற்கான பிரதிநிதி என்ற தவறான பிம்பம் ஒன்று இருந்து வருகிறது. நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். அனைத்து தமிழ் மக்களுக்காகவும் தான் நான் இக்கட்சியை தொடங்கினேன். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளிலிருக்கும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சமூகம், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக எனது செயல்பாடுகள் இருந்து வருகிறது. நான் ஓர் சாதிக்கான தலைவர் அல்ல, மாறாக இந்த மக்களுக்கானவன், இந்த நாட்டிற்கானவன்.

கேள்வி: கடந்த 25 வருட விசிகவின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா...?

பதில்: எங்கள் எழுச்சியானது, எங்களது வளர்ச்சியை பிரதிபலிக்காமல் இருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. முதல் பத்து வருடங்கள், தேர்தல் அரசியலில் இல்லாமல், ஓர் சமூக பண்பாட்டு இயக்கமாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்பட்டு வந்தோம். தேர்தல் வெற்றிகள் இல்லாமல் இல்லை ஆனால் எங்கள் மீதான மதிப்பீடு குறைவாகவே இருந்து வந்தது. எங்களின் பேரம் வலிமை குறைவானதாக உள்ளது. 2011ல் முதல் முறையாக 10 தொகுதிகளில் களம் கண்டோம். இப்பொழுது 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் என வளர்ந்து வருவதில் நிச்சயம் மகிழ்ச்சிதான் ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

கேள்வி: விஜய்யின் புதிய கட்சி, தவெக உள்ளிட்ட புதிய கட்சிகள் தலித் வாக்குவங்கியில் ஓர் பங்கிற்காக குறி வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்...?

பதில்: விஜய் வேகமாக ஓடலாம், ஆனால் நாங்கள் ஏற்கனவே கடந்துள்ள தூரம் அதிகம். அவர் எங்களுக்கு போட்டி இல்லை. எங்கள் வேரானது சமூக பண்பாட்டு தளங்களில் நீள்கிறது. தேர்தல் அரசியல் எங்கள் பிரதான இலக்கு அல்ல.

கேள்வி: விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா அவர்கள் ஆட்சியில் பங்கு பற்றிய விவாதத்தை தொடங்கியுள்ளதை பற்றிய உங்கள் கருத்து...?

பதில்: இது புது முழக்கமொன்றும் அல்ல. மாறாக 1999 பொதுத்தேர்தலில் நாங்கள் முதல் முறை அடியெடுத்து வைத்தபோது, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்’ மற்றும் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கங்களே எங்களது கோரிக்கையாக இருந்தது. ‘நாங்கள் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது, அதை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும்’. ஓர் வலிமைமிகு அரசியல் சக்தியாக உருமாறும் வரையில் அதிகாரத்தில் பங்கு கூட கேட்க முடியாது. ஒரு கூட்டணியில் தொடர்ச்சியாக வாக்குகளை பெற்றுத்தர முடிகிறது என்று ஊர்ஜிதமாகும்போது மட்டுமே ஓர் அரசியல் சக்தியாக பார்க்கப்படுவோம்.

கேள்வி: 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கோருவீர்களா...?

பதில்: தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெற்றுவிட்டோம் ஆனால் தமிழகம் தழுவிய அளவில் எங்களது வாக்கு வங்கியை இன்னும் நிரூபிக்கவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவதால், 2% வாக்கு வங்கி என்று சொல்லப்படுகிறது. எப்படி அதிகாரத்தில் பங்கை கோருவது? வட தமிழகத்திலுள்ள 70 தொகுதிகளில் எங்களுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் எங்களது வாக்கு வங்கியை மற்ற கட்சிகளின் வேட்பாளருக்கு பரிமாற்றம் செய்கிறோம். இன்னும் அதிக தொகுதிகளில் களம் கண்டால் மட்டுமே, எங்கள் வாக்கு வங்கி உயரும்.

கேள்வி: கூட்டணி தலைமை ஒத்துழைக்காதா...?

பதில்: கூட்டணியின் தலைமை வலிமை இழக்கும்போது, அதாவது, தலைமையில் குழப்பங்கள், அல்லது, எதிரணியினரின் ஒன்று திரள்தல் போன்ற சூழ்நிலை ஏற்படும்போது மட்டுமே இது சாத்தியப்படும். இப்பொழுது தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை.

கேள்வி: அஇஅதிமுக கூட்டணிக்கு நீங்கள் அணி மாறினால்...?

பதில்: நாங்கள் அவர்களுடன் இணைவதால் அவர்கள் வென்று விடுவார்கள் என்று சொல்லுமளவில் அரசியல் சூழல் இல்லை அதற்கான தரவுகளும் இல்லை. தவெகவுடனும் இதே நிலைமைதான்.

கேள்வி: அஇஅதிமுக மற்றும் தவெகவுடன் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக நிராகரிக்கறீர்களா...?

பதில்: நாங்கள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். வெளியே வருவதற்கான தேவை எழவில்லை.

கேள்வி: டிசம்பர் 6 ம் நாள், ஒரு நிகழ்ச்சியில் விஐய்யுடன் ஒரே மேடையில் அமரப்போகிறார்கள். அதைப்பற்றி…?

பதில்: ஒரு வருடத்திற்கும் முன்பாகவே, அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஓர் நூலை தமிழக முதல்வர் வெளியிட்டு, அதன் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல்வருக்கு பதில் விஜய் அவர்கள் பங்கேற்பார் என்று அண்மையில் தான் அறிந்தேன். மாற்று கட்சி தலைவருடன் ஓரே மேடையில் அமர்வதால் மட்டும் அது கூட்டணி என்று பொருளாகாது.

கேள்வி: சமீபத்தில் நடந்தேறிய உங்கள் தலைமையிலான மது ஒழிப்பு மாநாடு மற்றும் விக்கிரவாண்டியில் நடைப்பெற்ற விஜய் அவர்களின் முதல் மாநாடு. எப்படி பார்க்கிறீர்கள்...?

பதில்: ஓர் திரை பிரபலத்தினால் பெரிய மாற்றங்களை கொண்டு வர இயலாது. மகோரா காலகட்டம் வேறு ஏனெனில் அப்பொழுது அரசியல் குறித்த விழிப்புணர்வு மிக குறைவு. இன்று வெறும் புகழ் கொண்டு ஆட்சி அமைத்திட முடியாது. ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 35 சதவிகிதம் வாக்குகள் தேவை. இவருக்கு அது உடனடியாக சாத்தியமில்லை. தனது முதல் தேர்தலின் பிறகு விஜயகாந்த் அவர்கள் தடுமாறினார். மகோரா அவர்களின் வாக்குகளின் மூலமே ஜெயலலிதா முதல்வரானார். தானாக தனி கட்சி தொடங்கி, தலைவராகி ஆட்சியை கைப்பற்றவில்லை. அக்கட்சி ஏற்கனவே வலிமையான ஒன்றாக இருந்தது. அதன் தலைமை பொறுப்பில் தன்னை நிலைநிறுத்தி கொண்டதே அவரது சாதனை. வட தமிழகத்தை குறி வைத்து விஜய் அவர்கள் ஓர் மாநாட்டை நடத்தி இருக்கலாம் ஆனால் பெரிதாக பலன் இருக்காது. எத்தனை புதிய கட்சிகள் தொடங்கப்பட்டாலும், திமுக, அதிமுக, இடதுசாரிகளுக்கே உரிய விசுவாசிகளின் வாக்குகள் சிதற வாய்ப்பில்லை.

கேள்வி: குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பற்றி விஜய் அவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளை பழைய பஞ்சாங்கம் என்று கூறியுள்ளீர்களே...?

பதில்: திரைத்துறையிலும் இதே சிக்கல் உள்ளது. விஜய் எனும் நடிகர் தன் சொந்த முயற்சியில் வரவில்லை. அவரது தந்தையார் ஓர் இயக்குனர்.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு ஆறாவது முறையாக அரியணை ஏற்றியிருக்கிறார்கள்.

கேள்வி: தமிழ் தேசியம் vs திராவிடம். உங்கள் பார்வை...?

பதில்: தமிழ் தேசியமானது திராவிடம் எனும் சித்தாந்தத்தில் இருந்தே பிரசவித்தது, தாயும் சேயும் போல. தனித்தனியாக இயங்கலாம், செயல்படலாம் ஆனால் கரு ஒன்று தான்.

கேள்வி: திமுகவிற்கும் பாஜகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக அதிமுக குற்றம்சாட்டுகிறதே...?

பதில்: இது அரசியலுக்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

கேள்வி: அதிமுகவுடனான கூட்டணிக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

பதில்: புதிய கூட்டணியை அமைப்பதற்காக நான் அங்கம் வகிக்கும் கூட்டணியை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இரண்டு கூட்டணிகளின் உருவாக்கத்திலும் எனது முக்கிய பங்குண்டு.

கேள்வி: தமிழகத்தில் அரசுகள் தலித் நலனுக்காக போதுமானளவு பணியாற்றியிருக்கிறார்களா? சில பகுதிகளில் கட்சி கொடிகம்பம் நாட்ட இடையூறு இருப்பதாக விசிக தொண்டர்கள் போராட்டம் செய்தனரே?

பதில்: ஒரு ஆட்சியிலேயே பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. நானே முதலமைச்சர் ஆனாலும் இது தொடரும். கொடிகம்பங்கள் நட முடியாமல் போவதில் எனக்கும் வலி உண்டு. இதுபோன்ற காரணங்களை மேற்கோள் காட்டி கூட்டணி விட்டு விலகினாலும் சரி, வேறொரு கூட்டணிக்கு இடம் பெயர்ந்தாலும் சரி, இப்பிரச்சனை தொடரும்.

கேள்வி: பாமக சாதி கட்சி என்றும் அவர்களோடு எப்பொழுதும் கைக்கோர்க்க மாட்டோம் என்று கூறுகிறீர்கள்...?

பதில்: பாஜக மற்றும் பாமக அங்கம் வகிக்கும் எந்த கூட்டணியிலும் நாங்கள் இணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளோம்.

கேள்வி: தமிழகத்தில் சாதி அரசியல் வளர்த்தெடுக்கப்படுகிறதா...?

பதில்: ராமதாஸ் அவர்கள் தமிழகத்தில் ஒரு சாதிய கலாச்சாரத்தை நிறுவினார். அவர் தொடங்கிய வன்னியர் சங்கமானது இட ஒதுக்கீடை பெறுவதற்கு, வன்முறை மற்றும் வாக்கரசியல் அழுத்தங்களை ஆயுதங்களாக பயன்படுத்தியது. இரட்டை கொடிகளை ஏற்றும் பழக்கத்தை அறிமுகம் செய்தார் - ஒன்று சாதி சங்க கொடி, மற்றொன்று கட்சி கொடி. இவரது இச்செயல் மற்றவர்களையும் சாதிய சங்கங்களை அரசியல் இயக்கங்களாக மாற்ற தூண்டியது. மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் பெரியாரின் இயக்கத்தின் காரணமாக தமிழகத்தில் சாதிப்பெயர்கள் பயன்பாடு இல்லாமல் இருந்தது. இப்பொழுது தலித் மற்றும்
தலித்தல்லாதோர் மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில், இப்பழக்கம் மீண்டும் முளைத்திருக்கறது.

கேள்வி: 2026 தேர்தலிலும் விசிக-திமுக கூட்டணி உறுதியாக தொடருமா?

பதில்: கேள்விக்கே இடமில்லை. அதிகாரத்தில் பங்கிற்கான எந்த ஒரு சூழ்நிலையும் இப்பொழுது எழவில்லை. ஆனால் அதற்காக எங்களது கோரிக்கையை கைவிடவில்லை. எங்களது பிரதான கொள்கைகளில் ஒன்றாக அது விளங்குகிறது. நேரம் கனியும் வரையில் இவ்விடயத்தை மென்மையாகவே அணுகுவோம்.

கேள்வி: அதிகார பங்கீட்டிற்கான கோரிக்கை ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சூழலில் அதை குறித்தான விஜய்யின் முன்னெடுப்பு ஏன் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்?

பதில்: அவர் ஆட்சி அதிகாரத்தை பங்கீட்டு கொள்ள முடிவெடுத்திருப்பது ஓர் ஜனநாயக வழிமுறைதான் என்றாலும்கூட இதை அணுக ஓர் முறை இருக்கிறது. இது திரைமறைவில் பேசப்பட்டு, ஒரு முடிவு எட்டப்பட்டதன் பின்னர் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு பேச்சிற்கு, பாமக விஜய்யுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் செல்ல முடியாது. அஇஅதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் சீமானால் இருக்க முடியுமா? தவெக ஒரு புதிய கட்சி. 25 வருட அனுபவம் உள்ள ஓர் கட்சி எப்படி அவர்கள் தலைமையை ஏற்று இணைய முடியும்? அரசியலில் சீமான் அவர்கள் 15 வருடங்களாக இயங்கி வருகிறார். நாங்கள் 25 வருடங்கள். பாமக 35. யார் அவர்களுடன் இணைவார்கள்? அவர்கள் தலைமையை ஏற்று சிறிய கூட்டாளியாக செயல்படுவார்களா? இது எதுவுமே பேசப்படாமல் பொதுவெளியில் அறிவிப்பு வெளியிடுவது என்பது ஓர் வியாபார உத்தி போன்றது. தள்ளுபடி போல.

--- Thol.Thirumavalavan

02/11/2024

Address

Thokuppu Veedu Theru/. Kuppam
Pudupet-Panruti
607101

Website

Alerts

Be the first to know and let us send you an email when டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் இளைஞர் விழித்தெழு இயக்கம் - அழகுபெருமாள்குப்பம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share