பாண்டிபத்திரம்

பாண்டிபத்திரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பாண்டிபத்திரம், Landmark & historical place, Pudukkottai.

http://maps.google.co.in/maps?q=Pandipathiram,+Pudukkottai,+Tamil+Nadu+614618&hl=en&ll=10.069685,79.06251&spn=0.021761,0.033603&geocode=FVyqmQAdNWi2BA&hnear=Pandipathiram,+Pudukkottai,+Tamil+Nadu&t=h&z=15

15/09/2018
பாலி- 12/09/2018 /2
12/09/2018

பாலி- 12/09/2018 /2

பாலி- 12/09/2018
12/09/2018

பாலி- 12/09/2018

17/08/2017

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பாண்டிபத்திரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பாண்டிபத்திரம் கிராமத்தார்களால் நடத்தப்படும் மாபெரும் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் 23.08.2017, 24.08.2017 தேதிகளில் நடைபெறவுள்ளது. பந்தயத்தை காண அணைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மற்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

#பரிவள்ளல்இளைஞர்நற்பணிமன்றம் #பாண்டிபத்திரம் #

16/07/2017
எறுபூட்டுதல்!....
22/04/2015

எறுபூட்டுதல்!....

திரைகடல் ஓடித்தான் திரவியம் தேடணுமா?"கல்யாணம் பண்ணிப்பார்""புது வீடு கட்டிப்பார்" *"வெளிநாடு வந்துப்பார்"......*இனிமேல் ...
28/03/2015

திரைகடல் ஓடித்தான் திரவியம் தேடணுமா?

"கல்யாணம் பண்ணிப்பார்"

"புது வீடு கட்டிப்பார்"
*
"வெளிநாடு வந்துப்பார்"......
*

இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.

ஆனாலும் இது ஒரு மாய வலை...

*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.

வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.

*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,

வரவு, செலவு இவையெல்லாம்,

ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.

*
வலிக்கும்...

ஆனாலும் சொல்ல முடியாது.

அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.

யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

*
அழுவோம்.....

ஆனாலும் யாருக்கும் தெரியாது.

ஏனென்றால்,

இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

*
வலியென்றால் தோளில் சாயவும்,

சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,

அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கண் எட்டும் தூரம் வரை,

தனிமை மட்டும் தான் மிஞ்சும்....

*
நன்றாக பசிக்கும்.

நிறைய சாப்பிடவும் செய்வோம்.

ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....

ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்

ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

*
நியாயமாக பார்த்தால்,

ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது

ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..

ஆனாலும், அப்படி யாரும்

கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.

தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??

என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

*
ஆனாலும், குடும்பத்துல் யாராவது ஒருத்தருக்கு

2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.

நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....

"என்னப்பா, வெளி நாடு போன உடனே

எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........

அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே

பதில் சொல்ல வேண்டும்.....!!

*

"மனதின் காயங்களை மறைக்கிறேன்.

ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

****************************************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா

ம்ஹூம்... ஏன்னு தெரியல....

சும்மா சொல்லணும் போல தோணிச்சு

சிரிச்சிக்கிட்டே.... ஸ்மைலி..!!

------

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை

எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......

இன்னும் இவர் போன்று

எத்தனை உடன்பிறப்புகளோ... நண்பர்களோ....

தெரியவில்லை...

ஆஹா....அமெரிக்க வாழ்க்கை!அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவின், ச...
19/02/2015

ஆஹா....அமெரிக்க வாழ்க்கை!


அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருகிறார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=38783&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

ஆஹா....அமெரிக்க வாழ்க்கை!

06/12/2014

சமூகம் :

* வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துது.

* வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது.

* குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...

* ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை கண்டு சிலிர்க்கும்.

26/10/2014

(சுட்டது....)
சிரிக்க மட்டுமே.....
வீடு கிடைக்கறது அவ்ளோ கஷ்டம் தெரியுமா?.....
ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.
அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,”ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?”வீட்டின் உரிமையாளர் சொன்னார்,”அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.

Address

Pudukkottai
614618

Alerts

Be the first to know and let us send you an email when பாண்டிபத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share