SDPI 34வது வார்டு புதுக்கோட்டை

SDPI 34வது வார்டு புதுக்கோட்டை ஊழல் இல்லா உள்ளாட்சி நேர்மையான நல்லாட்சி

Social Democratic Party of India - SDPI

தமிழகத்தின் இன்றைய தலைப்பு செய்தி திமுக - SDPI கூட்டணிவெல்லட்டும் வெல்லட்டும் SDPI திமுக கூட்டணி வெல்லட்டும்..!
28/02/2026

தமிழகத்தின் இன்றைய தலைப்பு செய்தி

திமுக - SDPI கூட்டணி

வெல்லட்டும் வெல்லட்டும் SDPI திமுக கூட்டணி வெல்லட்டும்..!



28/02/2026

திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது எஸ்.டி.பி.ஐ கட்சி

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திமுக குழுவினரை சந்திக்க அண்ணா அறிவாலயம் வருகிறார்

27/02/2026
27/02/2026

| முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலுக்கு SDPI கட்சி தலைவர் நெல்லை முபாரக் பாராட்டு!

| | |

SDPI கட்சி மகளிர் அணியின் (WIM) 4 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி💐💐மாவட்ட, தொகுதி,கிளை  நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு தரு...
27/02/2026

SDPI கட்சி மகளிர் அணியின் (WIM) 4 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி💐💐

மாவட்ட, தொகுதி,கிளை
நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தங்கள் இல்லங்களில் உள்ள சகோதரிகளையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ரிஸ்வானா பேகம் மாவட்ட தலைவர்
SDPI மகளிர் அணி (WIM)

23/04/2025

ஒன்றிய அரசே!
அரசியலமைப்பு விரோத வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ ரத்து செய்!

1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி இறை இல்லங்களை காத்திடு!

என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் மாபெரும் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு!

நாள் : 25.04.2025 , வெள்ளிக்கிழமை
நேரம் : 5.30 pm

முகநூல் நேரலை:

www.fb.com/sdpitamilnaduofficial

youtube நேரலை

www.youtube.com/SDPITamilnadu

ஒன்றிய அரசே!அரசியலமைப்பு விரோத வக்ஃபு திருத்த சட்டம் 2025ஐ ரத்து செய்!1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்ப...
22/04/2025

ஒன்றிய அரசே!
அரசியலமைப்பு விரோத வக்ஃபு திருத்த சட்டம் 2025ஐ ரத்து செய்!
1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இறையில்லங்களை காத்திடு!!

SDPI கட்சி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் நடத்தும்
"வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு"

நாள்: 25 ஏப்ரல் 2025, வெள்ளிக்கிழமை
இடம்: மர்ஹூம் மலையூர் அப்துல் வஹாப் திடல் (சின்னப்பா பூங்கா), புதுக்கோட்டை

அணிதிரள்வோம்!
கோரிக்கை வென்றிட கரம் கோர்ப்போம்!!
..அழைக்கிறது...
SDPI கட்சி - புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்.

கர்நாடக அரசை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்...
09/03/2025

கர்நாடக அரசை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

---------------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கர்நாடக அரசை முன்மாதிரியாகக் கொண்டு, எதிர்வரும் பட்ஜெட் அறிவிப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை நிதி ஒதுக்கீட்டுடன் தமிழக அரசு அறிவிப்புச் செய்திட வேண்டும்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா இந்த ஆண்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான பல முக்கிய திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில், வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதுபோல, முஸ்லிம் சமூகத்திற்கும் ரூ.2 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் திட்டம், சிறுபான்மை சமூக பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான காலியிடங்களில் இந்த நிதி ஆண்டில் 16 பெண்கள் கல்லூரிகள், பள்ளிவாசல் இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவத் தொகை, வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.150 கோடி, முஸ்லிம் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ரூ.50 லட்சம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய ஐடிஐ கல்லூரி, முஸ்லிம் பெண் மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி உள்ளிட்ட பல திட்டங்கள் அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைப் புறந்தள்ளி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு சித்தராமையா அரசு பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற விளிம்புநிலை முஸ்லிம் சமூக மக்களின் நலனுக்கான திட்டங்களைத் தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அவர்களின் மேம்பாடுகளுக்கான திட்ட அறிவிப்புகள் இடம்பெறுவது இல்லை. வழிபாட்டுத் தலங்களைப் பழுது பார்ப்பதற்கான அறிவிப்பைத் தவிர்த்து வேறு எந்த விதமான சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லை. இது சிறுபான்மை சமூகங்கள் மீதான சமூக நீதி அரசின் அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது. தர்காக்கள், பள்ளிவாசல்களைப் புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக அறிவிப்பது ஏற்புடையதல்ல. அதையும் தாண்டி ஏராளமான செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளன என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதால், சிறுபான்மை சமூக மக்களுக்காகத் தனி பட்ஜெட்டை அரசு வெளியிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சூழல், தொழில் ஆகியவற்றை மேம்படச் செய்யும் அறிவிப்பாக அது இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றது. அதற்காக அரசை வலியுறுத்தி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது.

சிறுபான்மை சமூக மக்களின் 69 சதவீத வாக்குகளைப் பெற்ற சமூகநீதி அரசு, கடந்த 4 ஆண்டுகளாக அந்த சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த திட்டத்தையும், அறிவிப்பையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்யாதது சிறுபான்மை சமூக மக்களிடையே இந்த அரசு குறித்த வெறுமையையே ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண் பட்ஜெட்டைப் போன்று, சிறப்புக் குழுக்களை அமைத்து, கர்நாடக அரசைப் போன்று, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை, நிதி ஒதுக்கீட்டுடன் தனி பட்ஜெட் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu M. K. Stalin Thangam Thenarasu

நேரடியாக கேட்கிறேன்...பாசிச பாஜகவின் எதிர்ப்பில் இஸ்லாமியர்கள் இல்லையா?ஏன் இந்த அரசியல் நாடகம்...திமுக தனது அதிகாரத்தை த...
18/02/2025

நேரடியாக கேட்கிறேன்...

பாசிச பாஜகவின் எதிர்ப்பில் இஸ்லாமியர்கள் இல்லையா?

ஏன் இந்த அரசியல் நாடகம்...

திமுக தனது அதிகாரத்தை தக்கவைக்க அரசியல் செய்கிறது என்றால், அதன் கூட்டணிகளே... நீங்கள் அதிகாரத்தை அல்ல, இருப்பை தக்க வைக்கவா இந்த அரசியல் நாடகம் செய்கிறீர்கள்

ஆம் இது ஆர்ப்பாட்டம் அல்ல, அரசியல் நாடகம்... திராவிட முன்னேற்றக் கம்பெணிகளின் அரசியல் நாடகம்...

ஏனெனில்?

வக்ஃப் சட்ட திருத்த போர்வையில் பல ஏக்கர் நிலங்களை அபகரித்து இந்நாட்டில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது பாசிசம்

நாடே கொதித்து எழுந்து போராட்டம் வெடிக்கிறது...

ஆனால், இங்கோ அப்படி ஒரு கீரல் கூட இல்லா வண்ணம், வேறு ஒரு கோரிக்கையில் போராட்டம் நடக்கிறது...

இது என்ன மாதரியான டிசைன்...

பதில் கொடுக்கிறோம் என்ற போர்வையில் சப்பை கட்டு கட்ட வேண்டாம்...

உண்மையில் நம் நிலத்தின் மீதும், இனத்தின் மீதும் அக்கறை இருந்தால் Atleast கிடைக்கும் மேடையிலாவது, ஒரு பேச்சிக்கு வக்ஃப் சட்டத்திற்கு எதிராக முழங்காத திமுகவிற்கு நினைவூட்டவாவது செய்யுங்கள்...

(குறிப்பு: திமுக தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததே என அண்ணன்மார்கள் வருவீர்கள், அவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன், திமுக+, இப்போதுள்ள கோரிக்கைக்கும் பாராளுமன்றத்தில் எதிர்வலைகள் எழத்தான் செய்தன.. அப்படி இருந்தும் ஏன் இந்த போராட்டம் என எங்களாலும் கேட்க முடியும், அப்படி கேட்பது அரசியல் அறிவல்ல...)

மத்திய அரசு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல...
30/01/2025

மத்திய அரசு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தல்!

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI 34வது வார்டு புதுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share